பங்குச் சந்தையில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். இதற்கு சில நூறு ரூபாய் மட்டுமே செலவாகும். இந்தத் தொகையை மிச்சப்படுத்த சிலர் அவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களின் டீமேட் கணக்கில் முதலீட்டை மேற்கொள்வார்கள். இது ஆபத்தில், நஷ்டத்தில் கொண்டுபோய் விட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

உதாரணமாக, மாணிக்கம் தனது நண்பர் சுதாகரின் டீமேட் கணக்கில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார். சுதாகருக்கு திடீரெனப் பணத்தேவை ஏற்பட்டது. அப்போது ரூ.1 லட்சத்துக்கு வாங்கிய பங்கின் மதிப்புக் குறைந்து ரூ.90,000-ஆக இருந்தது. அவசரத் தேவை என்பதால், மாணிக்கத்துக்குத் தகவல் தெரிவிக்காமல் அந்தப் பங்குகளை விற்றுவிட்டார் சுதாகர்.

சில மாதங்கள் கழிந்த நிலையில் பங்குகளின் விலை அதிகரித்துவிட, அதே எண்ணிகை பங்குகளை வாங்க ரூ.1.25 லட்சம் தேவைப்பட்டது. சுதாகரிடம் பணம் இல்லை என்பதால், பங்குகளை வாங்காமல் விட்டுவிட்டார். ஓராண்டு கழித்த நிலையில், தன் முதலீடு ரூ.2.25 லட்சமாக அதிகரித்திருப்பதை மாணிக்கம் அறிந்தார்.

நண்பர் சுதாகரிடம் பங்குகளை விற்றுப் பணமாக்கித் தரச்சொல்ல, நடந்ததைச் சொன்னார் அவர். பங்கை நஷ்டத்துக்கு விற்று விட்டதாகவும், அந்த 90,000 ரூபாயைத்தான் திரும்பத் தரமுடியும் என்றும், அதனையும் மாதம் 10,000 ரூபாயாகத்தான் திரும்பத் தரமுடியும் என்று சொன்னார் சுதாகர்.

மாணிக்கத்துக்கு இப்போதுதான் தான் செய்த தவறு புரிந்தது. சொற்பமான தொகையை மிச்சப்படுத்த நினைத்தால், பெரிய தொகையை இழக்க வேண்டியிருக்கும், ஜாக்கிரதை!

- சி.சரவணன்