Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

நாம் எதிர்பார்த்தது தங்கம் போலவே, ஒரு நல்ல இறக்கத்தைச் சென்ற வாரம் கண்டது. பொதுவாக, பங்குச் சந்தையுடன் தங்கத்துக்குள்ள தொடர்பு பெரும்பான்மையான நேரங்களில் ஒத்துப்போகும். அதாவது, ஒரு எதிர்மறையான உறவுமுறை ஆகும். பங்குச் சந்தை ஏறுமுகமாக இருக்கும்போது, தங்கம் இறங்கும். பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வாங்குபவர்களாக மாறியதும்கூட, தங்கத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரம், சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் டாலர் இண்டெக்ஸ் ஏறுமுகமாக இருந்துவந்ததும், தங்கம் இறங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. ஆனாலும், இறக்கங்கள் வரும்போது புல்பேக் ரேலி வருவதும் சகஜம்தான்.

சென்ற வாரம் சொன்னது…  ‘‘தங்கம் தற்போது 31040 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 31560 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் 06.11.18 வரை ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்து வந்தது உண்மை.  அதற்கடுத்து பக்கவாட்டு நகர்வின்கீழ் எல்லையை உடைத்து வேகமாக இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கத்தின் அடுத்த ஆதரவுதான் நாம் கொடுத்திருந்த 31040 ஆகும். சென்ற வாரம் திங்களன்று நாம் கொடுத்திருந்த ஆதரவான 31040-ஐ உடைத்து இறங்கியது. ஆனாலும், அதன் அருகிலேயே முடிந்தது. திங்களன்று சற்று மெதுவாக இறங்கிய தங்கம், செவ்வாயன்று மிக வலிமையாக இறங்கியது. இந்த இறக்கமானது, தங்கம் குறைந்தபட்ச புள்ளியாக 30756-ஐ தொடுவதற்குக் காரணமாக இருந்தது.  புதனன்று இந்த இறக்கம் தொடர்ந்து குறைந்தபட்சமாக 30620-ஐ தொட்டாலும், தங்கம் அந்தப் புள்ளியிலிருந்து மீள ஆரம்பித்தது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் தற்போது நல்ல இறக்கத்திற்குப்பிறகு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்கிறது. இந்த புல்பேக் ரேலிக்கு உடனடித் தடைநிலை 30980 ஆகும்.  இதைத் தாண்டினால் அடுத்த தடைநிலை 31150 ஆகும்.  கீழே 30620 என்பது முக்கிய ஆதரவு நிலை ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது… ‘‘வெள்ளி தற்போது ஒரு தொடர் இறக்கத்தில் உள்ளது.  உடனடி ஆதரவு நிலை 36760 ஆகும். மேலே 37888 வலிமையான தடைநிலை ஆகும்.’’

கடந்த வாரம், தங்கம் வேகமெடுத்து இறங்கியபோது, வெள்ளியும் இறங்கியது.  ஆனால், வெள்ளியின் இறக்கம் சற்றே மிதமானதாக இருந்தது. சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த  ஆதரவு எல்லையான 36760-ஐ திங்கள் அன்றே உடைக்க முற்பட்டது.  எனினும், முடியும்போது அந்த எல்லைக்கு அருகிலேயே முடிந்தது.

ஆனால், செவ்வாயன்று பலமாக இறங்கி 36383-ஐ தொட்டது. புதனன்றும் அந்த இறக்கம் தொடர்ந்து குறைந்தபட்ச புள்ளியாக 36055-ஐ தொட்டு, பின் மீண்டு எழுந்தது. தற்போது வெள்ளியும் தங்கத்தைப் போலவே, ஒரு புல்பேக் ரேலியில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி புல்பேக் ரேலியின் மூலம் ஏறும்போது அதன் அடுத்த உடனடித் தடைநிலை என்பது 37750 ஆகும். இந்த எல்லையை உடைத்து ஏறினால், அடுத்த வலிமையான தடைநிலை 38050 ஆகும். கீழே 36280 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கடுமையான இறக்கத்தில் உள்ள கச்சா எண்ணெய் தற்போது 4234 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது.  மேலே  உடனடித் தடைநிலை 4570 ஆகும்.”

கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைவதை நாம் ஒவ்வொரு வாரமும்  விளக்கமாக எழுதி வருகிறோம். அந்த வலிமையான இறக்கத்திற்கு ஒரு முடிவு வந்து, ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்யும் நேரமாக இது மாறலாம். நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4234-ஐ உடைத்து மிக வலிமையான இறக்கத்தைக் காட்டி குறைந்தபட்ச புள்ளியாக 3974-ஐ தொட்டது.  சென்ற வாரம் புதனன்று குறைந்தபட்சபுள்ளியாக 3975-ஐ தொட்டபிறகு, ஒரு டோஜி அமைப்பை உருவாக்கியுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன செய்யலாம்?

 கச்சா எண்ணெய் நவம்பர் மாத கான்டிராக்ட் முடிவுக்கு வந்துள்ளது.  இனி டிசம்பர் எண்களைப் பார்க்கலாம். நன்கு இறங்கி ஆதரவாக 3980-ஐ கொண்டுள்ளது. மேலும், ஒரு டோஜி அமைப்பையும் உருவாக்கியுள்ளதால், மேலே திரும்பலாம். உடனடித் தடைநிலை 4280 ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism