Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!
பிரீமியம் ஸ்டோரி
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

Published:Updated:
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!
பிரீமியம் ஸ்டோரி
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

ந்திரகுப்த மெளரியரின் மூத்த அமைச்சரான சாணக்யர் (அல்லது கெளடில்யா), இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 400  வருடத்திற்குமுன், முதன்முதலாகப் பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு எப்படி நிர்வகிக்கப்படவேண்டும் என்பது குறித்து ஆவணப்படுத்தினார்.

‘அர்த்த சாஸ்திரம்’ அரசியல்சார் பொருளாதாரம் குறித்த பல்வேறு விஷயங்களைத் தெளிவாக எடுத்துச்சொல்கிறது. நீதிநெறிமுறைகளுடன் கூடிய சட்டங்கள் (சிவில் மற்றும் குற்றவியல்), ஆட்சிமுறை (சிவில் சர்வீஸ் சட்ட திட்டங்கள், அலுவலர்களைத் தேர்வு செய்தல்), அரசியல் ரீதியான தந்திரங்கள், போர்க்காலத்திற்கான தந்திரங்கள் மற்றும் பொருளாதாரம் (எப்படி வரிவிதிப்பது, எதற்கெல்லாம் வரிவிதிப்பது, அரசாங்கம் மற்றும் தனியாரின் பங்களிப்பு) போன்றவற்றை அர்த்த சாஸ்திரம் தெளிவுபடுத்துகிறது. அதற்கு முன்னால்வரை ஆட்சியாளர்களின் பொறுப்பையும் கடமையையும் தெளிவாகக் குறிப்பிட்ட எந்த ஆவணமும் இல்லை. மெளரிய சாம்ராஜ்யத்திற்கான அடித்தளத்தை அர்த்த சாஸ்திரமே அமைத்துக்கொடுத்து 200 ஆண்டுகளுக்குப் பின்னால் அது அசோகர் காலத்தில் சிகரம் தொட பெரும் உதவியாக இருந்தது என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

அந்தக் காலத்திலிருந்து நாம் வேகமாக ஃபாஸ்ட்-பார்வர்ட் செய்து 21 நூற்றாண்டுகளைக் கடந்துவந்தபோது பதினெட்டாம் நூற்றண்டில் ஓர் அமைப்பு முறை சிந்தனையாளர் ஸ்காட்லாந்தில் இருந்துவந்தது தெரியவரும். அவரே ஆடம் ஸ்மித் ஆவார். ஆடம் ஸ்மித் பொருளாதாரம் படித்தவரில்லை. க்ளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள பலிலோல் கல்லூரியிலும் தத்துவம் படித்தவர் அவர். ஆனால், அவருடைய பொருளாதார நுண்ணறிவு மிகவும் பெயர் பெற்றது. அதிலும் 1776-ல் எழுதப்பட்ட அவருடைய தலைசிறந்த படைப்பான நாடுகளின் செழிப்பிற்கான காரண காரியங்கள் குறித்த ஓர் ஆய்வு (An enquiry into the nature and causes of wealth of nations) என்ற புத்தகம் பொருளாதாரம் உலக நாடுகளில் எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கியது.

ஒவ்வொரு தனிமனிதரும் அவருடைய உழைப்பு மற்றும் மூலதனத்தைக்கொண்டு அவருடைய தனிப்பட்ட பலனுக்காக எந்த அளவுக்கு உழைக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் நாட்டுக்காகவும் பொதுநலனுக்காகவும் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ பாடுபடவே செய்கிறார். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உழைக்கும் அவர் கண்ணுக்குத்தெரியாமல் பொதுநலனுக்காகவும் உழைக்கவே செய்கிறார். அதுவும் அவர் எந்த அளவுக்கு பொதுநலனுக்காக உழைக்கிறோம் என்று அளந்து வைத்திருக்கிறாரோ அதைவிட அதிகமாக உழைக்கிறார் என்கிறது ஆடம் ஸ்மித்தின் இந்தப் புத்தகம்.

கட்டுப்பாடுகளற்ற போட்டி நிறைந்த சந்தை (Free Market) குறித்த மேற்சொன்ன கருத்துகளை நாம் அந்தப் புத்தகத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும்.  இந்த மாதிரியான சந்தை சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருப்பதைத் தெளிவுபடுத்து கிறது. தொழில் புரட்சி துவங்கிய அந்தக் கால கட்டத்தில் நவீன பொருளாதாரச் செயல்பாடு களுக்கு ஆடம் ஸ்மித்தின் எழுத்துக்களே அடித்தளமாக இருந்து செயல்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

200 ஆண்டுகளுக்குப் பின்னால் அமெரிக்காவில் இருக்கும் ஒமஹாவில் உள்ள நெப்ரெஸ்கா சார்ந்த ஓர் இளம் முதலீட்டாளர் ஸ்மித்தின் சிந்தனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார். வாரன் பஃபெட் குறைந்த விலையில்  நல்ல அடிப்படைகள் கொண்ட நிறுவனங்களின் பங்குகளை அதிக எண்ணிக்கையில் வாங்கி பிற்காலத்தில் அதிக விலையில் விற்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வந்தார். 1972-லிருந்து இருபது ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அவர் முதலீட்டில் பெற்ற வெற்றி (பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான பெர்க்‌ஷையர் ஹாத்வே ஊடாக அவர் செய்த முதலீட்டினால்) பங்குச் சந்தை என்பது ஒரு சூதாட்டக்காரர்களுக்கான இடம் என்ற எண்ணத்திலிருந்து மாற்றி அதை ஒரு முதலீட்டுக்கான இடமாக அனைவரையும் பார்க்க வைத்தது.

அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை ஆராய்ந்து போட்டி நிறுவனங்களிடமிருந்து வெகுதூரத்தில் பெரிய அகழிகளை (moat – மைக்கெல் போர்ட்டர் காம்பெட்டிட்டிவ் அட்வான்டேஜ் என்ற விஷயத்தைக் கண்டறிவதற்கு முன்னரே பஃபெட் அதைக் கண்டுபிடித்திருந்தார்) கொண்டிருக்கும் நிறுவனங்களில் குறைந்த விலையில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் மிகப்பெரிய அளவிலான லாபத்தைப் பெறலாம் என்ற விஷயத்தைக் கற்றுக்கொடுத்தவர் அவர். பஃபெட்டின் வெற்றியே அமெரிக்க மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கும் அதற்கு பின்னால் வந்த பிரைவேட்-ஈக்விட்டி நிறுவனங்களுக்கும் அடிப்படை சார்ந்த அடித்தளமாக இருந்தது எனலாம்.

பஃபெட் ஒரு மல்டி பில்லியனராகவும், பங்கு மியூச்சுவல் நிறுவன மேனேஜர்களான பீட்டர் லிஞ்ச் மற்றும் ஜான் நெஃப் போன்றவர்கள் அமெரிக்க வீடுகளில் சாதாரணமாக உச்சரிக்கப் படும் பெயராக மாறியதற்கு ஒரு தசாப்தத்திற்கு  பின்னால் ஜிம் சைமன்ஸ் எனும் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தின் பிரபலமான கணிதப்பேராசிரியர் இன்னும் சில அறிஞர் களுடன் இணைந்து இயற்பியல் மற்றும் கணிதத்தின் கூட்டு முயற்சியால் சில பாங்குகளை (pattern) கண்டறிந்து (பங்குச் சந்தையில் மட்டுமல்ல, நிதி நிலை அறிக்கை, வானிலை, அரசியல் போன்ற அனைத்திலும்) அதன்மூலம் முதலீடு களைச் செய்து அதன் மூலம் கணிசமான லாபம் பார்த்து காண்பித்தன.

ரினையசன்ஸ் மெடலியன் ஃபண்ட் எனும் (வால்ஸ் ஸ்ட்ரீட் - பங்குச் சந்தையில் சற்றும் அனுபவமில்லாதவர்களால் நிர்வகிக்கப்பட்ட ஃபண்ட் இது) ஃபண்ட் 1994 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில்  கிட்டத்தட்ட 72% (சிஏஜிஆர் – நிர்வாக கட்டணங்களுக்கு முந்தைய அளவில்) லாபத்தைத் தந்தது. ரினையசன்ஸின் வெற்றி குவான்ட்ஸ் (கணிதம் சார்ந்த முதலீட்டு முறை) மூலம் முதலீடு செய்யும் பெரும் கூட்டத்தை சந்தையில் உருவாக்கியது எனலாம்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்!

சாணக்யரும் ஆடம் ஸ்மித்தும் அவர்கள் காலகட்டத்தில் அவர்களுக்கு இருந்த தீர்க்க தரிசனத்தைக்கொண்டு தனிப்பட்ட லாபம் எதையும் பார்த்துக்கொள்ளவில்லை. அதே சமயம் சிறந்த சிந்தனையாளர்களாகப் போற்றப் பட்டவர்கள். பஃபெட் மற்றும் சைமன்ஸ் போன்றவர்கள் தனிப்பட்ட லாபம் பார்த்தவர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். பல முதலீட்டாளர்கள் இந்த இரண்டுபேரையும் காப்பியடித்து முதலீடு செய்தபோதிலும் யாராலும் அவர்கள் இருவரின் அளவிற்கு லாபம் பார்க்க முடியவில்லை. இணையத்தால் இணைந்த இன்றைய உலகில்கூட தனிப்பட்ட சிந்தனையின் மூலம் முதலீடு செய்து பார்க்கும் லாபத்தைவிட அதை காப்பியடித்து செய்யப்படும் முதலீடுகளில் வரும் லாபம் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது.

குறிப்பு: இங்கு தரப்பட்டிருப்பவை முதலீட்டு ஆலோசனைகளோ அல்லது ஆராய்ச்சிக் கட்டுரையோ அல்ல. மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தக் கட்டுரையின் மூலம் கட்டணத்தையோ அல்லது வியாபாரத்தையோ எதிர்நோக்கவில்லை. இது போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் நிறுவனமாக செபி அமைப்பால்   கட்டுப்படுத்தப்படுகிற ஒரு நிறுவனமாகும்.

- செளரப் முகர்ஜி , நிறுவனர்,  மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ்
(Marcellus Investment Managers)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism