தங்கம் (மினி)

தங்கம் கடந்த மூன்று வாரங்களாக பல்வேறு நகர்வுகளை உள்ளடக்கி உள்ளது. கடந்த அக்டோபர் 2018-ல் தங்கம் ஒரு வலிமையான ஏற்றத்திற்கு முனைந்தது. 15.10.18 அன்று உச்சமாக 35075 என்ற எல்லையைத் தொட்டபிறகு, தொடர்ந்து ஏற முடியாமல் பக்கவாட்டு நகர்வில் இருந்தது.

இந்த பக்கவாட்டு நகர்வு நவம்பர் முதல் வாரம் வரை தொடர்ந்தது. இந்த பக்கவாட்டு நகர்வின்கீழ் எல்லையான 31540-ஐ நவம்பர் முதல் வார முடிவில் உடைத்து இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் தொடர் இறக்கமாக மாறி, 31540 என்ற எல்லையை உடைத்தபிறகு, 30155 என்ற எல்லையைத் தொட்டது. இந்த இறக்கத்தின்போது நடுவே ஒரு புல்பேக் ரேலியும் அடக்கம் அதனால்தான் இறக்கம் வலிமையாக மாறியது. கீழே 30155 என்ற எல்லையைத் தொட்டபிறகு, ஒரு புல்பேக் ஏற்றம் நிகழலாம் என்று காத்திருக்கும் போது, அது பலமான ஏற்றமாக மாறியது.

03.12.18 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 30257-ஐ தொட்டபிறகு பலமாக ஏறி, அதே நாளில் உச்சமாக 30850-ஐ தொட்டது. அன்றுதான் பங்குச் சந்தை வலிமையான ஏற்றத்திற்குபின், தொடர்ந்து ஏறமுடியாமல் தடுமாறியது. அதன் பின் பங்குச் சந்தை படிப்படியாக இறங்க, இறங்க, தங்கம் படிப்படியாக ஏற ஆரம்பித்துள்ளது. பங்குச் சந்தைக்கும், தங்கத்துக்கும் உள்ள எதிர்மறையான தொடர்பு பலகாலமாக இருந்து வந்தாலும், கடந்த சில மாதங்கள் அந்த உறவுமுறை தவறியது. பங்குச் சந்தை ஏறும்போது, தங்கமும் கூடவே ஏறியதைப் பார்த்தோம். ஆனால், தற்போது மீண்டும் எதிர்மறையான உறவு முறைக்குள் நுழைந்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் தற்போது 30155 என்ற குறைந்தபட்ச புள்ளியில் இருந்து தொடர்ந்து ஏறி வந்தாலும் தற்போது ஒரு முக்கியத் தடைநிலைக்கு அருகில் உள்ளது. முதல் தடை நிலை 30310 ஆகும். அதையும் தாண்டி ஏறினால், அடுத்த வலிமையான தடைநிலை 31540 ஆகும். கீழே ஆதரவு நிலை 30780 ஆகும்.

வெள்ளி (மினி)

தங்கத்தைப்போல வெள்ளியும் இதே காலகட்டத்தில் உச்சமாக 39475-ஐ தொட்டு, பின்பு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது. ஆனால், தங்கம் தொடர்ந்து பக்கவாட்டு நகர்வுகள் இருந்து வந்தபோது, வெள்ளி சற்று முன்னதாகவே பக்கவாட்டு நகர்வில் இருந்து கீழ் எல்லையான 38400 என்ற ஆதரவு எல்லையை உடைத்தது. அதன்பின் படிப்படியாக தங்கத்தைப்போலவே இறங்கிவந்தது. நவம்பர் 2018-ன் முடிவில் குறைந்தபட்ச புள்ளியாக 35579-ஐ தொட்டது. அதன்பின் தங்கம் ஏறியதைப் போலவே ஏறி தடைநிலை அருகில் தயங்கி நிற்கிறது.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி, தங்கம் ஏறியதைவிட கொஞ்சம் பலமாக ஏறி, உடனடித் தடைநிலையான 37170ஐ தாண்டியுள்ளது. அடுத்து தற்போது 37910 என்ற எல்லையை அடுத்த தடைநிலையாக கொண்டுள்ளது. கீழே முந்தைய தடைநிலையான 37170 என்பது உடனடி ஆதரவாகவும், 36640 என்ற எல்லை வலிமையான ஆதரவாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெயின் அக்டோபர் மாதம் 2018 முதல் வாரத்தில் உச்சமாக 5668 என்ற உச்சத்தைத் தொட்ட பிறகு, தொடர்ந்து இறங்கி வருகிறது.

இந்த இறக்கமானது, வலிமையான கரடிகளின் கையில் இருந்ததால், ஒவ்வொரு புல்பேக் ரேலிக்கு பிறகும் அடுத்தடுத்து வலிமையான இறக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தது. இந்த இறக்கம் கீழே 3454 என்ற புள்ளிகளைத் தொடும்வரை நிகழ்ந்தது.

கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய இந்த இறக்கம் நவம்பர் மாதம் கடைசிவரை தொடர்ந்தது. அதன்பின் கடந்த வாரம் ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

கச்சா எண்ணெய் புல்பேக்ரேலியும் கரடிகளால் வலிமையாகத் தடுக்கப்பட்டுள்ள நிலையில் 3890 என்பது உடனடித் தடைநிலையாகவும், கீழே 3450 என்பது மிக முக்கிய ஆதரவு நிலையாகவும் உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், வீழ்ச்சி தொடரலாம்.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in