நிதி மேலாண்மையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், யூனியன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியுமான வினய் பஹாரியா நமக்களித்த சிறப்புப் பேட்டி....

நாடாளுமன்றத் தேர்தல், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர், ரூபாய் மதிப்புக் குறைவு, வட்டி விகிதம் அதிகரிப்பு போன்ற நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை எப்படி அணுக வேண்டும்?

‘‘பங்குச் சந்தை என்பதைப் பெரிய தள்ளுபடி எந்திரம் என்று சொல்லலாம். அது நிகழ்காலம் முதல், வரப்போகிற புள்ளிவிவரங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்திவிடும். எனவே, இயற்கையாகவே பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த நிலையில், ஒரு முதலீட்டாளர் என்பவர் அவரின் நிதித் திட்டத்துடன் முதலீட்டில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்து வரவேண்டும். முடிந்தால் சந்தையின் இறக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வரும்போது நீண்ட காலத்தில் கணிசமாக லாபத்தைப் பெற முடியும்’’

இந்தியப் பங்குச் சந்தை தற்போது இறக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாற்று இருக்கிறதா?

“நீண்ட காலத்தில் பெரும்பாலான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் அவற்றின் பெஞ்ச்மார்க்கைவிட அதிக வருமானம் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் இப்போதும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடர்வது லாபகரமாக இருக்கும். இதை விட்டுவிட்டு மாற்று முதலீட்டுத் திட்டங்களைத் தேடினால், அவை ரிஸ்க் இல்லாததாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானம் தருவதாக இருக்காது. வரிக்குப் பிந்தைய நிலையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும்.’’

அடுத்த 3 முதல் 5 ஆண்டு காலத்தில் எந்தெந்த துறைகள் வேகமாக வளரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

‘‘வரும் ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை மற்றும் ஹெல்த்கேர் துறைகள் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் துறை சார்ந்த தேர்ந்தெடுத்த பங்குகளில் முதலீடு செய்துவந்தால் எடுக்கும் ரிஸ்க்குக்கேற்ற ரிவார்ட் கிடைக்கும். நிதிச் சேவை துறை முதலீட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் லார்ஜ்கேப் பங்குகளின் மதிப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது. அந்த வகையில், லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்டுகளையும் முதலீட்டுக்குக் கவனிக்கலாம்.’’

நீண்ட காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் வருமானம் எப்படி இருக்கும்?

‘‘எங்களின் மதிப்பீட்டின்படி, குறுகிய காலத்தில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும். நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட காலத்தில் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கிறோம். அந்த வகையில், வரிக்குப் பிந்தைய நிலையில் இதர சொத்துப் பிரிவு களைவிட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் சிறப்பாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.’’

தற்போதைய சந்தை சூழ்நிலையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

‘‘அஸெட் அலோகேஷன்படி, சிறு முதலீட்டாளர்கள், முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது நல்லது. அது நீண்ட காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும். மேலும், பங்குச் சந்தை ஏறினாலும் இறங்கினாலும் முதலீட்டாளர்கள் அவர்களின் நிதித் திட்டத்தின்படி முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டுவர வேண்டும்.

பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒழுங்கின்மை மற்றும் பதற்றநிலை முதலீட்டாளர் செல்வத்தை இழக்க வழிவகுக்கும். முதலீட்டாளர்கள் இறுதியாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் அளிப்பதில் பங்குச் சந்தை முன்னணியில் இருக்கிறது. அந்த வகையில் பங்குச் சந்தை முதலீட்டை இனிவரும் காலத்தில் யாரும் ஒதுக்க முடியாது.’’

- சி.சரவணன்

குறிப்பு: இந்தப் பேட்டியில் வினய் பஹாரியா சொல்லியிருக்கிற கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துகளே. அவை யூனியன் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் கருத்து அல்ல!