Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

 நிஃப்டி இண்டெக்ஸ்

இந்த 2019-ம் ஆண்டு நமது வாசகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ஆண்டாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2018-ம் ஆண்டை ஆய்வு செய்தோம் என்றால், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சரிவடைந்து கீழிறங்கிய கடுமையான ஆண்டாக இருந்ததை நாம் காணலாம். ஒரு சில பங்குகள் சற்று ஆசுவாசப்படுத்த வைத்தன என்றாலும், பெரும்பாலான பங்குகள் சரிவு நிலையிலேயே காணப்பட்ட நிலையில், சில பங்குகள் அதலபாதாளத்துக்குச் சென்றன.

ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளுக்குத் துயர நிலைதான். சந்தை ஏற்றத்தில் இருந்தால் நல்ல வருமானத்தையும், அதேசமயம் சரிவின்போது அசலுக்கே மோசம் என்ற நிலையில்தான் இந்தவகைப் பங்குகள் உள்ளன. எனவே, சரிவு நிலையின்போது பாதிக்கப்படுவதைத் தவிர்க்க மதிநுட்பத்துடன் பங்குகளைத் தேர்வு செய்வது அவசியம். ஒருவேளை நமது வாசகர்கள் சில மோசமான பங்குகளைத் தேர்வு செய்து போராடிக் கொண்டிருந்தால்கூட இந்த ஆண்டில் சில நல்ல பங்குகளைப் பெற்றிருக்க முடிந்திருக்கும் என நம்புகிறோம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

புது வருடம் அத்தனை உற்சாகமாகத் தொடங்க வில்லை. அக்டோபரிலிருந்து காணப்பட்ட ஏற்றமான போக்கு முடிவுக்கு வந்த பின்னர், சந்தைச் சற்று சரிவு நிலைக்குச் செல்லும் மனோபாவத்தில் இருக்கிறது. இந்தச் சரிவு நிலை, ஒரு வீழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான அளவில் கீழிறங்கி காணப்படுகிறது. ஆகவே, அது இன்னும் எந்தவொரு பெரிய அளவிலான சென்டிமென்ட் எதையும் உருவாக்கவில்லை. ஆனாலும், கடந்த ஓரிரு மாதங்களாக நாம் கண்ட ஏற்றமான போக்கு நிச்சயம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனாலும், வெகு விரைவிலேயே டிசம்பர் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கும். அப்படி வரத் தொடங்கிவிட்டால், சந்தை உற்சாகமாகி விடும். சந்தை தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்ள, சிறப்பாகச் செயல்படும் பங்குகளுக்கு நல்ல வருவாயை அளிப்பது, செயல்படாத பங்கு களைத் தண்டிப்பது என இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டியதிருக்கலாம். எனவே, சந்தையின் எந்தப் பக்க நகர்வினாலும் பாதிக்கப்படலாம் என்பதால் உங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தை இந்த வாரம் சரிவான போக்கு கொண்டதாகவே இருந்ததோடு, வரவிருக்கும் வாரத்துக்கும் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையிலேயே சந்தை செயல்படுகிறது. அநேகமாகச் செய்திகள் வரத்து உருவாகும் வரை இன்னொரு வாரத்துக்கும் இந்த மந்தமான சரிவு நிலை தொடரக்கூடும். இது வர்த்தகத்தைச் சற்று கட்டுக்குள் வைத்திருக்கும். ஆனாலும், தேர்ந்தெடுத்த பங்குகள் மீதான முதலீடுகளைத் தொடரலாம். ஆனால், தற்போதைய நிலையில் வருவாய்க்கான எதிர்பார்ப்புகளைக் குறைவாகவே வைத்துக்கொண்டு, அதற்கான காலத்தை நீட்டித்துக்கொண்டால், அதற்கான பலன்கள் கிடைக்கும்.

கடந்த வாரத்தில் 10500 புள்ளிகளை ஆதரவு நிலையாக வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போது வரை அந்தக் கருத்தில் மாற்றமில்லை. அதற்கும் கீழே சென்றால், அந்த நிலையைப் பயன்படுத்தி சந்தையில் மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்கலாம். தற்போதைக்கு, 10900 புள்ளிகளுடன் கூடிய நிலை, ஒரு நல்ல சப்ளை பகுதியாக உள்ளது. இந்த நிலை   உறுதியாக மீறப்பட்டால் மட்டுமே மேலும் ஆதாயங்கள் கிடைக்கும்.

பார்தி இன்ஃப்ராடெல் (INFRATEL)

தற்போதைய விலை: ரூ.287

வாங்கலாம் 

டெலிகாம் பிசினஸ் பெரும்பாலும் நெருக்கடி களுக்கு மத்தியிலேயே உள்ளது. குறிப்பாக ஜியோவின் வருகைக்குப் பிறகு நிறைய மாறுதல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. டெலிகாம் உள்கட்டமைப்பு தற்போது அடிமட்டத்திலிருந்து மீள்வதுபோல் தெரிகிறது. செல்பேசி கோபுரங்களை அமைக்கும் பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனம் பல மாதங்களாகப் பெரிய நெருக்கடிக்குள் இருந்தது. தொடர்ந்து பல மாதங்களாக சரிவடைந்ததற்குப்பின் தற்போது முதன்முறையாக மேலெழும்பும் செயல்பாடு சார்ட்டில் தெரிகிறது. இங்கு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புத் தெரிகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.270 வைத்து வாங்கலாம். குறுகிய கால இலக்காக ரூ.297-310 வரை விலை ஏறக்கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சம்பல் ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் (CHAMBLFERT)

தற்போதைய விலை: ரூ.155.30

வாங்கலாம்

பொது பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப் படவுள்ளது. இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட்டாக இருக்காது என்றாலும்கூட பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க விவசாயிகளுக்குச் சாதகமாக விவசாயம்சார்ந்த சில திட்டங்கள் பட்ஜெட்டில் இருக்குமெனத் தெரிகிறது. அதனால் உர நிறுவனங்களும் பயனடையக்கூடும். சம்பல் நிறுவனப் பங்கு விலை ரூ.130-35 அருகே நல்லதொரு சப்போர்ட்டை சார்ட்டில் காட்டுகின்றன. எனவே, அதிலிருந்து விலை உயரலாம். இது மீண்டும் புதிய உத்வேகத்துடன் மேலேறக்கூடும். இலக்கு ரூ.170 வைத்து வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.145.

நெல்கோ (NELCO)

தற்போதைய விலை: ரூ.275.00

வாங்கலாம்

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தப் பங்கு  பழைய போர்க்குதிரை போன்ற நிறுவனமாகும். 2017 வரை நல்லவிதமான போக்கு நிலவியது. பின்னர் 2018-ல் சரிவடைந்தது. இந்த விலை வீழ்ச்சியானது 50% அளவிற்கு விழுந்து ஓர் எழுச்சிக்குத் தயாரான நிலையில் உள்ளது . ஒரு நிலையான நிலையை அடைந்து சப்போர்ட் பகுதியிலிருந்து விலை மேலேறுவதுபோல் உள்ளது. குறுகிய கால இலக்காக ரூ.290-300 வரை உயருமென்று எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.260 வைத்து உடனடி ஏற்றத்தை எதிர்பார்த்து வாங்கலாம்.

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES),  மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.