Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் ( மினி )

தங்கம், பங்குச் சந்தை இரண்டும் ஒரு நிச்சயமற்ற தன்மையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. கடந்த வாரங்களில் பங்குச் சந்தை வலிமைகுன்ற ஆரம்பித்த வுடன், தங்கம் மேல்நோக்கி ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் 19.12.2018ல் இருந்து ஆரம்பித்தது. அப்போது குறைந்தபட்ச புள்ளியாக 31021 என்ற புள்ளியில் இருந்து மேல்நோக்கி நகர ஆரம்பித்த தங்கம், 27.12.2018 அன்று உச்சமாக 31760ஐ தொட்டபின், கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தது.  அந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தை சற்றே வலிமை குன்ற ஆரம்பித்தது. ஆனால், பங்குச் சந்தை 27.12.2018 அன்று வலிமையாக மேலே திரும்ப ஆரம்பித்தது. அடுத்து, தொடர்ந்து நான்கு நாள்கள் பங்குச் சந்தை நல்ல ஏற்றத்தைக் காட்டியது. அந்தக் காலகட்டத்தில் தங்கம் படிப்படியாக இறங்க ஆரம்பித்தது.  27.12.2018 அன்று உச்சமாக 31760-ஐ தொட்ட தங்கம் இறங்கி 31.12.2018 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 31310-ஐ தொட்டது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பங்குச் சந்தை இறங்க ஆரம்பித்தது.  ஆனால், தங்கம் வலிமையான ஏற்றத்தைக் காட்டி 31310 என்ற எல்லையிலிருந்து ஏறி உச்சமாக 04.01.2018 அன்று 31925-ஐ தொட்டது. அதாவது 27.12.2018 அன்று தொட்ட உச்சமான  31760-ஐயும் தாண்டி 31925-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று பங்குச் சந்தை சற்றே மேலே திரும்ப ஆரம்பித்த நிலையில் தங்கம் சற்றே தடுமாற ஆரம்பித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது 30900 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 31370 என்ற எல்லை தடைநிலையாகக் கொண்டுள்ளது.” தங்கம், முந்தைய இதழில் நாம் குறிப்பிட்டிருந்த தடைநிலையான 31370-ஐ தாண்டி அதிகபட்சமாக 31925-ஐ தொட்டது.  வாரத்தின் கடைசி தினத்தில் சற்றே வலிமை குன்ற ஆரம்பித்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்?  தங்கம் தற்போது 31570 என்ற எல்லையை உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 31920 என்பது வலிமையான தடைநிலை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

வெள்ளி ( மினி )

வெள்ளி தங்கத்தின் திசையில் நகர்ந்துவருவது உண்மைதான். ஆனால், அவ்வப்போது தங்கத்தைவிட அதிக வலிமை காட்டி வருகிறது. கடந்த வாரங் களில் பங்குச் சந்தை ஏறியபோது தங்கம் இறங்கித்தான் பிறகு ஏறியது.  ஆனால், அதே காலகட்டத்தில் வெள்ளி ஒரு பக்கவாட்டு நகர்வைக் கடைப்பிடித்தது.  அதாவது தங்கம் 31.12.2018 அன்று நன்கு இறங்கிய நிலையில், வெள்ளியானது பெரிய மாற்றம் இல்லாமல் 38814 என்ற புள்ளியில் முடிந்து டோஜியை உருவாக்கியது. கடந்த வாரம் சொன்னது… “தற்போது தொடர் இறக்கத்தில் உள்ள வெள்ளி இந்த 37000 என்ற எல்லையை ஆதரவாக எடுக்கலாம். இந்த நிலையில் 37850 என்பது முக்கியத் தடைநிலையாக உள்ளது.” வெள்ளி 37850 என்ற தடையை உடைத்து மிக வலிமையாக ஏறி, 39690 என்ற உச்சம் வரை ஏறியது குறிப்பிடத்தக்கது.

இனி என்ன செய்யலாம்? சற்றே வலிமை குன்ற ஆரம்பித்த நிலையில் வெள்ளி தற்போது 39180 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 39600 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் ( மினி )

சென்ற வாரம் சொன்னது… கச்சா எண்ணெய் இனி எங்குபோய் முடியுமோ தெரிய வில்லை என்று சொல்லும் அளவிற்கு, தொடர்ந்து இறங்கிவருகிறது.  இந்த நிலையில் முந்தைய ஆதரவான 3440 தற்போது தடைநிலையாக மாறலாம்.  கீழே 3150 உடனடி ஆதரவு ஆகும்.

கச்சா எண்ணெய் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லை யான 3150-ஐயும் உடைத்து இன்னும் வலிமையாக இறங்கி, 26.12.2018 அன்று 2965 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. அன்று ஏறுமுகமாக மாறக்கூடிய பியர்சிங் பேட்டர்ன் என்ற கேண்டில் வகையைத் தோற்றுவித்து மேலே ஏற ஆரம்பித்தது.   இனி என்ன செய்யலாம்?

கச்சா எண்ணெய் பலமான இறக்கத்திற்குப் பிறகு, மேலே திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் முக்கியத் தடைநிலை 3410 ஆகும்.  கீழே ஆதரவு நிலை 3220 ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in