மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவர்கள் ஏராளமாக வருகிறார்கள். எந்த மாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்வதென்று அவர்களுக்குக் குழப்பம். “புதிதாக வெளியிடப்படும் ஃபண்டில் முதலீடு செய்வது மலிவாக இருக்கும். அதிக யூனிட்கள் கிடைக்கும்” என்று எனக்குத் தெரிந்த மியூச்சுவல் ஏஜென்ட் ஒருவர் சொல்கிறார். அதிக யூனிட்கள் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், அது லாபகரமானதா என எனக்குக் குழப்பமாக இருக்கிறது” என்று வாசகர் ஒருவர் கேட்டார்.

அவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கவே செய்கிறது. அவர்களுக்காக ஓர் உதாரணம் மூலம் விளக்கலாம். ஒருவர் 10,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், புதிய ஃபண்ட் வெளியீட்டின்போது, ஒரு யூனிட் மதிப்பு ரூ.10 என்கிறபட்சத்தில் 1,000 யூனிட்கள் கிடைக்கும். இதுவே, ஏற்கெனவே உள்ள ஃபண்ட், அதன் என்.ஏ.வி ரூ.20-க்கு உயர்ந்திருந்தால், இந்த ரூ.10,000 முதலீட்டுக்கு 500 யூனிட்கள்தான் கிடைக்கும். ஏற்கெனவே இருக்கும் ஃபண்டுகளில் குறைவான யூனிட்களே கிடைக்கிறது என்பதால், விவரம் தெரியாத பல முதலீட்டாளர்கள் என்.எஃப்.ஓ-வில் முதலீட்டைச் செய்துவிடுகிறார்கள். முதலீடு எந்த அளவுக்குப் பெருகி வளருகிறது என்பதில் தான் லாபமிருக்கிறது. புதிய ஃபண்ட் வெளியீட்டின்போது, ஏஜென்டுகளுக்கு அதிக கமிஷன் கொடுக்கப்படலாம்; அதனால், ஏஜென்டுகள் அதனைப் பரிந்துரைக்கலாம் என்ற கோணத்திலும் முதலீட்டாளர்கள் யோசித்து கேள்வி எழுப்ப வேண்டியது அவசியம்.

புதிய தீம் (கருத்து) அடிப்படையில் ஃபண்டுகள் வரும்போது, என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்தால் தவறில்லை. ஆனால், முக்கியமான விஷயம், புதிய ஃபண்டுகள் எப்படி வருமானம் கொடுக்கும் என்பதற்கு ஆதாரம் / உத்தரவாதம் எதுவுமில்லை. அதாவது, அவற்றுக்குக் கடந்த கால வரலாறு இருக்காது. அதில், அதிக வருமானம் கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை. எனவே, புதிய முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் யூனிட்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. அது அளிக்கும் வருமானம்தான் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சில ஏஜென்டுகள் அடிக்கடி ஃபண்டுகளை மாற்றச் சொல்வார்கள். இந்த ஃபண்டை விற்றுவிட்டு, அந்த ஃபண்டில் முதலீடு செய்யுங்கள் என்று சொல்லக்கூடும். நிஜமாகவே ஃபண்டின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால் மாற்றச் சொல்கிறார்களா, இல்லை கூடுதல் கமிஷனுக்காக மாற்றச் சொல்கிறார்களா, இல்லை அவர்களுக்கு லாபகரமாக இருக்கும் வேறு காரணத்துக்காக சொல்கிறார்களா என ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது முதலீட்டாளர்களின் பொறுப்பே.

எனவே, பழைய ஃபண்ட் யூனிட்களை விற்றுவிட்டு, புதிய ஃபண்டில் முதலீடு செய்ய உங்கள் ஏஜென்ட் அல்லது நிதி ஆலோசகர் சொன்னால் கூடுதல் உஷாராக இருப்பது நல்லது. பழைய ஃபண்ட் என்ன வருமானம் தந்திருக்கிறது, அதனை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகே விற்க சம்மதியுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், முதலீட்டாளர்கள் தங்களின் தேவையை அறிந்து ஃபண்ட் வகையைத் தேர்வுசெய்வது அவசியம்.

சிலர் அவர்களின் மொத்த முதலீட்டையும் மியூச்சுவல் ஃபண்டில் போட்டிருப்பார்கள். அப்போது அவர்களின் தேவை என்ன, எப்போது பணம் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்வதன்மூலம் நல்ல லாபத்தை எடுப்பதுடன் ரிஸ்க்கையும் குறைக்க முடியும்.

குறிப்பாக, 3 - 5 ஆண்டுக்கு மேல் முதலீட்டு பணம் தேவை இல்லை என்கிறபோது, அந்தத் தொகையை பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெற முடியும். மிகக் குறுகிய காலத்தில் பணம் தேவையாக இருக்கும்பட்சத்தில் லிக்விட் ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களில் அடிப்படையான சிலவற்றை நாம் தெரிந்து வைத்திருப்பதைப்போல, முதலீடு தொடர்பான விஷயங்களிலும் சில அடிப்படையான நுட்பங்களைப் புதிய முதலீட்டாளர்கள் தெரிந்து வைத்திருந்தால், ஆலோசகர் சொன்னாலும் நாம் சரிபார்த்துக்கொள்ள முடியும்; ஏன், இப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுப்ப முடியும்.

- சி.சரவணன்