Published:Updated:

குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?

குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?
பிரீமியம் ஸ்டோரி
News
குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?

குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?

ரியாக இரண்டு மாதங்களுக்குமுன் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்் 100 டாலரைத் தொடும் என்கிற தகவல்கள் வெளியாகி, எல்லோரையும் கதிகலங்க வைத்தது. அப்படி விலை உயர்ந்திருந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தொட்டிருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்காமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைய ஆரம்பித்தது.

சென்ற நவம்பர் கடைசியில் கச்சா எண்ணெய் விலை ஒரே தினத்தில் 8 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம்கண்டது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்த அதிகபட்ச விலையிலிருந்து, தற்போது 30% வரை விலை குறைந்து, சாதாரண மனிதர் களின் மனதில் பால் வார்த்திருக்கிறது. 

கடந்த வியாழக்கிழமை மாலை அன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 53.36 டாலராக வர்த்தகமாகி வருகிறது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கும்கீழ் இறங்கக்கூடும் என்று சிலர் ஆரூடம் சொல்கிறார்கள். 2014-ம் ஆண்டின் குறைந்தபட்ச விலையான 27 டாலருக்கும் கீழ் இறக்கமடையவும் வாய்ப்புண்டு என சிலர் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

 கச்சா எண்ணெய் விலை இப்படி மாறி, மாறி ஏறி இறங்கும்போது, அது தொடர்பான பங்குகளின் விலையும் ஏறி, இறங்கவே செய்யும். 

குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?

முதலில், ஒரு பங்கின் விலை இன்னும் குறையும் என்று நினைத்து, நல்ல பங்கினைக் கூட விற்றுவிடுகிறார்கள். அதேபோல, விலை அதிகம் என்று நினைத்து, நல்ல பங்குகளைக்கூட வாங்க மறுக்கிறார்கள். இந்த இரண்டு அணுகு முறையுமே தவறு. முதலீட்டாளர்கள் முதலீடு களைச் செய்யும்முன் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால் மட்டுமே நல்ல ஆதாயத்தைப் பெற முடியும்.

கச்சா எண்ணெய் விலை ஏன் ஏறுகிறது அல்லது இறங்குகிறது, இப்போது ஏற்பட்டிருக்கும் இறக்கம் இன்னும் தொடருமா, இறக்கம் எவ்வளவு காலத்துக்குத் தொடர வாய்ப்புண்டு, கச்சா எண்ணெய் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் நடந்து வருகின்றன, ஒபெக் நாடுகள்  எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதில் இதுவரை இருந்த தனது வலிமையை இழந்துவிட்டதா எனப் பல கேள்விகள் கேட்டு, அதற்கான தெளிவான பதிலை நாம் பெற வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் விலை இறக்கத்தின் தாக்கங்கள் எவ்வாறாக இருக்கும், இதனால் எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அமையும் என்று பார்ப்போம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?

    விலை இறக்கத்திற்கான காரணங்கள்

இரண்டு மாதங்களுக்குமுன் ஈரான் மீதான  அமெரிக்கா விதிக்க இருந்த கட்டுப்பாடுகள் (நவமபர் 4-ந் தேதி முதல்) காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் வரத்து குறையக்கூடும் என்ற  எதிர்பார்ப்பிலும், அக்டோபர் மாதத்தில் அமெரிக்க ஷேல் எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக ப்ரெண்ட் க்ரூட் ஒரு பீப்பாய் 86 அமெரிக்கா டாலர்களுக்கு அதிகரித்தது. ஆனால், அதன்பின் வந்த செய்திகள் அனைத்துமே இதற்கு நேர்மாறாக அமைய கச்சா எண்ணெய் விலை இறங்கத் தொடங்கியது. 

    முதல் காரணம்

 அமெரிக்கா, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் சில நாடு களுக்கு விலக்கு அளித்தது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதில் முக்கியமானவை. அக்டோபர் விலை ஏற்றத்திற்கு எந்த நடவடிக்கை காரணமோ, அதுவே திரும்பப் பெற்றதுதான் விலை   இறக்கத்திற்கு முக்கியக் காரணம். 

    இரண்டாவது காரணம்

அமெரிக்க நடவடிக்கையால், ஈரான் நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கும்போது அதன் பலாபலன்களைப் பெறுவதற்கும், அமெரிக்க அதிபரின் வற்புறுத்தல் காரணமாகவும், சவுதி தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தது. 2018 துவக்கத்தில் ஒரு நாளைய உற்பத்தி  10 மில்லியன் பேரல்களாக இருந்தது, நவம்பர் மாதத்தில் 11.20 மில்லியன் பேரல்களாக அதிகரிக்கச் செய்தது.

   விலை இறக்கம் நீடிக்குமா?

இப்போது நம்முன் உள்ள ஒரே கேள்வி, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து நீடிக்குமா என்பதுதான்.

இதுவரை ஒபெக் கூட்டமைப்பானது கச்சா எண்ணெய்யின் விலையை நிர்ணயம் செய்வதில் இருந்த வலிமை தற்போது நிச்சயமாகக் குறைந்துள்ளது என்பதைப் பலரும் ஒப்புக்கொள் கின்றனர். இந்த அமைப்பினால் முந்திய காலத்தைப்போல் உற்பத்தியைக் குறைத்து, விலைச் சரிவை தடுக்க முடியவில்லை.

 உலகின்  கச்சா எண்ணெய் மொத்த உற்பத்தியில் 40% ஒபெக்கின் பங்களிப்பு இருக்கிறது. இந்த நிலையில், எந்த விலையில் வேண்டுமானாலும் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய அமெரிக்கா துணிந்திருப்பது, விலை மேலும் சரிவதற்கோ அல்லது இதே விலையில் தொடர்ந்து நீடிக்கவே அதிக  வாய்ப்பிருக்கிறது.

குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?

   இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுகிற தாக்கங்கள்

  கச்சா எண்ணெய்யின் விலை இறக்கத்தினால், ஆசியப் பிராந்தியத்தில், இந்திய ரூபாய் மற்றும் இந்தோனேஷியாவின் ருபையா ஆகிய இரண்டும் டாலருக்கு நிகராக அதிக மதிப்பிறக்கம் கண்டுள்ளன. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப்போரின் விளைவாகப் பாதிப்புகள் இல்லை என்றாலும், இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிற கச்சா எண்ணெய் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் காரணமாக நமது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உயருகிறது. இது ரூபாயின் மதிப்பில் பிரதிபலிக்கிறது. சென்ற வருடத்தின்,செப்டம்பர் காலாண்டில் கச்சா எண்ணெய் சார்ந்த இறக்குமதி செலவு 14 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது, முடிவடைந்த இரண்டாம் காலாண்டில்  60% அதிகரித்து, 23 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

 இந்தியாவின் மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய் என்பது 30 சதவிகிதமாகவும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் 70 சதவிகித பங்களிப்பாகவும் இருக்கிறது. சர்வதேச விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய இரண்டுமே இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உதாரணத்திற்கு, சர்வதேச விலையில் கச்சா எண்ணெய் விலை 10% இறக்கம் கண்டால், எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள வளரும் நாடுகளின் ஜி.டி.பி 0.5% -  0.7% வரை அதிகரிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், ஏற்றுமதி செய்யும் நாடுகளின், குறிப்பாக, அரபு நாடுகளின் ஜி.டி.பி குறையக்கூடும். (எந்தெந்த நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்கிறது, அந்தந்த நாடுகளின்        2017-ம் ஆண்டின் ஜி.டி.பி-யில் ஏற்பட்டுள்ள  தாக்கங்களை மேலே உள்ள வரைபடத்தில் பார்க்கலாம்.)

கச்சா எண்ணெய் விலை சரிவால், ஏற்றுமதி செய்கிற  நாடுகளான சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் கனடா  உள்ளிட்ட நாடுகளின் ஜி.டி.பி வளர்ச்சி முறையே 23%, 10% மற்றும் 3%  சரிவு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், தென் கொரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஜி.டி.பி வளர்ச்சி பாசிட்டிவாக இருப்பதும் தெளிவாக உணர்த்துகிறது.

 சாதகங்கள்

கச்சா எண்ணெய் விலை இறக்கத்தினால் பங்குச் சந்தைக்கு எந்த வகையில் சாதகங்கள் ஏற்படும், அதனால் பலனடைக்கூடிய பங்குகளைப் பார்ப்போம்.

  சந்தைப்படுத்தும் நிறுவனங்கள்

கச்சா எண்ணெய்யை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இந்த விலை இறக்கத்தினால் நல்ல பலனடைய வாய்ப்புண்டு. எனவே, அவற்றின் பங்கு விலை உயர வாய்ப்புண்டு.

ஐ.ஓ.சி: 2018-19 -ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக, இந்த நிறுவனத்தின் லாப சதவிகிதம் 24% வரை குறைந்தது. ரூபாயின் மதிப்புக் குறைந்ததும் மற்றொரு காரணம். பங்கு விலை அதிகபட்சமாக ரூ220–ஆக வர்த்தகமானது, தற்போது ரூ.135-ஆக காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை இறக்கத்தில் இருப்பதும், ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டுவருவதும், அடுத்த ஏழு ஆண்டுகளில் 1.8 லட்சம் கோடிகள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

ஹெச்.பி.சி.எல்: கடந்த ஒரு வருடத்தில்  அதிக பட்ச விலையிலிருந்து சுமார் 50 சதவிகிதத்துக்கும்  மேலாக  பங்கு விலை குறைந்து காணப்படுகிறது. சர்வதேச விலை (பெரிய அளவிற்கு) குறையும்போதெல்லாம், சில்லறை  விலையையும் குறைக்க முடிவெடுப்பது எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்களின் லாபங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, எண்ணெய் நிறுவனங் களின் கையிருப்பு விலை அதிகமாக இருந்து, விற்பனை விலை குறைந்தால்,  பங்கு விலையும் சரியும்.

ஆனால், சர்வதேச விலை இறக்கத்தில் கிடைக்கக்கூடிய முழுப் பலன்களையும், நுகர்வோருக்குத் திருப்பிவிடாததால், தொலைநோக்கு பார்வையில் முதலீடு சிறந்ததாக அமைய வாய்ப்புண்டு.  

   பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள்

பெர்ஜர் பெயின்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ்: நிறுவனங்களின் மூலப் பொருள்கள்  கச்சா எண்ணெய்யிலிருந்து பிரித்தெடுக்கக்கூடிய பொருள் களாக இருப்பது சாதகமான செய்தியாகும். இந்த நிறுவனங் களின் பங்கு விலை 2018-ன் அதிகபட்ச விலையிலிருந்து       10%- 20% என்ற அளவிற்கு மட்டுமே சரிந்து காணப்படுகிறது.

இந்த நிறுவனங்களின்  தயாரிப்புகள் என்பது கட்டடங் களுக்கு அழகு சேர்ப்பது மட்டு மில்லாமல், வெளிப்புற வெப்பத்தைக் கட்டடங்களுக்குள் அனுப்பாமல் தடுப்பான்களாகவும் இருப்பது, மின்சார செலவினங்களைக் குறைக்கிறது. ஆகவே, இந்தத் துறையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?

   கெமிக்கல் துறை

பிடிலைட்: கட்டடங்களில் நீர் கசிவைத் தடுக்கும் பொருள்களைத் தயாரிப்பதில் முக்கிய நிறுவனம் இது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் இந்தத் துறை சராசரியாக 9.86% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மூலப்பொருளான ‘வாம்’ 2014-ம் ஆண்டு  துவக்கத்தில் ஒரு மெட்ரிக் டன்  1,750 டாலர்களாக அதிகரித்தும், அதே ஆண்டு கச்சா எண்ணெய் விலை சரிவடையத் தொடங்கியதும், 1000 டாலர்களாகச் சரிந்தும் வர்த்தகமானது. 2018-ல் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், மீண்டும் 1,300 டாலர்களையொட்டி காணப்படுகிறது. தற்போதைய கச்சா எண்ணெய் விலை சரிவு நீடிக்கும்பட்சத்தில், மூலப்பொருளின் விலையும் சரிவடைய வாய்ப்பிருக்கிறது.

மேலும், இந்தத் துறையில் இந்த நிறுவனத்திற்கு வர்த்தகப் போட்டி இல்லை என்பதால், கட்டுமானத் துறை சிறப்பாக இருக்கும்பட்சத்தில், நிறுவனத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். பங்கு விலை 2018-ன் அதிகபட்ச விலையையொட்டி வர்த்தகமாகி வருகிறது. அக்டோபர் மாதத்தில் இறக்கத்திலிருந்து, மீண்டு எழுந்து வலுவான நிலையிலேயே வர்த்தகம் நடைபெறுகிறது.

ஆக மொத்தத்தில், கச்சா எண்ணெய் விலைச் சரிவு இந்தியப் பொருளாதாரத்திற்கும் சரி, இந்திய நிறுவனங்களுக்கும் சரி, சாதகமான சூழலைத் தோற்றுவித்துள்ளது. இந்தத் தருணத்தில் பங்குகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, முதலீடு செய்வது அவசியம்!

- ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்