Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், ஒரு ஒரு வலிமையான மற்றும் தொடர் டவுன்ட்ரெண்டில் இருந்து வருவதைக் கடந்த இதழில் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்தத் தொடர் இறக்கம் முடிவுக்கு வரவேண்டுமானால், அதற்கு ட்ரெண்ட் ரிவர்ஷல் எனப்படும் உருவமைப்போ அல்லது கேண்டில் பேட்டர்ன் தோன்ற வேண்டும். அந்த வகையில் தொடர்ந்து இறங்குமுகமாவே இருந்துவந்த மென்தா ஆயில் 24.12.2018 அன்று பெல்ட் ஹோல்ட் எனும் கேண்டில் அமைப்பு உருவாக்கி, இறக்கம் முடிவுக்கு வந்ததைக் காட்டியது. அதன்பிறகு மென்தா ஆயில் ஏறுமுகமாக மாறியது.

சென்ற வாரம் நாம் சொன்னது… “டிசம்பர் கான்ட்ராக்ட் முடியும் தருவாயில் இருப்பதால், இனி ஜனவரி கான்ட்ராக்ட்டுக்கு மாறுவோம். தற்போது 1450 என்ற எல்லையை உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. ஒருவேளை இந்த ஆதரவையும் உடைத்தால், அது பெரிய இறக்கத்திற்கு வழிவகுக்கலாம். மேலே 1520 என்பது தடைநிலை ஆகும்.”

சென்ற வாரம் மென்தா ஆயில் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1520-ஐ உடைத்து மேலே ஏற ஆரம்பித்தது. அதாவது 24.12.2018 அன்று பெல்ட் ஹோல்ட் உருவமைப்பைத் தோற்றுவித்தபிறகு, 26.12.2018 அன்று வலிமையாக ஏறி, நாம் கொடுத்திருந்த 1520 என்ற தடைநிலையை உடைத்து ஏறி உச்சமாக 1534-ஐ தொட்டது. அதன்பிறகு ஒரு பக்கவாட்டு நகர்விலிருந்து மீண்டு, வலிமையாக ஏற ஆரம்பித்து 02.01.2019 அன்று உச்சமாக 1631 என்ற புள்ளியைத் தொட்டது. 

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயில் நல்ல ஏற்றத்திற்குப் பிறகு, தற்போது பக்கவாட்டு நகர்வில் உள்ளது. தற்போது 1570 என்ற எல்லை ஆதரவாகவும், 1640 என்ற எல்லை தடைநிலை யாகவும் உள்ளது.

காட்டன்

மென்தா ஆயில், ஒரு தொடர் இறக்கத்திலிருந்து மீள ஆரம்பித்துள்ளது. ஆனால், காட்டன் இன்னும் ஒரு தொடர் இறக்கத்தில்தான் இருந்து வருகிறது. 

சென்ற வாரம் சொன்னது… “டிசம்பர் கான்ட்ராக்ட் முடியும் தருவாயில் இருப்பதால், இனி ஜனவரி கான்ட்ராக்ட்டுக்கு மாறுவோம். நன்கு இறங்கிய நிலையில காட்டன், உடனடி ஆதரவாக 21020-ஐ கொண்டுள்ளது. தடைநிலையாக 21510-ஐ கொண்டுள்ளது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

காட்டன், ஒரு தொடர் இறக்கத்திலிருந்து வரும் வேளையில், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 21020-ஐ 24.12.2018 அன்று உடைத்து 20300 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. அதன்பிறகு மெள்ளமெள்ள மீள ஆரம்பித்தது. இந்த ஏற்றம் என்பதைக்கூட, ஒரு இறக்கத்தின் ஏற்றமாகவேதான் பார்க்கவேண்டியுள்ளது. இதைத்தான் புல்பேக் ரேலி என்று சொல்வோம். இந்த புல்பேக் ரேலியின் எல்லையை ஃபிபனாச்சி ரேஷியோவில் சொல்வதாக இருந்தால், தற்போதைய இறக்கம் 22300 என்ற எல்லையில் ஆரம்பித்து, 20300-ஐ தொட்ட நிலையில், இது 38.2% ஏற்றத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இனி என்ன செய்யலாம்? தொடர் இறக்கதில் உள்ள காட்டன், 21250 என்ற வலிமையான தடைநிலையையும், கீழே 20820 என்ற ஆதரவு எல்லையையும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.

சென்ற வாரம் சொன்னது… “இனி முக்கிய ஆதரவு 4450 ஆகும். உடனடித் தடைநிலை 4580 ஆகும்.”

சென்னா விலை நகர்வும், மென்தா ஆயில் மற்றும் காட்டன் விலை நகர்வுக்கும் விதிவிலக்கல்ல. சென்னா விலையும் தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. நவம்பர் 2018-லிருத்து இறங்க ஆரம்பித்த சென்னா, 4768 என்ற உச்சத்திலிருந்து மெள்ளமெள்ள இறங்கிவந்து 03.01.2019 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 4235-ஐ தொட்டது. தொடர்ந்துவரும் இறக்கத்தில் சிறிய புல்பேக் உருவாக்குவதற்கான முயற்சி வார முடிவில் நிகழ்ந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? சென்னா தொடர்ந்து இறங்கிவரும் வேளையில், தற்போது 4220 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகவும், மேலே 4295 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

- தி.ரா.அருள்ராஜன்