Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில் சென்ற வாரமும் ஒரு நல்ல இறக்கத்திற்குப்பிறகு, ஒரு ‘பியர்சிங் பேட்டன்’ என்று சொல்லப்படும் இரண்டு கேன்டில்கள் சேர்ந்து தோற்றுவிக்கும் காளைகளுக்கான கேன்டில் அமைப்பு தோன்றியது.  இந்த அமைப்பு, இறக்கத்தின் முடிவைக் காட்டுவதாகவும், ஏற்றத்தின் தொடக்கத்தைக் காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். 

முந்தைய வாரம் மென்தா ஆயில், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1760-ஐ உடைத்து இறங்கி, குறைந்தபட்சமாக 1731-ஐ தொட்டது.  இந்த நிலையில், அடுத்து மூன்று நாள்களும் ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறி இருந்தது. இந்த பக்கவாட்டு நகர்வில் இருந்தபோதுதான், மென்தா ஆயில் ஒரு ‘பியர்சிங் பேட்டனை’த் தோற்றுவித்தது.  அதன்பிறகு, இறக்கம் முடிந்து மெள்ள மெள்ள மேலே திரும்பியது. இந்தத் திருப்பம் திங்களன்று மிக வலிமையான ஏற்றமாக மாறியது. அதாவது, சென்ற வாரம் திங்களன்று காலையில் 1775 என்ற புள்ளியில் தொடங்கி, உச்சமாக 1812-ஐ தொட்டது. 

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

அடுத்து செவ்வாயன்று இன்னும் கொஞ்சம் வலிமை காட்டி ஏற ஆரம்பித்தாலும் உச்சமாக 1825-ஐ தொட்டு, பின்பு ‘ஸ்பின்னிங் டாப்’  உருவமைப்பைத் தோற்றுவித்துள்ளது. இந்த உருவமைப்பு இனி ஏற முடியாமல் தடுமாறுவதைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.  அடுத்த மூன்று நாள்களும் ஒரு டோஜி வகை கேன்டில்கள் தோன்றிக்கொண்டு இருப்பது நிச்சயமற்றதன்மையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இனி என்ன செய்யலாம்..? மென்தா ஆயில் டோஜி அமைப்பைத் தோற்றுவித்துள்ளதால், ஏற்றம் முடிந்து பக்கவாட்டு நகர்வுக்கு மாறி உள்ளது. தற்போதைய ஆதரவு நிலை 1780, உடனடித் தடைநிலை 1830 ஆகும்.

காட்டன்

காட்டன், கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து ஏறியிறங்கி ஒரு ரோலர் கோஸ்டர் நகர்வைக் கொண்டு இருந்தது. அதுவும் இரண்டு மாதங் களில் பெரிய ஏற்றம், பின் அதே அளவு இறக்கம் இருந்தது.  அதைப் போலவே, மீண்டும் அதைப் போன்ற ஏற்றம் நிகழ்ந்து, முந்தைய உச்சத்தைத் தாண்ட முடியாமல், இறங்கியபோது ஒரு டபுள் டாப் உருவமைப்பைப் பார்க்க முடிந்தது.  அதன்பின் ஒரு கடுமையான இறக்கம் நிகழ்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங் களாக பெரிய மாற்றம் இல்லாமல் பக்கவாட்டு நிகழ்விலேயே உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சென்ற வாரம் சொன்னது… ‘‘பக்கவாட்டில் உள்ள காட்டன் 22650-ஐ தடைநிலையாகவும், கீழே 22150-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.’’

காட்டன் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 22650-ஐ தாண்டவும் இல்லை, கீழே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 22150-ஐ உடைத்து இறங்கவும் இல்லை.  எனவே, மிகவும் குறுகிய எல்லைக்குள் சுழல்வதைப் பார்க்கிறோம்.

இனி என்ன செய்யலாம்..? காட்டன் தொடர் பக்கவாட்டு நிகழ்வில் உள்ளதால், கீழே 22230 முக்கிய ஆதரவாகவும், மேலே 22560 தடைநிலை யாவும் உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. நவம்பர் கான்ட்ராக்ட் நடப்பில் உள்ளது. சென்ற வாரம் சொன்னது… ‘‘சென்னா மறுபாசு வகையான கேன்டில் உருவமைப்பைத் தோற்றுவித்துள்ளது.  தற்போது உடனடித் தடைநிலை 4630 ஆகும். கீழே முக்கிய ஆதரவு நிலை 4340 ஆகும்.’’

 சென்னா முதலில் பலமான பாட்டத்தை ஏற்படுத்தி, பின் மிக பலமான ஏற்றத்தில் முடிந்துள்ளது. அந்த நிலையில்தான் மறுபாசு வகை கேன்டில் தோன்றியுள்ளது.  பொதுவாக, மறுபாசு வகை கேன்டில்கள் இறக்கத்தின் முடிவில் தோன்றினால், ஏறவாய்ப்பும், ஏற்றத்தின் முடிவில் தோன்றினால் இறங்க வாய்ப்பும் உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். 

அந்த வகையில் சென்ற வாரம் சென்னா நல்ல ஏற்றத்திற்குப்பிறகு மறுபாசு கேன்டில் தோன்றி உள்ளது. சென்ற வாரம் திங்களன்று, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4630-ஐ தாண்டி ஏறி உச்சமாக 4741-ஐ தொட்டது. அதன்பின் தாக்குப்பிடிக்க முடியாமல் இறங்கி, 4590 என்ற எல்லையில் முடிந்துள்ளது. அதன்பின் படிப்படியாக இறங்கி குறைந்தபட்சமாக 4472 என்ற புள்ளியைத் தொட்டு முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? சென்னா நவம்பர் கான்டிராக்ட் முடிவுக்கு வருவதால், இனி டிசம்பர் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். தற்போது உடனடித் தடைநிலை 4560 மற்றும் ஆதரவு நிலை 4420 ஆகும்.’’

- தி.ரா.அருள்ராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism