Published:Updated:

ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

Published:Updated:
ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

ரபரப்பாக நம் கேபினுக்குள் வந்த ஷேர்லக், சென்னையில் நடைபெற உள்ள பிசினஸ் & ஃபைனான்ஷியல் கான்க்ளேவ் நிகழ்ச்சிக்கான பக்க வடிவமைப்பைப் பார்த்து, “கலக்குங்க, கலக்குங்க...” என உற்சாகப்படுத்தினார். கஜா புயலுக்குப் பயந்து, மழை கோட்டுடன் வந்திருந்த அவருக்கு இஞ்சி டீ தந்து வரவேற்றோம். அதை வாங்கிப் பருகிக்கொண்டே சிக்னல் கொடுத்தார். நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

எம்.எஸ்.சி.ஐ, அதன் இந்திய இண்டெக்ஸிலிருந்து டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல  பங்குகளை நீக்க என்ன காரணம்? 

“எம்.எஸ்.சி.ஐ எனப்படும் மார்கன் ஸ்டேன்லி கேப்பிட்டல் இன்டர்நேஷனல் நிறுவனம், அதன் இண்டெக்ஸ்கள் குறித்த அரையாண்டு மறுஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் எம்.எஸ்.சி.ஐ இந்தியா இண்டெக்ஸிலிருந்து சீமன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அதன் ஸ்மால்கேப் இண்டெக்ஸில் சையன்ட், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், லெமன்ட்ரீ ஹோட்டல்ஸ், பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ், வெஸ்ட் லைஃப் டெவலப்மென்ட், ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் மற்றும் மஹிந்திரா லாஜிஸ்ட்டிக்ஸ் உள்ளிட்ட ஏழு பங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

ஆனால், பால்மர் லாறி & கோ, பன்சாலி இன்ஜினீயரிங், பாம்பே டையிங் மேனுஃபேக்ஸரிங் & கோ, தீபக் ஃபெர்ட்டிலைஸர்ஸ் & பெட்ரோ கெமிக்கல்ஸ், கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ், ஜி.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ், கிரீன்ப்ளை இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி, இந்தியாபுல்ஸ் வென்ச்சர்ஸ், இன்ஃபிபீம் அவென்யூஸ், ஜே.குமார் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ், ஜெட் ஏர்வேஸ் இந்தியா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், லார்சன் அண்டு டூப்ரோ இன்ஃபோடெக், ஓரியன்ட் சிமென்ட், ராம்கோ இண்டஸ்ட்ரீஸ், ரானே ஹோல்டிங்ஸ், ஷிப்பிங் கார்ப்பரேஷன், சின்டெக்ஸ் பிளாஸ்டிக்ஸ், சியாராம் சில்க் மில்ஸ்,  சோமெனி செராமிக்ஸ்,, தமிழ்நாடு நியூஸ் பிரின்ட், டாடா காபி, டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், டி.வி.எஸ் ஸ்ரீசக்ரா, விஏ டெக் வாபேக் உள்ளிட்ட 49 பங்குகள் ஸ்மால் கேப் இண்டெக்ஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.”

அசோக் லேலாண்ட் பங்கின் விலை திடீரென குறைந்தது ஏன்? 

“அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து வினோத் தாசரி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அசோக் லேலாண்ட் பங்கு விலை குறைந்தது. கடந்த புதன் கிழமையன்று ஓப்பன் பொசிஷன்கள் கான்ட்ராக்ட்டுகள் 19,018-லிருந்து 30,218 அளவுக்குச் சென்றதை எஃப் அண்டு ஓ கண்டது.  பங்கின் விலை வர்த்தகத்தின்  இடையே 10% வரை இறக்கம் கண்டது.”

பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

“பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் செய்யப்படும் அந்நிய முதலீடு சமீபகாலமாக மந்தமாகி வரும் நிலையில், வெளிநாட்டு  முதலீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கை களை மத்திய நிதி அமைச்சகமும், செபி அமைப்பும்  மேற்கொண்டு வருகின்றன.

ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை காரணமாக, வெளிநாட்டு ஃபண்ட் மேனேஜர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கடன் பத்திரங்களை விற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

சர்வதேச நிகழ்வுகள் மற்றும் நிச்சயமற்ற மேக்ரோ பொருளாதாரம் போன்றவை ஒருபுறம் இருந்தாலும், கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் வங்கி கொண்டுவந்த சில கட்டுப்பாடுகள்தான், இதற்கு முக்கியக் காரணம் என்ற எண்ணம் நிதிச் சந்தையில் நிலவுகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டு  முதலீட்டாளர்களுக்கான காப்பாளர் களாகச் சேவையாற்றும் வெளிநாட்டு வங்கிகளுடன், நிதியமைச்சகம் இந்த வாரம் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் இது தொடர்பான விதிமுறைகளை மறுஆய்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனிடையே செபியும், வெளிநாட்டு வங்கி களுடன், இது தொடர்பாக விரைவில் ஒரு கூட்டத்தைக் கூட்டவுள்ளது. அதில், என்.ஆர்.ஐ முதலீடுகள், வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கான முதலீட்டு விதிமுறைகளில் நிலவும் குழப்பங்களைத் தெளிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.  மேலும், இது தொடர்பாக வெளிநாட்டு வங்கிகள் சொல்லும் ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் ஏற்று விதிமுறைகளில் மாற்றம் செய்ய செபி முன்வரும் எனத் தெரிகிறது.”

வங்கிகளின் வாராக் கடன் குறித்த தகவல்களை செபிக்கு அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்தது சரியா?

“வங்கிகளின் கடந்த ஆண்டு  வாராக் கடன்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய வர்கள் குறித்த தகவல்களை, ரிசர்வ் வங்கியிடம் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி கேட்டிருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி அந்த விவரங்களை அளிக்க மறுத்துவிட்டது. அந்த விவரங்களை அளித்தால், அது பலருக்கும்  தெரியும் வகையில் பரவலாகக் கசிந்துவிடும். அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தொழில் பாதிப்படையும். எனவே, அந்தத் தகவல்களை அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. இது தொடர்பாக செபி தரப்பில் இரண்டு அதிகாரிகள் ரிசர்வ் வங்கியை அணுகியதாகக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்குப் பின்னரும், கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய பெரிய நிறுவனங்களின் பட்டியலை அளிக்க மறுப்பது ஏன் என்று கேட்டு, மத்தியத் தகவல் ஆணையம், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்தே செபி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.”

 விரைவில் வங்கிகளின் சி.ஆர்.ஆர் விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று சொல்கிறார்களே! 

“வங்கிகளிடையே பணப்புழக்கத்தை அதிகரிப் பதற்காக, ரொக்கக் கையிருப்பு விகிதம் எனப்படும் சி.ஆர்.ஆர் விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கலாம் எனத் தெரிகிறது.   சி.ஆர்.ஆர் விகிதம் அல்லது ரிசர்வ் வங்கியில் வங்கிகள் டெபாசிட்டு செய்துள்ள தொகையில் ஒரு  சதவிகிதத்தைக் குறைத்தாலே, அதன் மூலம் 1.2 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்துக்கு வந்துவிடும்.

வங்கிகள், தாங்கள் வைத்திருக்கும் பணத்தில் 4% தொகையை ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் கட்டாய விதிமுறையாகும். இதன்மூலம், வங்கிகளின் பணம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய், எவ்வித வட்டி வருவாயையும் ஈட்டாமல் ரிசர்வ் வங்கியில் முடங்கிக் கிடக்கிறது.

அதேசமயம், மத்திய அரசோ, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய இருப்புத் தொகை குறித்த விதிமுறைகளைச் சற்றுத் தளர்த்தினால், வங்கிகளே கடன் வழங்குவதில் தாராள முடிவை எடுக்க இயலும் எனக் கருதுகிறது.

இந்தச் சூழலில்தான் ரிசர்வ் வங்கி, சி.ஆர்.ஆர் விகிதத்தைக் குறைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தகவல். அப்படி நடந்தால் வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.”

யெஸ் பேங்க் பங்கு விலை ஏன் குறைந்தது?

‘‘யெஸ் பேங்கின் நிர்வாகம் சாராத  சேர்மன்  அசோக் சாவ்லா பதவி விலகியதையடுத்து அதன் பங்கு விலை ஒரேநாளில்  வர்த்தகத்தின் இடையே 9% திடீர் சரிவு கண்டது. யெஸ் பேங்க் பங்கு விலை 206 ரூபாயிலிருந்து ஒரே நாளுக்குள் 9% வரை குறைந்து, அன்றைய நாளின் இறுதியில் 7.42% என்ற அளவுக்குக் குறைந்ததுடன் நிலைத்தது. 

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் சாவ்லாவின் பெயரும் இடம்பெற்றிருந்ததே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் என்.எஸ்.இ-யின் தலைவராகவும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் இடம்பெற்றிருப்பதால் ஏற்பட்ட கருத்து வேற்றுமையும் இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இது அவரது தனிப்பட்ட முடிவு என்றும், ஒருவிதத்தில், வங்கிக்கான ஒரு புதிய தொடக்கமாக இந்த ராஜினாமா இருக்குமென்றும் கூறப்படுகிறது.

யெஸ் பேங்கின் எம்.டி மற்றும் சி.இ.ஓ-ஆக இருந்த ராணா கபூர் ராஜினாமாவுக்கு அடுத்து அவருக்குப் பதில் புதியவரை நியமிக்கும் செயல்பாட்டில் வங்கி இருக்கும் நிலையில் அதன் சேர்மன் இப்போது பதவி விலகி இருப்பது பங்கு முதலீட்டாளர் களைக் கலங்க வைத்துள்ளது.’’

வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்களில் லிக்விட்டி பிரச்னை எதுவும் இல்லை எனச் சொல்லியிருக்கிறாரே எஸ்.பி.ஐ சேர்மன்?

‘‘நவம்பர் 19-ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. இதில்,  வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்களில் (என்.பி.எஃப்.சி) நிலவும் பிரச்னைகள் குறித்து ஆர்.பி.ஐ கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எஸ்.பி.ஐ சேர்மன் ரஜ்னிஷ் குமார், என்.பி.எஃப்.சி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர், வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்களில் லிக்விட்டி பிரச்னை எதுவுமில்லை என்று சொல்லியிருக்கிறார். அந்த நிறுவனங்கள் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளின்படி, பணத்தை முதலீட்டாளர்களுக்குத் திரும்ப அளித்து வருகிறார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்.

என்.பி.எஃப்.சி நிறுவனங்களுக்கு உதவும்விதமாக எஸ்.பி.ஐ, ரூ.45,000 கோடி மதிப்புள்ள என்.பி.எஃப்.சி-கள் சொத்துகளை வாங்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.”

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளதே?

‘‘சிறு முதலீட்டாளர்கள் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் தொடர்ந்து  நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
 
அக்டோபர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களுக்கு எஸ்.ஐ.பி மூலம் வந்த முதலீடு 7,895 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்றவை காரணமாக இந்தியப் பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும்,  முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு 42% அதிகரித்துள்ளது.

ஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி!

2017 அக்டோபரில் எஸ்.ஐ.பி முதலீடு 5,621 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2018-19-ம்  நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலமான முதலீடு 52,472 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.    2017-18-ம் நிதியாண்டில் இது 67,000 கோடி ரூபாயாகவும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 43,900 கோடி ரூபாயாகவும் இருந்தது.’’

என்.ஹெச்.பி.சி நிறுவனம் பங்குகளைத் திரும்ப வாங்குகிறதே?

‘‘பொதுத் துறையைச் சேர்ந்த நீர் மின் உற்பத்தி நிறுவனமான, என்.ஹெச்.பி.சி ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்குகிறது. இதற்கு  என்.ஹெச்.பி.சி-யின் இயக்குநர் குழு கடந்த வியாழனன்று ஒப்புதல் தந்தது. பங்கு ஒன்று ரூ.28-க்குத் திரும்ப வாங்கப்படு கிறது. இப்படி மொத்தம் 21.42 கோடி பங்குகள் திரும்ப வாங்கப்படுகிறது. ரெக்கார்ட் தேதி நவம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”

எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதே?

‘‘இதில் ஓ.என்.ஜி.சி-யின் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5% பங்குகளையும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான 3% பங்குகளையும் மற்றும் ஆயில் இந்தியா நிறுவனத்தின் 2,300 கோடி ரூபாய் மதிப்பிலான 10% பங்குகளையும் விற்க அரசு பரிசீலித்து வருகிறது. ஓ.என்.ஜி.சி-யின் பங்கு விலை 1.6% சரிந்து, 158.45 ரூபாயாகவும், ஐ.ஓ.சி-யின் பங்கு விலை 0.7% சரிந்து 146.35 ரூபாயாகவும், ஆயில் இந்தியாவின் பங்கு விலை 0.25% சரிந்து 203.50 ரூபாயாகவும் காணப்பட்டது. இந்த விலையின் அடிப்படையில் பார்த்தால், மேற்கூறிய மூன்று எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் மொத்தம், 16,500 கோடி ரூபாய்  கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. 

சந்தை விலையிலிருந்து இந்த பங்குகளை 5% தள்ளுபடி விலையில் மத்திய அரசு விற்கக் கூடும் என்கிறார்கள் விவர மறிந்தவர்கள்’’ என்று சொன்னவர், ‘‘மிந்த்ரா நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று அனந்த் நாராயணன் சொல்லியிருக் கிறார்’’ என்கிற கடைசி செய்தியைச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

- ஷேர்லக், ஓவியம்: அரஸ்

சுந்தரம் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்!

சென்னையை சேர்ந்த சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், புதிதாக ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்மூலம், ரூ.150-200 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.

 இந்தப் புதிய ஃபண்டில் திரட்டப்படும் நிதி, நிறுவனப் பங்குகள், ஆர்பிட்ரேஜ் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்வதாக இருக்கிறது. இந்த ஃபண்டில் வருமான வரி என்பது பங்குச் சந்தை ஃபண்டுகளுக்கு உரியதாகும். 

புதிய ஃபண்டில் நவம்பர் 30-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். டிசம்பர் 14-ம் தேதி முதல் மறுவிற்பனை நடைபெறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism