பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1. தனிநபர் வணிகம் தொடங்க
அ. குறைந்தது 10 பேர் தேவை
ஆ. குறைந்தது 7 பேர் வேண்டும்
இ. ஒருவர் மட்டும் போதும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2. பங்குச் சந்தை இறக்கம் காணும் என்று நினைத்துச் செயல்படுபவர்
அ. காளை
ஆ. கரடி
இ. வாத்து
3. கூட்டுறவு அமைப்பில் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
அ. 10
ஆ. 15
இ. 25
4. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
அ. 1873
ஆ. 1875
இ. 1872
5. இன்ஷூரன்ஸ் என்பது
அ. முதலீடு
ஆ. காப்பீடு
இ. முதலீடு மற்றும் காப்பீடு கலந்தது
6. ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியில் சிறுவர்களைச் சேர்க்க முடியாது
அ. சரி
ஆ. தவறு

7. இந்தியாவில் நிதி மற்றும் கடன் கொள்கைக்குப் பொறுப்பாகும் மத்திய வங்கி
அ. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஆ. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா
இ. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
8. ஆபரண தங்கத்தின் விலை எதைச் சார்ந்திருக்கிறது?
அ . வடிவமைப்பு
ஆ. தங்கத்தில் கலந்திருக்கும் இதர உலோகங்களின் அளவு
இ. தூய்மை
ஈ . மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும்
9. நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்குத் தரக்குறியீடு வழங்குவது
அ. கேர் மற்றும் கிரைசில் போன்ற தரக்குறியீடு நிறுவனங்கள்
ஆ. சிபில் மற்றும் ஈக்விபேக்ஸ் போன்ற கடன் தகவல் நிறுவனங்கள்
10. பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டில் ஓராண்டில் குறைந்தபட்ச முதலீடு
அ. ரூ.5,000
ஆ. ரூ.1,000
இ. ரூ.500
- சி.சரவணன்
சரியான விடை:
1. இ. ஒருவர் மட்டும் போதும்
2 . ஆ. கரடி
3. இ. 25
4. ஆ. 1875
5. ஆ. காப்பீடு
6.ஆ. தவறு
7. ஆ. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா
8. ஈ . மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும்
9. அ. கேர் மற்றும் கிரைசில் போன்ற தரக்குறியீடு நிறுவனங்கள்
10. இ. ரூ.500