Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ந்த வாரம் சில சாதக மான செய்திகள் தொடர்ந்து வந்த போதிலும், சந்தை சற்று அடக்கமாகவே காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்ட அதே வேளை, அந்நிய முதலீட்டாளர் கள் பங்குகளை வாங்குவது தொடர்ந்ததுடன், பெரிய  பாதகமான செய்திகள் வரவில்லை.  முன்னணிப் பங்கு கள் சில தினங்களுக்கு ஏற்ற மாகவும், மற்ற தினங்களில் சந்தையை இழுத்துச் செல்லும் வகையிலும் இருந்தன. தேர்தல் முடிவுகள், ரிசர்வ் வங்கி  வட்டியை உயர்த்தக்கூடும் என்பது போன்ற உள்ளூர் காரணிகள்மீதே சந்தையின் சென்டிமென்ட் கவனம் பெற்றிருப்பதாகக் காணப் பட்டது. ஆனால், வட்டி விகிதத்தை தற்போதைய நிலையிலேயே தொடர்வது என ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. வாரத்தின் கடைசியில் சந்தை சரிவடைந்ததைப் பார்க்கும்போது, வட்டி விகிதம் குறைந்தால் பங்குகளை விற்று விரைவாக லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு டிரேடர்கள் மத்தியில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சார்ட்டில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 2018-ல் ஏற்பட்ட ஒட்டுமொத்த சரிவுநிலையின் 50 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் நிலைக்கு வியாழக்கிழமை அன்று நிஃப்டி முன்னேறியதுதான். நிகழ்வு அடிப்படையில் நாம் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதால், டிரேடிங்கில் பங்கேற்றவர்கள் ஸ்டால் லாஸ்க்கு மதிப்புக் கொடுத்து, தங்கள் வாங்கல்களை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவே அதன் தோற்றம் காணப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகளை விற்பதற்கு அழுத்தம் தரக்கூடிய நீண்ட டிரேடிங் பொசிஷன் இருந்தபோதிலும், பெரிய அளவில் பங்குகளை விற்கும் போக்கு எதுவும் உருவாகி விடவில்லை. தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெறுவது தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன. ஆனால், பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர் களிடையே பெரிய அளவில் உற்சாகம் இல்லாததைப் பார்க்கும்போது, அந்தக் கட்சிக்கு தேர்தலில் இழப்பு ஏற்படும் என்பதற்கான சாத்தியம் இருப்பதையே உணர்த்துகிறது. எனவே, தேர்தல் முடிவுகள் ஒருவேளை பி.ஜே.பி-க்கு சாதகமாக அமைந் தால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளது.
நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி  நகர்வு களுமேமுன்னர் காணப்பட்ட சரிவுடன் ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக இருப்ப துடன், பங்குகளின் விலைப்போக்கையும் சரிசெய்துகொள்வதாகவே காணப்படுகின்றன. எனவே, சில பகுதிகளில் சொல்லப்பட்டுக் கொண்டிருப்பதைப் போன்று இந்த நகர்வினால் புதிய உச்சங்கள் ஏற்படும் என நாம் எதிர்பார்க்க முடியாது. இதை ஒரு பின்னணியாகக் கொண்டு, சந்தையின் மேல் நோக்கிய நகர்வுகள் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறுகிய கால டிரேடிங்குக்கு, பங்குகளின் விலை இறங்குவதற்கான ஆதரவு நிலைகள் வரும் வரை முதலீட்டாளர்கள் காத்திருக்க வேண்டும் அல்லது சந்தையின் உணர்வுகளை மாற்றக்கூடிய தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். 

நிஃப்டிக்கான ஸ்டாப்லாஸ் லெவல்களாக 10450 முதல் 10500 வரை வைத்துக்கொள்ளலாம். இதைத் தாண்டிய எந்த ஒரு லெவலும், சந்தையின் மேல்நோக்கிய நகர்வுக்கான சரிப்படுத்தும் நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதற்கான அறிகுறியாக இருக்கும். வருகிற செவ்வாய்க்கிழமை மிக முக்கியமான நாளாகும். அன்று உருவாகும் போக்குகள்தான் சந்தை, தொடர்ந்து எந்தப் பாதையில் செல்லும் என்பதை நமக்கு உணர்த்தும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (DMART)

தற்போதைய விலை: ரூ.1,496.65

வாங்கலாம்


சந்தையில் அதிகம் தேடப்பட்ட பங்குகளில் இதுவும் ஒன்றாகும். சந்தையில் பட்டியலிடப் பட்டதிலிருந்து சில வலுவான ஏற்றங்களைப் பெற்றுள்ளது. சில சரிவுகளுக்குப்பின் தற்போது முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. பங்கு விலை மந்தநிலையிலிருந்து மீண்டு மேல் நோக்கிச் செல்கிறது. அக்டோபர் மாத இறக்கத்திலிருந்து வலுவான ஏற்றத்தைப் பெற்று மீண்டு வந்துள்ளது. தற்போது 62% ரீட்ரேஸ்மென்ட் மண்டலத்தையும் தாண்டிச் செல்கிறது. மேலும், வலுவாக மேலேறும் அறிகுறி தெரிகிறது. குறைந்த பட்சம் ரூ.1,600 வரை ஏறக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.1,475 வைத்து வாங்கலாம்.

மஹாநகர் கேஸ் (MGL)

தற்போதைய விலை: ரூ.873.30

வாங்கலாம்


எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், சிறப்பாகச் செயல்படும் என நீண்ட கால முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  மஹாநகர் கேஸ் நிறுவனப் பங்கு விலை, நீண்ட சரிவான போக்கிலிருந்து மீண்டு எழுந்துள்ளது. 61.8% ரீட்ரேஸ்மென்டை அடைந்து கன்(Gann) ஆங்கிள் சப்போர்ட்டைப் பெற்றுள்ளது. பங்கின் விலை மேலே ஏறுவதற்கான தருணம்போல் தெரிகிறது. சிறிய ரிஸ்க்குடன் முதலீடு செய்யும் புதியவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.750 வைத்து தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய கால இலக்கு விலை ரூ.840.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பாலி மெடிக்யூர் (POLYMED)

தற்போதைய விலை: ரூ.242.85

வாங்கலாம்


முன்னணியிலிருக்கும் பல ஃபார்மா பங்கு களின் விலை இறங்குமுகமாக இருக்கும் நிலையில், சில ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் ஃபார்மா பங்கு களுக்குத் தேவை இருக்கிறது. இந்த வாரத்தில் பாலி மெடிக்யூர் பங்குகளும் வாங்குவதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளன. நீண்ட  மந்த நிலைக்குப்பிறகு நல்லதொரு விலை மற்றும் வால்யூம் காரணமாக மீண்டு வருவதற்கான அறிகுறி தெரிகிறது. தற்போதைய விலைக்கு மேலே பிரேக் அவுட்டாகி தடையை மீறி மேல்நோக்கிச்செல்லக்கூடும். வரும் வாரங்களில் ரூ.270 நோக்கிச்செல்லக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.235.

குறிப்பு : டிச. 6 நிலவரப்படி.

- டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES),  மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!