Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில் 31.10.2018 அன்று உச்சமாக 1846-ஐ தொட்டபிறகு இறங்கி முடிந்தது. அதனால், அன்று ஷூட்டிங் ஸ்டார் வகையான கேண்டில் தோன்றியது.  அதன்பிறகு விலை சற்றே இறங்க ஆரம்பித்தது.  இந்த இறக்கம் 05.11.18 வரை தொடர்ந்து, குறைந்தபட்ச புள்ளியாக     1731-ஐ தொட்டது. அதற்கடுத்து ஐந்து நாள்களும் தொடர்ந்து வலிமையாக ஏறினாலும், முந்தைய உச்சமான 1846  என்ற எல்லைக்கு அருகில் வலிமையாகத் தடுக்கப்பட்டு கீழே இறங்கியது. 

முதல் சில தினங்கள் கொஞ்சம் தட்டு தடுமாறி இறங்கினாலும், அதற்கடுத்து 19.11.18 அன்று 1770 என்ற புள்ளியில் துவங்கி 1724 என்ற எல்லையில் முடிந்தது. இது ஒரு மருபாசு வகை பியரிஷ் கேண்டில் ஆகும்.  அதற்கடுத்த நாள் 1714 என்ற புள்ளியில் கேப்டவுனின் மூலம் இறங்கத் துவங்கி, பின் வலிமையான இறங்கி 1655 என்ற எல்லையைத் தொட்டு அந்த எல்லையிலேயே முடிந்தது.  அதுவும் ஒரு மருபாசு வகை பியரிஷ் கேண்டில் ஆகும்.  

அடுத்த 21.11.18 அன்று தொடர்ந்து ஒரு கேப்டவுனில் 1650 என்ற புள்ளியில் துவங்கி கீழே குறைந்தபட்சமாக 1589 என்ற புள்ளியைத் தொட்டு மீண்டது. அதன்பின் அதுவே ஒரு புல்பேக் ரேலியாக மாறி, அடுத்த ஒரு வாரம் மெள்ள மெள்ள ஏறி உச்சமாக 1703 என்ற புள்ளியைத் தொட்டபிறகு, மீண்டும் கரடிகள் கைக்கு சந்தை மாறியது. அடுத்தடுத்த பலமான இறக்கங்கள் புதிய பாட்டத்தைத் தோற்று வித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்..?

மென்தா ஆயில் பலமான இறக்கத்திற்குப் பிறகு, 1580 என்ற எல்லையை உடனடி ஆதரவாக எடுத்துள்ளது.  மேலே 1650 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காட்டன்

 15.10.2018 என்ற உச்சமாக 23300 என்ற எல்லையைத் தொட்டபிறகு இறங்க ஆரம்பித்தது.  ஒரு வாரம் இறங்கியபிறகு, மீண்டும் ஏறியபோது முன்பு தொட்ட உச்சமான 23300 என்பது வலிமையான தடைநிலையாக மாறியது.  அக்டோபர் மூன்றாம் வாரம் தொடர்ந்து 23280 என்ற எல்லைக்கு அருகில் சென்று தாண்ட முடியாமல் மீண்டும் மீண்டும் இறங்கியது.  அதன் பின் வலிமையாக வீழ்ச்சிக்குப்பிறகு, 22190 என்ற ஆதரவை எடுத்தது.  நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை இந்த ஆதரவு தாக்கு பிடித்தது. அதன்பின் கடுமையான வீழ்ச்சியினால் 21200 என்ற புள்ளியைத் தொட்டபிறகு புல்பேக் ரேலியில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்..?

காட்டன் தற்போது உள்ள புல்பேக் ரேலியின் உடனடித் தடைநிலை 22100 ஆகும்.  உடனடி ஆதரவு நிலை 21540 ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

சென்னா

சென்னா,  என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. நவம்பர் கான்ட்ராக்ட் மென்தா ஆயிலும், காட்டனும் பெரும் வீழ்ச்சியில் இருக்க, சென்னா மட்டும் வலிமையைக் காட்டியுள்ளது.  செப்டம்பர் 2018ல் குறைந்தபட்ச புள்ளியாக 3781-ஐ தொட்டபிறகு, வலிமையாக ஏறி 4239 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின் இறங்கி முந்தைய குறைந்தபட்ச எல்லையான 3781-க்குப் புள்ளிக்கு மேலே 3940 என்ற எல்லையிலேயே புதிய, உயரிய பாட்டத்தைத் தோற்றுவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சென்னா வலிமையான ஏற்றத்தைச் சந்தித்தது. உச்சமாக 4741-ஐ தொட்டபிறகு, ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது. இந்த பக்கவாட்டு எல்லை குறுகியபின், கீழ் எல்லையான 4540 என்ற எல்லையைத் தொட்டு நிற்கிறது.

இனி என்ன செய்யலாம்?

சென்னா தற்போது மேலே 4790 என்ற எல்லையில் தொடர்ந்து  வலிமையாக தடுக்கப் பட்டுள்ளது. கீழே 4430 என்பது முக்கியமான ஆதரவு நிலை ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன்