Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

வாரத்தின் இடையில் இறக்கம் வந்தால், அதை வாங்குவதற்கான  வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கடந்த முறை எழுதியிருந் தோம்.  நிஃப்டி 10450 - 14500-க்கு அருகே சரிந்து, அந்த வாய்ப்பு  திங்கள் அன்று கிடைத்தது. செவ்வாய்க்கிழமையன்று சரிவுடன் தொடங்கிய சந்தை, ஏற்றத்துடன் முடிவடைந்ததுடன், ஓர் அழகான புல்லிஷ் பேட்டர்னை உருவாக்கி, ஏற்றமான போக்கு மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறியைக் காண்பித்தது. அதைத் தொடர்ந்துவந்த மூன்று வர்த்தக தினங்களிலும், அதீதமான போக்கு எதுவும் காணப்படவில்லை. ஆனாலும், நிஃப்டி ஃப்யூச்சரை, வாரத்தின் இறுதியில் 10700 புள்ளிகளுக்கு மேலே கொண்டுசெல்ல அந்த மூன்று வர்த்தக தினங்களும் போதுமானதாக இருந்தது. இந்த வாரத்தில் பேங்க் நிஃப்டி இன்னும் சிறப்பாகவே செயல்பட்டது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அத்துடன், சந்தை ஏற்றமுடன் காணப்பட்ட அந்த மூன்று வர்த்தக தினங்களிலும்  பேங்க் நிஃப்டி சிறப்பாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.  பேங்க் நிஃப்டி மீண்டும் 26000-க்கு மேல் மீண்டும் சென்றதைச் சாதகமானதாகப் பார்க்க முடிந்தது. இண்டெக்ஸில் நிஃப்டி ஐடி-யின் செயல்பாடு மந்தமாகக் காணப்பட்டதுடன்,  வார இறுதி வரை இறங்குமுகமாகவே காணப்பட்டது. வாரத் தொடக்கத்தில் சிறப்பான செயல்பாட்டால்  மிட் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஒன்று சேர்ந்து ஒரு ஏற்றத்தை உருவாக்க முயன்று, சில ஏற்றங்களுடன் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன.

ஆக மொத்தத்தில், இந்த வாரத்தில் குறியீடுகளுக் கான செயல்பாடுகள் ஒன்றும் மோசமாக இல்லை.  என்றாலும், வாலட்டிலிட்டி (ஏற்ற இறக்கம்) இண்டெக்ஸ் இன்னமும் உச்சத்துக்கு அருகில் இருப்பது, அச்சம் இன்னமும் முழுமையாக அகன்று விடவில்லை என்பதையே  உணர்த்துகிறது.

சந்தேகமே இன்றி, கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட சரிவுதான் சந்தைகளின் ஏற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. கச்சா எண்ணெய் விலைப்போக்கில் ஏற்பட்ட திடீர் சரிவு எல்லோருக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய வரவேற்கத்தக்க அம்சமாக இருந்ததுடன்,  அந்தப் போக்கு, சர்வதேச சந்தையில் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட்டின் கச்சா எண்ணெய் விலையை, பேரலுக்கு 75 டாலராக நிர்ணயிக்கவும் வைத்தது. இதனால், கச்சா எண்ணெய் விலையைச் சிறிது நாள்களுக்கு ஒரு வரம்புக்குள் வைத்திருக்க முடியும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

உள்நாட்டு செயல்பாடுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும்கூட, கச்சா எண்ணெய்யின் இறக்குமதி அதிகரிப்பால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலைக் குறைவு இந்தியப் பொருளாதாரத்துக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஆனால்,  கச்சா எண்ணெய் விலை 55 டாலர் அளவுக்குச் சரிந்தது, அதற்கு சப்போர்ட் லெவலையும் கொண்டு வந்தது. எனவே, சந்தையின் ஏற்றத்தில் கரெக்‌ஷன் இருக்கக்கூடும். இது, சந்தையின் ஏற்றத்தைத் தாமதப்படுத்தலாம்.

நிஃப்டி, 200 நாள் மூவிங் ஆவரேஜ் இலக்கான 10780-ஐ நோக்கி, தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதாகவே தெரிகிறது. எனவே, லாங்க் பொசிஷன்களைத் தொடர்ந்து கிடப்பில் போட்டு, பங்குகள் அதன் கீழ்நிலை பேட்டர்ன் களை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறதா அல்லது இறக்கங்களுக்கு அருகிலேயே இருக்கிறதா என்பதைப் பார்த்து வர்த்தகம் செய்வதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாடா மெட்டாலிக்ஸ் (TATAMETALI)

தற்போதைய விலை: ரூ.688.30

வாங்கலாம்

காலாண்டு முடிவுகள் வெளிவரும் காலம். சில நல்ல பங்குகளில் முதலீடு செய்யத் தூண்டுகிறது. ஒரு பங்கு நீண்ட கால எதிர்ப்பைச் சமாளித்து வந்தால், சந்தையில் இதன் செயல்பாடு மாற்றத்தைச் சந்திக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். இந்த நிறுவனப் பங்கின் வார சார்ட்டிலும் நாம் இதனைக் காணமுடிகிறது. இதன் போக்குக்கான நேர்கோட்டில் நீண்ட காலமாக நிலைப்புத்தன்மையுடன் இருந்துவிட்டு, தற்போது பிரேக் அவுட்டாகி மேலேறுவது தெரிகிறது. பிரேக்அவுட்டாகி வலுவாக மேலேறும் இந்த நகர்வானது, கடந்த பல மாத மந்தநிலையை மாற்றும் என எதிர்பார்க்கலாம். பங்கின் விலை ரூ.800-க்குமேல் செல்லும் எனத் தெரிகிறது. ஸ்டாப் லாஸ் ரூ.680 வைத்து முதலீடு செய்யவும்.

பாலாஜி அமின்ஸ் (BALAMINES)

தற்போதைய விலை: ரூ.489.65

வாங்கலாம்

இறக்கங்களைச் சந்தித்தபோதும் கெமிக்கல் நிறுவனப் பங்குகள் அவற்றின் நிலையை சிறிது காலம் தக்கவைக்க முடிந்தது. பாலாஜி அமின்ஸ் நிறுவனப் பங்குகள், தொடக்கத்தில் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருந்தன. இந்த நிறுவனப் பங்கின் விலை சார்ட்டில் 50% புல்பேக் ஏரியா நல்லதொரு மல்டி லெக் பேட்டர்னை உருவாக்கியுள்ளது. வாராந்திர சார்ட்டில் திடமான தலைகீழ் கேன்டில் பேட்டர்னை உருவாக்கியுள்ளது. பங்கின் போக்கு முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்பாவிட்டாலும் குறைந்தபட்சம் தற்காலிக ஏற்றத்தைத் தரும் என்பதை சார்ட் காட்டுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.485 வைத்து தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். இன்னும் மூன்று மாதங்களில் ரூ.600 வரை செல்லும் என எதிர்பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

என்.ஆர்.பி பேரிங்ஸ் (NRBBEARING)

தற்போதைய விலை: ரூ.187.30

வாங்கலாம்

பெரும்பாலான பேரிங் தயாரிப்பு நிறுவனப் பங்குகள், மிகச் சிறிய இழப்புகளைத் தாண்டி நல்ல நிலையில் தொடர்ந்து செயல்படுகின்றன. என்.ஆர்.பி பேரிங்ஸ் நிறுவனப் பங்குகளும் இந்த குணாதிசயத்தை வெளிப்படுத்துகின்றன.  கடந்த ஓராண்டு காலமாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே நிலையில் விலை காணப்பட்டது. இரண்டாவது காலாண்டு முடிவு நல்லவிதமாக வந்ததால், இந்தப் பங்கின் விலை, தேக்க நிலையில் இருந்து விடுபட்டுப் புதிதாக ஏற்றம் கண்டிருக்கிறது.

வரும் வாரங்களிலோ மாதங்களிலோ பங்கு விலை ரூ.225 வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்க லாம். ஸ்டாப்லாஸ் ரூ.173 வைத்து வாங்கலாம்.

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism