Published:Updated:

ஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்!

ஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்!

ருக்குக் கிளம்புகிறேன்; இரவு ஏழு மணி விமானப் பயணம். ஆறு மணிக்கு போன் செய்தால், உங்கள் கேள்விக்கான பதில்களை விமான நிலையத்திலிருந்தபடி சொல்லிவிடுகிறேன்’’  என்று நமக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். அவர் கேட்டுக்கொண்டபடி ஆறு மணிக்கு அவரை அழைக்க நம் கேள்விகளுக்குப்  பதில் சொன்னார் அவர். 

எய்ச்சர் பங்கு விலை தொடர்ந்து இறக்கம் கண்டுவருகிறதே?

“2018 டிசம்பர் காலாண்டில் இதன் ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகன விற்பனை, 13% குறைந்து 58,278 ஆனது. இதன்பிறகு பங்கின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பங்கின் விலை 52 வார குறைந்த பட்ச விலைக்குக்கீழே இறங்கி ரூ.20,250 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.”

வங்கிகள் இணைப்பு விஷயம் பேங்க் ஆஃப் பரோடா முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருக்கிறதே?

“பொதுத்துறை வங்கிகள் தேனா வங்கி வங்கி, விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடா உடனான இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த இணைப்பில் பேங்க் ஆஃப் பரோடா சொத்து தரத்தில் முன்னணியில் இருக்கிறது. அந்தவகையில் அந்த வங்கிப் பங்குகளை வைத்திருப்பவர்களுக்குப் புதிய வங்கியின் கூடுதல் பங்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இப்போதைய நிலையில், 1000 விஜயா பேங்க் பங்குகளை வைத்திருந்தால், 402 பேங்க் ஆஃப் பரோடா பங்குகள் கிடைக்கும். 1000 தேனா பேங்க் பங்குகள் வைத்திருந்தால், 110 பேங்க் ஆஃப் பரோடா பங்குகள் கிடைக்கும். வருகிற ஏப்ரல் 1-ம் தேதிக்குள் இந்த இணைப்பு வேலை முடிந்துவிடும் என்கிறது வங்கித் தரப்பு. இந்த இணைப்பு நடந்துமுடிந்தபின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாகவும், நாட்டிலேயே பெரிய மூன்றாவது வங்கியாகவும் இருக்கும். (முதலிடத்தில் எஸ்.பி.ஐ வங்கியும், இரண்டாம் இடத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் இருக்கிறது) அந்த வகையில், பேங்க் ஆஃப் பரோடா பங்குகளை வாங்க அனலிஸ்ட்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.”

ஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்!

டயர் பங்குகளின் விலை உயர்வு வேகமெடுத்திருக்கிறதே?

“டயர் தயாரிப்பில் முக்கிய மூலப் பொருளாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இறக்கம் கண்டுவருகிறது. இதனையடுத்து டயர் தயாரிப்பு நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டுவருகின்றன. கடந்த மூன்று மாதங்களில்  இந்தப் பங்குகள் 5-15% விலை ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, அப்போலோ டயர்ஸ் பங்கின் விலை நன்கு ஏறியிருக்கிறது.”

அமெரிக்காவில் இப்போதைக்கு வங்கி வட்டி உயர்வு இருக்காது போலிருக்கிறதே?

“சர்வதேச வளர்ச்சி நிலவரம், நிதி நிலைமை போன்றவற்றை அலசி ஆராய்ந்த பிறகே மீண்டும் வட்டி உயர்த்தப்படும் என அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-ன் தலைவர்  ராபர்ட் கப்லன் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னைகள் தீரும்முன் மீண்டும் வட்டியை உயர்த்தமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியப் பங்குச் சந்தைக்குச் சாதகமாக மாறியுள்ளது.”

இந்தியாவில் இ.டி.எஃப்-களில் செய்யப்பட்ட முதலீடு சாதனை அளவாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறதே?

“உண்மைதான். கடந்த ஓராண்டு காலத்தில் 32 லார்ஜ்கேப் ஃபண்டுகளில் இரண்டு ஃபண்டுகள் மட்டுமே அவற்றின் பெஞ்ச்மார்கைவிட அதிக வருமானம் கொடுத்திருக்கின்றன. ஆக்டிவ்-ஆக நிர்வகிக்கப்படும் லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்படத் தவறியதால், பல நிதி ஆலோசகர்கள் இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது இ.டி.எஃப்-களை (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள்) முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்து வருகிறார்கள். இதன் விளைவாக,    இ.டி.எஃப்-கள்மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

சிறு முதலீட்டாளர்கள் மற்றும் பெரும்பணக்காரர்கள் எனப் பலரும் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்துவருவது அதிகரித்துள்ளது. பி.எஃப் பணத்தின் ஒருபகுதி கட்டாயம் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யவேண்டும் என்பதும் இ.டி.எஃப் முதலீடு அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கிறது. இ.டி.எஃப்-களில் ரிஸ்க் மற்றும் செலவு விகிதம் குறைவு என்பதாலும் பலரும் அதனை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஃபண்டுகள் ஏதாவது ஒரு பிரதான பங்குச் சந்தை குறியீட்டைப் பின்பற்றி முதலீடு செய்வதாக இருக்கின்றன.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிரேடர்ஸ் பக்கங்கள் பகுதியைப் படிக்க:https://bit.ly/2CP0wf6

மீண்டும் கொண்டுவரப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாய வரி முதலீட்டாளர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

“மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 1,058 பங்குகளில் 862 பங்குகள் 2018, ஜனவரி 31-ம் தேதியிலிருந்து நஷ்டத்தையே கொடுத்ததால், நிறுவனங்களின் பங்குகளுக்கு விதிக்கப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பு அந்த ஆண்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த 862 பங்குகளையும் சந்தையின் தற்போதைய விலையில் விற்ற முதலீட்டாளர்கள் சல்லிக்காசுகூட நீண்ட கால மூலதன ஆதாய வரியாகச் செலுத்தவில்லை. ஆனால், வி மார்ட், நெஸ்லே, பாட்டா, எக்ஸெல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இந்தியா புல்ஸ் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட குறைந்தது 100 பங்குகளிலாவது முதலீட்டாளர்கள், தங்கள் லாபம் குறைவதைப் பார்க்க நேரிடும். இந்த நிலையில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் ஏற்பட்ட கடும்சரிவினால், முதலீட்டாளர்களுக்கு 80 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளுக்கு மிகச் சிறிய அளவிலேயே மூலதன ஆதாயம் கிடைத்தது.”

2018-ம் ஆண்டு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எப்படி அமைந்தது?

“2018-ம் ஆண்டு பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாகவே இருந்த நிலையில், முதலீட்டாளர்கள் சுமார் 7.25 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் 7,25,401.31 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2018-ல் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,011.5 புள்ளிகள் அல்லது 5.90% ஆதாயம் அடைந்துள்ளது. ஆகஸ்ட் 29-ம் தேதியன்று சென்செக்ஸ் அதுவரை இல்லாத அளவுக்கு 38,989.65 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை எட்டிய நிலையில், பின்னர் 2,921.32 அல்லது 7.5% சரிவுடன் 36,068.33 என்ற வீழ்ச்சி நிலைக்கும் சென்றது.”

கடந்த ஆண்டில் சென்செக்ஸ் நல்ல வருமானம் தரவில்லை என்று பலரும் குறைப்பட்டுக் கொள்கிறார்களே! 

“பங்குச் சந்தையின் செயல்பாட்டைக் கடந்த நான்கைந்து ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், அதிக ஏற்ற இறக்கம் இருந்தது கடந்த ஆண்டில்தான். கடந்த  ஆண்டின் முதல் பாதியில் முதலீட்டாளர் களுக்கு லாபமாக அமைந்த பங்குச் சந்தை இரண்டாம் பாதியில் இழப்பை ஏற்படுத்திவிட்டது. மேலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் வெளியேறிய போதிலும், சென்செக்ஸ்  6 சதவிகித ஆதாயத்தைக் காண்பித்து, உலக அளவில் மற்றும் ஆசிய அளவில் சிறப்பாகச் செயல்பட்ட  சந்தைகளில் ஒன்றாக மும்பை பங்குச் சந்தைக்கு மதிப்புத் தேடித் தந்தது. சந்தையின் இயல்பு என்ன என்பது வெளிப்பட்டதால் இதுவும் 2018-ல் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.”

வாராக் கடன்கள் அளவு குறையும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளதே?

“வாராக் கடன்களின் விகிதம் குறைந்து கடந்த ஆண்டிலிருந்து மேம்பட்டுள்ளதாகவும், 2019 மார்ச் மாதத்தில் வெளியாகும் காலாண்டு முடிவுகளில் இந்த விகிதம் மேலும் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதுள்ள வாராக் கடன்களின் அளவு இன்னும் அதிகம் என்று உணரும் விதமாகவே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

2018 மார்ச் மாதத்தில் மொத்த வாராக் கடன் 11 சதவிகிதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் அது 10.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருக்கும் பல அழுத்தமான நடவடிக்கைகளினால் 2019 மார்ச் மாதத்தில் இது 10.3 சதவிகிதமாகக் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.”

என்.சி.டி-களில் முதலீடு செய்யப்படும் தொகை கணிசமாக அதிகரித்திருக்கிறதே!

“2018-ம் ஆண்டில் சில்லறைப் பிரிவு முதலீட்டாளர்களிடமிருந்து என்.சி.டி-கள் எனப்படும் மாற்ற இயலாத கடன் பத்திர வெளியீட்டின்மூலம் இந்திய நிறுவனங்கள் சுமார் 29,394 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி உள்ளதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில் திரட்டப்பட்ட 9,779 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், மூன்று மடங்கு அதிகமாகும்.

இத்தகைய கடன் பத்திரங்கள்மீது பொதுத்துறை வங்கிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டாதது மற்றும் வங்கிகளின் குறைவான வட்டி விகிதம் போன்றவைதான் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கடன் பத்திர வெளியீட்டின்மூலம், சந்தையில் நிதித் திரட்ட வைத்திருப்பதாக நிதித் துறை நிபுணர்கள் சொல்கிறார்கள்.’’
 
ஐ.பி.ஓ-களில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்களைவிட நம் நாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதே!

‘‘ஐ.பி.ஓ-களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களும் உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து முதலீடு செய்த தொகை கடந்த ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களைவிட அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டில்           ஐ.பி.ஓ-வில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 3,185 கோடி ரூபாயும், உள்நாட்டு நிறுவனங்கள் 834 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.

ஆனால், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்த தொகை 3,817 கோடி ரூபாய் மட்டுமே. இந்த ட்ரெண்ட் 2019-லும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனெனில், இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடக்கவிருப்பதால், ஐ.பி.ஓ வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்’’ என்றவர், கொஞ்சம் பதற்றத்துடன் பேசத் தொடங்கினார். ‘‘விமானம் ஏறுவதற்கு எனக்கு நேரமாகிவிட்டது. எனவே, அடுத்த வாரம் உம்மை நேரில் வந்து சந்திக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்தார். 

- ஷேர்லக்

சென்னையில் ஃபின்டெக் நிறுவனங்கள்!

வருகிற 23, 24-ம் தேதிகளில் சென்னை வேர்ல்டு டிரேட் சென்டரில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்தவேண்டும் எனத் தமிழக அரசின் அமைச்சர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மும்மரமாகச் செயல்பட்டு வருகின்றனர். நிதித்துறை சார்ந்த தொழில்நுட்பங்களைத் தரும் ‘ஃபின்டெக்’ நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகிறமாதிரி ஒரு சிறப்பு மண்டலம் அமைக்கப்படலாம் என்கிற அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.  தமிழகத்தில் ஐ.டி கம்பெனிகளும் அதிகம். நிதித் துறை சார்ந்த நிபுணர்களும் அதிகம். இந்த இருவகை நிபுணர்களையும் ஒருங்கிணைக்கிறமாதிரி இந்த சிறப்பு மண்டலம் அமைக்கப்படும் என்று தகவல். இந்த சிறப்பு மண்டலம் சென்னையில் வந்தால், மும்பைக்கு அடுத்து ‘ஃபைனான்ஷியல் ஹப்’ ஆக சென்னை மாற வாய்ப்புண்டு!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் நிகழ்ச்சியைப் பார்க்க:  https://www.youtube.com/watch?v=KxbpQ41Troo