Published:Updated:

ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

Published:Updated:
ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

வசர வேலையாக மும்பை வந்துவிட்டேன். கேள்வி களை அனுப்புங்கள்” என ஷேர்லக் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்ப, நாம் உடனே கேள்விகளை மெயில் அனுப்பி வைத்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் நம் மெயிலுக்குப் பதில்களை அனுப்பினார் அவர்.

டிசம்பர் காலாண்டு முடிவுகள் பற்றி...?

“டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் 24% அதிகரித்து உள்ளது. இது, அனலிஸ்ட்களின் எதிர்பார்ப்பைவிட குறைவாகும். இதனையடுத்து பங்கின் விலை இறங்கி வர்த்தகமாகிறது. 

தனியார் வங்கியான பந்தன் பேங்கின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் 10.3% அதிகரித்து 331.26 கோடியாக உள்ளது.  ஐ.எல் & எஃப்.எஸ் பிரச்னைக்காக ரூ.385 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையிலும் இந்த வங்கி லாபம் ஈட்டியிருக்கிறது. காலாண்டு நிதி நிலை முடிவு வெளியான வியாழக்கிழமையன்று பங்கின் விலை 3.82% ஏற்றம் கண்டது. ஆனால், வெள்ளிக்கிழமை பங்கின் விலை சுமார் 2.5% இறங்கியது.  

இண்டஸ்இண்ட் வங்கியின் டிசம்பர் மாத காலாண்டு முடிவு எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளது.  வங்கியின் நிகர லாபம், 5% அதிகரித்து ரூ.985 கோடியாக உள்ளது. டிரேடிங் மற்றும்  கட்டண வருமானத்தால் நல்ல முடிவுகளை எட்டியுள்ளது. எனினும் ஐ.எல் & எஃஃப்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கிய கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையால் (ரூ.255 கோடி)  இழப்பு சற்று கூடியுள்ளது. சிறு கடன்களின் தேவைப்பாடு வலுவாக இருப்பதால் நடப்பு காலாண்டிலும் கடன் வழங்கல் மற்றும் லாபம் அதிகரிக்குமென்று வங்கி கூறியுள்ளது.” 

ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

2019- ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை 13% லாபம் அளிக்கும் என ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் கூறியிருக்கிறதே?

‘‘இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ள நிலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரச்னைகளையும் தாண்டி இந்தியப் பங்குச் சந்தை  2019-ம் ஆண்டில் 13% லாபம் அளிக்கும் என ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் கூறி யிருக்கிறது. நிஃப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங் களின் வருமான வளர்ச்சி நடப்பு ஆண்டில் சுமார் 24 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பங்குச் சந்தை வருமானம் சுமார் 13 சதவிகிதமாக இருக்கும் என அது குறிப்பிட்டுள்ளது.”

  ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு விலை 52 வார உச்சத்தை அடைந்திருக்கிறதே?

“தொடர்ச்சியாக மூன்று வர்த்தக தினங்களில்  ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கின் விலை ஏற்றம் கண்டதால், 52 வார உச்சமாக ரூ.381-ஐ தொட்டது. பல்வேறு சிக்கல்களைச் சந்தித்த இந்த வங்கியில் நிலைமை சீராகி வருவதை அடுத்து  சமீபகாலமாக இதன் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  டிசம்பர் காலாண்டில் நல்ல வருமானத்தை ஈட்டக்கூடுமென கணித்திருப்பதால் பங்கு விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகள் 2019-ம் ஆண்டில் நல்ல ஏற்றம் காணும் என மார்கன் ஸ்டேன்லி நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதன் பங்குகள் கடந்த ஆறு மாதங்களாக 41% லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதன் பங்கு விலை  15% அதிகரித்தது. நடப்பு 2019 -ம் ஆண்டில் சுமார் 11% உயர்ந்து, ரூ.510-ஆக உயரும் என எதிர்பார்க்கிறது. அடுத்த சில காலாண்டுகளுக்கு சொத்து மதிப்பு வளர்ச்சி இருக்குமென்று  மார்கன் ஸ்டேன்லி எதிர்பார்க்கிறது. வங்கிக் கடன் வழங்குதல், நிகர வட்டி லாப வரம்பு ஆகியவை தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு இருக்குமென்று கருதுகிறது. இவையனைத்தும் சேர்ந்து அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டை அதிகரிக்குமென்று நம்புகிறது. இதனால், பங்கு விலை உயரக்கூடும்.”
  
தேர்தலுக்குப் பின் பங்குச் சந்தையில் மாற்றம் இருக்குமா?

“இந்தியப் பங்குச் சந்தை அதிகமாக மதிப்பிடப் பட்டுள்ளதாகவும், 2019-ம் ஆண்டின் முதல் பாதியில் ‘இரட்டை இலக்க கரெக்‌ஷன்’ ஏற்படலாம் என்றும், அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் அமையும் நிலையான அரசு, ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தைகளை மேல்நோக்கித் தள்ள உதவலாம் என்றும் பிரபல பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுச் சந்தை ஏற்றமடைவதற்கு மிகக் குறைந்த அளவுக்கான காரணங்களே இருப்பதாகவும் மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறிய அளவுக்குத் தான் 2018-ம் ஆண்டின் இறுதி யில் நிஃப்டி 11300 புள்ளிகளில் நிலைகொண்டது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று வர்த்தக முடிவில் காணப்பட்ட நிலையுடன் ஒப்பிடுகையில் இது வெறும் 4.6 சதவிகிதம் மட்டுமே அதிகம்.

தற்போதைய நிலைமையில், வாராக் கடன் பிரச்னையிலிருந்து விடுபட்டிருப்பதால், வங்கி பங்குகள் விலை கவர்ச்சிகரமாக இருக்கின்றன. உள்நாட்டு நிறுவனப் பங்குகளின் விலையும் மலிவாக இல்லை என்பதால், முதலீட்டாளர்கள் தற்போதைக்கு முதலீடு செய்வதைத் தவிர்த்து, நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பதே நல்லது என்றும் மெரரில் லிஞ்ச் மேலும் தெரிவித்துள்ளது.”

ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

நிஃப்டி 50 வீக்லி ஆப்ஷனை என்.எஸ்.இ அறிமுகம் செய்கிறதே?

“வருகிற பிப்ரவரி மாதம் 11-ம் தேதி முதல் எஃப் அண்டு ஓ பிரிவில் வர்த்தகம் செய்ய நிஃப்டி 40 வீக்லி ஆப்ஷனை  அறிமுகம் செய்ய உள்ளதாக என்.எஸ்.இ அறிவித்துள்ளது. இதற்கான முதல்  சீரிஸ் பிப்ரவரி 14-ம் தேதியுடனும், இரண்டாவது சீரிஸ் பிப்ரவரி 21-ம் தேதியுடனும் முடிவடைவதாக வும் என்.எஸ்.இ கூறியுள்ளது. ஒவ்வொரு வியாழனன்றும் ஆப்ஷன் காலக்கெடு முடிவடையும். ஒருவேளை வியாழன் விடுமுறை என்றால், அதற்கு முந்தைய வர்த்தக தினம் காலக்கெடுவாகக் கருதப்படும். அனைத்து கான்ட்ராக்ட்டுகளுமே சந்தை வழக்கமாக  முடியும் நேரத்திலோ அல்லது பங்குச் சந்தை தீர்மானிக்கும் நேரத்திலோ முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதே?

கடந்த ஒரு சில காலாண்டுகளாகவே உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான வேலைகள் தீவிரமடைந்துள்ளதால், சிமென்ட் விற்பனை அதிகரித்து, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகும் இந்த நிலை தொடரலாம் என முன்னணி பங்குச் சந்தை தரகு நிறுவனங்களான சி.எல்.எஸ்.ஏ மற்றும் மோதிலால் ஆஸ்வால் ஆகியவை தெரிவித்துள்ளன.

பொதுவாக, தேர்தல் ஆண்டுகளில் சிமென்ட் விற்பனை அதிகரிக்கும். இந்த நிலையில், மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலும், ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெறலாம் என்பதால், இந்த ஆண்டு கட்டுமானத் துறைக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெண்டர் விடுவது மற்றும் ஆர்டர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் சற்று சுணக்கம் காணப்பட்டபோதிலும், சிமென்ட் விற்பனைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக புராஜெக்ட்டுகளைச் செயல்படுத்துவது அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

இதனால், 2019-ம் ஆண்டில் சிமென்ட் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி 9% முதல் 10% வரை இருக்கலாம் என சி.எல்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சிமென்ட் நிறுவனப் பங்குகள் ஏற்றமடையத் தொடங்கி உள்ளன. ஜே.கே லக்‌ஷ்மி சிமென்ட் நிறுவன பங்குதான் மிக அதிகபட்சமாக 18% ஏற்றம் கண்டுள்ளது. பிரிஸம் ஜான்சன், ராம்கோ சிமென்ட்ஸ், இந்தியா சிமென்ட்ஸ் பங்குகள் 8% முதல் 10% வரை ஏற்றம் கண்டுள்ளன.”

டிரேடர்ஸ் பக்கங்கள் பகுதியைப் படிக்க: https://bit.ly/2QBrXwh

டாலர் மதிப்பு அடிப்படையில் நிஃப்டி சிறப்பான வருவாய் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறதே?

“அக்டோபர் 9-ம் தேதியிலிருந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, சரிவிலிருந்து ஏற்றம் காணத் தொடங்கிய நிலையில், இதுவரை 7.88% முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்ட உலகின் முதல் 15 பங்குச் சந்தைகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.இதனால், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியின் டாலர் அடிப்படையிலான வருவாய் 11% அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.”

ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் இப்போது முதலீடு செய்ய பெரும்பாலான முதலீட்டு ஆலோசகர்கள் சொல்லி வருகிறார்களே?

“பல்வேறு பிரச்னைகளின் காரணமாகப் பல  முன்னணி ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகளின் விலை மிகவும் இறங்கியுள்ளன. இதனால், இவற்றின் மதிப்பீடு கவர்ச்சிகரமாக இருப்பதால் அவற்றில் முதலீடு செய்ய அனலிஸ்ட் கள் பரிந்துரை செய்துவருகிறார்கள். மேலும், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் புதிதாக ஸ்மால்கேப் ஃபண்டுகளை அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் உஷாராக இருப்பது அவசியம். காரணம், ஸ்மால் கேப் நிறுவனங்களின் வருமானம் வளர்ச்சி கண்டால்தான், அவற்றின் பங்குகளின் விலை உயரும். அந்தவகையில், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு காத்திருக்கத் தயார் என்பவர்கள் மட்டுமே இவற்றில் முதலீடு செய்வது நல்லது.” 

இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவு முதலீட்டாளர்களை ஏமாற்றியிருக்கிறதே?

“இன்ஃபோசிஸ் நிகர லாபம் 30% குறைந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், செயல்பாட்டு லாபமும் 1.11% குறைந்துள்ளது. பங்கு ஒன்றுக்கு சிறப்பு டிவிடெண்ட் ஆக ரூ.4 வழங்கப்படுகிறது. ரூ. 8,260 கோடிக்குப் பங்குகளைத் திரும்ப வாங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் சந்தை மதிப்பான ரூ.683.50-ஐவிட 17% அதிகமாக ரூ.800-க்கு பங்குகளைத் திரும்ப வாங்குகிறது.”

ஏதாவது கவனிக்க வேண்டிய பங்குகள்...?

“நீண்ட கால முதலீட்டுக்கு: சி.டி.எஸ்.எல்,    ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்.”

- ஷேர்லக், ஓவியம்: அரஸ்

மியூச்சுவல் ஃபண்ட்: 2018-ல் ரூ.1.24 லட்சம் கோடி முதலீடு!

எஸ்.ஐ.பி. முறையிலான முதலீடுகள் தொடர்ச்சியாகவும், சீராகவும் அதிகரித்ததன் காரணமாக, கடந்த 2018-ல்  இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1.24 லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது. பங்குச் சந்தையின் ஏற்றஇறக்கமான சூழலிலும்கூட சிறு முதலீட்டாளர்களின் முதலீடு வலுவாக அதிகரித்துள்ளது. 2018 டிசம்பரில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.61 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2017 டிசம்பர் இறுதியில் இது ரூ.22.37 லட்சம் கோடியாக இருந்தது.