நடப்பு
Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

திர்காலம் குறித்துக் கணித்துச் சொல்லும் கலை என்பது மிகப் பழைமையான ஒன்றாகும். எத்தனை முறை  கணிப்புகள் பொய்த்தாலும், இதெல்லாம் கதைக்கு உதவாது என்று நிரூபிக்கப்பட்டாலும்கூட எதிர்காலம் குறித்துக் கணித்துச் சொல்கிறவர்களின் புகழ் கொஞ்சமும் குறையாமலே இருக்கிறது. இந்தப் புகழ் கொடுக்கும் தெம்பினாலேயே அடுத்த வருடம் சந்தை எப்படியிருக்கும் என்பது குறித்து நான் என்னுடைய கணிப்பைச் சொல்கிறேன்.

நான் இப்போது சொல்லவிருக்கும் கணிப்புகள் பலவும் நடக்காமலே போக வாய்ப்புண்டு  என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டே இந்தக் கணிப்புகளைச் சொல்கிறேன்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

   ஆளும்கட்சி ஜெயிக்குமா?

ஆளும்கட்சிக்கும் சந்தையின் போக்கிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை டேட்டாக்கள் தெளிவாகக் காட்டுகிறது என்று ஏற்கெனவே நான் நாணயம் விகடன் வாயிலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.  ஏனென்றால், நம் நாட்டில் இருக்கும் கட்சிகளுக்குள் பொருளாதார ரீதியில் பெரிய அளவிலான கொள்கை வேறுபாடுகள் எதுவும் இல்லை. அரசியல்ரீதியாக முந்தைய காலத் தேர்தல் வெற்றிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், எப்போதுமே சராசரியை நோக்கித் திரும்பும் போக்கே இருந்துவந்துள்ளது (Reversion to the mean).

அதாவது, சென்றமுறை எதிர்பாராத அளவிலான மெஜாரிட்டியை ஆளும்கட்சி  பெற்றதால், 2019-ல் நடக்க உள்ள பொதுத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம் என்பதே புள்ளியியல் ரீதியான நிலைமை. இதுபோன்ற சூழ்நிலை உருவாகி, அதனால் பங்குச் சந்தையில் ஒரு இறக்கம் வந்து நிஃப்டி 9500-க்குக்கீழே சென்றால் அதை வாங்குவதற்கான வாய்ப்பாகவே கருதவேண்டும்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

   குறையும் கமாடிட்டிகளின் விலை

கடந்த பத்துஆண்டுகளில் செயற்கையாக ஏற்படுத்தப்பட அதிக பணப்புழக்கம் (QE) காரணமாக ஏற்பட்ட பொருளா தார வளர்ச்சி முடிவடைந்து வளர்ந்த நாடுகளின் பொருளா தாரங்கள் சற்றே மந்தமாகி வருவது கண்கூடாகத் தெரிகிறது. இதனால் கமாடிட்டிகள் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை கொஞ்சம் மந்தகதியிலேயே 2019-ல் இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலைமை இந்தியப் பொருளாதாரத்திற்குக் கொஞ்சம் உகந்ததே.

கச்சா எண்ணை இறக்கு மதிக்குப் பெரிய அளவிலான அந்நிய செலாவணி செலவினம் இல்லாமல் போக வாய்ப்புள்ளதால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை  குறைய ஒரு வாய்ப்பினை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். கமாடிட்டி விலை குறைவு என்பது ஸ்மால்கேப் கம்பெனிகளுக்கு நல்ல செய்தியாகும். பெரிய அளவிலான பேரம் பேசும் திறன் இல்லாத இந்த நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் உயர்ந்த கமாடிட்டி விலையினா லேயே லாபக்குறைவினால் தத்தளிக்க ஆரம்பித்தன. இந்த நிலை 2019-ல் மாற வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது.

   ரியல் எஸ்டேட் எப்படி இருக்கும்?

இந்திய ரியல் எஸ்டேட்  கடந்த பத்தாண்டு காலமாக ஏற்ற இறக்கமாக இயங்கிவரும் சந்தை யாகும். 1995-2004-ல் நடந்த வீழ்ச்சிக்குப்பின்னர் 2004-14 காலகட்டத்தில் தீவிரமான ஏற்றத்தைச் சந்தித்தது ரியல் எஸ்டேட். நடப்பில் இருக்கும் ரியல் எஸ்டேட் சந்தையின் இறக்குமுகமானது இன்னமும் சில பல ஆண்டுகளுக்குப்  பின்வரும் காரணங்களால் தொடர வாய்ப்புள்ளது.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

1) விலைக்கும் வாடகைக்கும் இடையேயான விகிதாசாரம் (2-3 % அளவில் இருக்கிறது) மிக மிகக் குறைவாக இருப்பதால், சொத்துகளை வாங்க நினைப்பவர்கள் தயங்குகின்றனர். 2) வீட்டுவசதிக்கான வட்டி 2018-ல் 1.5% அதிகரித்திருந்தது. உலகளவில் வட்டி விகிதம் அதிகரித்து வருவதால், இந்த நிலையே இங்கேயும் தொடர வாய்ப்புள்ளது. 3) வாங்கிய கடனைத் திருப்பச் செலுத்த முடியாத ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிறுவனக் கலைப்புக்காக என்.சி.எல்.டி-க்குச் செல்ல வாய்ப்புள்ளது.     ஐ.எல் & எஃப்.எஸ் பிரச்னைக்குப்பிறகு, ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கடனைக் காப்பாற்றும் முயற்சியை முழுவதும் கைவிட்டுவிட வாய்ப்பு உள்ளது. வீடுகளைத் தவிர்த்து, நிலம், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள், தொழிற்சாலைகள், சாலைகள் போன்ற ரியல் எஸ்டேட் சொத்துகளின் மதிப்பீட்டில் நியாயமான மதிப்பீடு செய்யப்படும் வாய்ப்பு 2019-ல் இருக்கிறது. இந்தவித சொத்துகளை வாங்குவதில் சிறப்பான மதிப்பீடு செய்யும் திறமை கொண்ட முதலீட்டாளர்கள் இந்தச் சொத்துகளில் கவனம் வைக்கலாம்.

   வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஏற்படுத்தும் சிக்கல்கள்

அடுத்த ஆண்டின் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கப் போவது வங்கித்துறைதான்.  எந்தவொரு அரசாங்கத்திற்கும் நாட்டுடமையாக்கப்பட்ட பெரிய வங்கிகளைத் தனியார் வங்கிகளாக்கும் துணிவு இல்லை என்பதே நிதர்சனமான நிலைமை.  இந்த நாட்டுடமையாக் கப்பட்ட வங்கிகளே வங்கித் துறையில் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. இந்தப் பெரிய வங்கிகளில் உள்ள சிக்கல்களால் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி-கள்)  தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்கின்றன. 

 இந்த என்.பி.எஃப்.சி-களின் நிலை என்னவென்று பார்த்தால், பின்வரும் நிலைமைகள்  புரியவரும்... 1) முதலீட்டுக்கும் கடனுக்கும் உள்ள சதவிகிதத்தில் 8-12x என்ற உச்சக்கடன் – முதலீடு விகிதாசாரம் 2) ஏகத்துக்கும் அதிகமாக இருக்கிற அஸெட்-லியபிலிட்டி மிஸ் மேட்ச். அதாவது, சொத்துகளுக்கும் (கடன் கொடுத்த), நிறுவனம் தரவேண்டிய (கடன் வாங்கியுள்ள) பணத்தின் அளவிற்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசம்; இருபது ஆண்டுகாலக் கடனை வழங்குவதற்குப் பணச் சந்தையில் மூன்று முதல் 12 மாத காலத்திற்கானப் பணத்தைப் பெற்றுத் தொழில் செய்தல். 3) வெளிப்படையான கணக்குவழக்கு நடைமுறைகளைப் பின்பற்றாதிருத்தல். இந்த மூன்று விஷயங்களும் இந்திய நிதிச் சந்தையில் ஒரு அடிப்படைக் கட்டமைப்பு ரீதியான சிக்கலைக் கொண்டுவந்துவிட்டன.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

  சச்சின் டெண்டுல்கர் மாதிரி இருங்கள்

என்னைப்பொறுத்தவரை, இன்னும் சில மாதங்களில்  இந்த விஷயங்களின் பாதிப்புகள் முழுமையாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.  இப்படிப் பட்ட பாதிப்புகள் சந்தைக் கட்டமைப்பில் ஏற்படும்போது சந்தையைச் சார்ந்திருந்து, சம்பாதித்து நம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நீண்ட நாள்களாகும். ஏனென்றால், கட்டமைப்பைச் சரிசெய்து கொள்வதற்கும், அதற்குப் பின்னால் முதலீட்டா ளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்ப தற்கும் அதிக அவகாசம் தேவைப்படலாம். அதனாலேயே இந்தியப் பங்குச் சந்தை இளகிய மனம் கொண்டவர்களுக்கோ அல்லது தாறுமாறான ரிஸ்க் எடுக்கும் குணம் கொண்டவர்களுக்கோ உகந்ததாக இருக்காது. மத்திமமான ரிஸ்க் எடுக்கக் கூடியவர்களுக்கே உரித்தானதாக இந்தியப் பங்குச் சந்தை இருக்கும்.

குறிப்பாகச் சொன்னால், கிரிக்கெட் வீரர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் வீரேந்தர் ஷேவாக் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களின் ஆட்டப்போக்கைக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களைவிட சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்டைப் போன்ற ஆட்டக்காரர்களின்  செயல்பாட்டைக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களே சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க வாய்ப்பிருக்கிறது!

- செளரப் முகர்ஜி , நிறுவனர்,  மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)