Published:Updated:

மான்டே கார்லோ ஃபேஷன்ஸ்! (NSE SYMBOL: MONTECARLO)

மான்டே கார்லோ ஃபேஷன்ஸ்! (NSE SYMBOL: MONTECARLO)
பிரீமியம் ஸ்டோரி
News
மான்டே கார்லோ ஃபேஷன்ஸ்! (NSE SYMBOL: MONTECARLO)

கம்பெனி டிராக்கிங்

யத்த  ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம்தான் மான்டே கார்லோ ஃபேஷன்ஸ் லிமிடெட். 1949-ம் ஆண்டு லூதியானாவில் ஆஸ்வல் உல்லன் மில்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் நாகர் குழுமத்தின் முக்கிய நிறுவனமாகும். ஆரம்ப காலத்தில் ஜவுளிகள் மற்றும் பின்னலாடைகளை உற்பத்தி செய்வதிலேயே கவனம் செலுத்திவந்த இந்த நிறுவனம், 1984-ம் ஆண்டில் ‘மான்டே கார்லோ’ என்ற பிராண்டை உருவாக்கி ஆயத்த ஆடைகள் விற்பனை யில் கால்பதித்தது. அப்போது துவங்கி இன்றுவரையில் மாறிவரும் காலத்திற்கேற்ப ஆயத்த ஆடைகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும்வண்ணம் இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

உல்லன் பிரிவில் பெரியதொரு நிறுவனமாக இயங்கிவந்த இந்த நிறுவனம், அனைத்துப் பருவ காலங்களுக்கும் அணியும் வகையிலான ஆயத்த ஆடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டும் உல்லன் துறையில் பிரசித்தி பெற்ற பிராண்டான ‘மான்டே கார்லோ’-வை முழுவீச்சில் பயன்படுத்திப் பலன்பெரும் பொருட்டும் பருத்தி யினாலான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்வதில் கால்பதித்தது இந்த நிறுவனம்.

மான்டே கார்லோ ஃபேஷன்ஸ்! (NSE SYMBOL: MONTECARLO)

ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முழுமையான கவனத்தைச் செலுத்துவதற்காக 2011-12-ம் ஆண்டில் ஆஸ்வல் உல்லன் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து ஆயத்த ஆடைப்பிரிவு தொழில் பிரிவு பிரிக்கப்பட்டு, மான்டே கார்லோ ஃபேஷன்ஸ் லிமிடெட் என தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. மேலும், வானிக் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த நிறுவனத்தின் இ-காமர்ஸ் பிசினஸை மேற்பார்வை செய்யவும் மற்றும் ஃபிரான்சைஸி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

   தயாரிப்புகள்

இந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவுகள் என்று பார்த்தால், உல்லன், பருத்தி, குழந்தைகள், சாதாரண விலை, வீட்டு ஃபர்னிஷிங், ஸ்போர்ட்ஸ் வியர்,  அக்சஸரிஸ் (மப்ளர், சாக்ஸ் போன்றவை) போன்ற பிரிவுகளில் பல்வேறு ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். தற்சமயம் மான்டே கார்லோ பிராண்டின் கீழ் உல்லன் பின்னலாடைகள், சட்டைகள், ட்ரெளசர்கள், டெனிம் பெர்முடாகள், லோயர்ஸ்,  ஹை-ஸ்ட்ரீட் ஃபேஷன் சட்டைகள்,  டாப்ஸ், டிரெஸ்ஸஸ், ஜம்ப்சூட்ஸ், அர்பன் டுனிக்ஸ், ஷ்ரக்ஸ், ஷார்ட்ஸ், கேப்ரிஸ், நேரோ பேன்ட்ஸ்,  லெக்கிங்ஸ்,  டிராக் சூட்ஸ்  மற்றும் ஆண்கள் பெண்கள் மற்றும் பதின்பருவ வயதினருக்கான சாலிட் டி-ஷர்ட்ஸ் எனப் பல்வேறு விதமான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மான்டே கார்லோ ஃபேஷன்ஸ்! (NSE SYMBOL: MONTECARLO)

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தனிப்பட்ட பிராண்ட் கடைகள், மல்டி பிராண்ட் அவுட்லெட்கள், லார்ஜ் பார்மெட் அவுட்லெட்கள், இ-காமர்ஸ் வெப்சைட்கள் எனப் பல்வேறு வழி வகைகளில் வாடிக்கையாளர்களைச் சென்ற டைகிறது.

   தொழிலுக்கான வாய்ப்புகள்

தொழிலுக்கான வாய்ப்புகள் என்று பார்த்தால், அதிகரித்துவரும் தனிநபர் வருமானம் என்பது வாடிக்கையாளர்கள் பிராண்டட் ஆயத்த ஆடைகளை வாங்க எத்தனிப்பதற்கு சாதகமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஆயத்த ஆடை மற்றும் இதர பொருள்களை வாங்கும் திறன்கொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்தத் துறையின் வளர்ச்சி 2016-2020 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 9% என்கிற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அதிலும் பிராண்டட் ஆயத்த ஆடைகள் பிரிவில், வளர்ச்சி என்பது இதே காலகட்டத்தில் சுமார் 13% அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகரமயமாதல் என்பது வேகமாக நடக்கிறபடியால் பிராண்டட் ஆயத்த ஆடைகளை நோக்கி வாடிக்கையாளர்கள் நகர்வது என்பது ஓரளவு நடக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

முப்பதுக்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை வடிவமைப்பு நிபுணர்களைப் பணியில் வைத்திருக்கும் இந்த நிறுவனம், முழுக்க முழுக்க வடிவமைப்பையும், உற்பத்தியையும்  சொந்தமாகவே முழுமையாகச் செய்துகொள்ளும் வசதியைக் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் செல்வதற்காக அகில இந்தியரீதியாக 21 எக்ஸ்க்ளூஸிவ் பிராண்டட் அவுட்லெட்களையும் (கம்பெனிக்கு சொந்தமான கம்பெனியால் நடத்தப்படுகிற வகை), 219 பிரான்சைஸிக்கு சொந்தமான பிரான்சைஸ்களால் நடத்தப்படுகிற எக்ஸ்க்ளூஸிவ் பிராண்டட் அவுட்லெட்களையும் கொண்டு இயங்குகிறது. மேலும், 2400-க்கும் மேற்பட்ட மல்டி பிராண்டட் அவுட்லெட் வாயிலாகவும்,  இ249 தேசிய அளவிலான செயின் ஸ்டோர்கள் வாயிலாகவும்,  அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜபாங் போன்ற இ-காமர்ஸ் இணையதளங்கள் வாயி லாகவும் வாடிக்கையாளரைச் சென்றடைகிறது.

செயல்பாட்டு ரீதியாக இந்த நிறுவனம் மான்டே கார்லோ, ஒரு பிரீமியம் பிராண்டாக தன்னை உருவகப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஆயத்த ஆடைப்பிரிவில் முக்கிய விஷயமான விற்ற பொருளை வாடிக்கை யாளர் குறைகளைச் சுட்டிக்காட்டி திரும்பக் கொண்டு வந்து தருதல் என்ற விஷயத்தில்  மிகக் குறைந்த சதவிகித அளவில் செயல்படுவது இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பாகும். வாராக் கடன் என்பது இல்லாத நிலையிலேயே இந்த நிறுவனம் தன்னுடைய விற்பனையைச் செய்துவருகிறது.

மான்டே கார்லோ ஃபேஷன்ஸ்! (NSE SYMBOL: MONTECARLO)

   ரிஸ்க்குகள் எதுவும் உண்டா?

ஜவுளித் துறையில் அதிலும் குறிப்பாக, ஆயத்த ஆடைத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு இருக்கிற அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்திற்கும் உண்டு.

ஆயத்த ஆடைகளின் விற்பனை என்பது தனிநபர் வருமான அதிகரிப்புக்கு ஏற்பவே அதிகரிக்கும். தனிநபர் வருமானம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவே அமையும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தினால்  பொருளாதாரம் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி அடையாவிட்டாலோ அல்லது சுணக்கநிலை அடைந்தாலோ இந்த நிறுவனத்தின் செயல்பாட்டிலும் அதனுடைய பாதிப்பு பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. மூலப்பொருள்களின் விலை ஏற்றம், எதிர்காலத்தில் எதிர்பாராதவிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ள செலவினங்கள், துறையில் உருவாகக்கூடிய/அதிகரிக்கக்கூடிய போட்டி போன்றவையும் இந்த நிறுவனத்திற்கான ரிஸ்க்காக கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டியவையே ஆகும்.

இப்படி ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும், நீண்ட தொழில் அனுபவத்தினையும், வாடிக்கை யாளர் மத்தியில் நன்மதிப்பைக் கொண்டிருக்கும் பிராண்ட்டைப் பெற்றிருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால் சந்திக்கும் கடுமையான வீழ்ச்சியின்போது வரும் நல்லதொரு விலை இறக்கத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாங்கி, 3-5 ஆண்டு காலத்திற்கான போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ள தொடர்ந்து ட்ராக் செய்யலாம். 

ஏற்கெனவே, ஆயத்த ஆடைகள்/ஜவுளிகள் துறையில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவில் கொண்டிருக்கும் போர்ட்ஃபோலியோவை வைத்திருக்கும் வாசகர்கள் இந்தப் பங்கினைத் தவிர்ப்பதே நல்லது. மேலும், இந்தப் பங்கினை வாங்கியபின் தாங்களாகவே இந்தத் துறை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை ட்ராக் செய்துகொள்ள முடியாத வாசகர்களும் இந்தப் பங்கினைத் தவிர்ப்பதே நல்லது.

- டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol (MONTECARLO)/name of company/time duration)