Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

 நிஃப்டி இண்டெக்ஸ்

இந்த வாரம், இந்தியச் சந்தை அவ்வளவாக ஆர்வமில்லாமல் இருந்ததை உணர்த்தும் அளவுக்குத்தான் குறியீடுகளின் நகர்வும் இருந்தது.

திங்கள்கிழமை அன்று சந்தை நீண்ட இடைவெளியில் வர்த்தகத்தைத் தொடங்கியது. ஆனால், அதற்குப் பின்னர் ஏறக்குறையப் பங்கு விலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்பட வில்லை. இரண்டு விதங்களில் இதைப் பார்க்க முடியும். ஒரு நல்ல தொடக்கத்துக்குப் பின்னர், சந்தையைத் தொடர்ந்து மேலே கொண்டு செல்லும் இயலாமையுடன் அந்த நிலை தொடராததை, சந்தையின் ஏற்றத்தில் ஒருவித சோர்வு ஏற்பட்டுள்ளதாகவே கருத முடியும். அல்லது, ரெசிஸ்டன்ஸ் பகுதியை அடைந்த பின்னரும் சந்தை, ஏற்ற நிலைக்குச் செல்ல முடியாத இயலாமையுடன் இருப்பதாகவும் கருதலாம். இங்கே இரண்டுவிதமான சாத்தியங்களும் இருப்பதால், இதுபோன்ற சந்தையில் எப்படி வியாபாரம் செய்வது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எல்லை வரம்புக்குட்பட்ட சந்தையின் போக்கைக் கணிப்பது மிகவும் கடினம். ஏதாவது ஒரு திடீர் நிகழ்வு ஏற்படும் வரை காத்திருக்க வேண்டும். இது, டிரேடர்களின் பொறுமையைச் சோதிப்பதாக அமையும்.
ஆனாலும், அதற்குச் சந்தர்ப்பங்கள் வாய்க்காது என்று அர்த்தம் அல்ல. இண்டெக்ஸ் அல்லது முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு அப்பாற்பட்டதாக இது இருக்கும். காலாண்டு முடிவுகள் தற்போது வந்து கொண்டிருப்பதால், தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கும். ஆகவே, குறியீடு அடிப்படையிலான டிரேடிங்கை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிப்பட்ட பங்குகளின்மீது சந்தை கவனம் செலுத்தத் தொடங்குவதற்கான சாத்தியம் மிகவும் உள்ளது. மூன்றாவது காலாண்டு முடிவுகளுக்கான எதிர்பார்ப்புகள் அவ்வளவாக இல்லை என்பதால், காலாண்டு முடிவுகள் வெளியான பின்னரே சந்தை  மாற்றத்துக்கு உள்ளாகும். அதனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளின் வரத்தை நாம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய தருணம் இது.

கடந்த பல மாதங்களாகவே, நிஃப்டியைக் காட்டிலும் பேங்க் நிஃப்டி சீரான அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத் தனியார் வங்கிகள்தான் முக்கியக் காரணம். முன்னணி வங்கிகளின் வர்த்தகம் நன்றாகவே இருப்பதால், இந்தச் சிறப்பான செயல்பாடு இன்னும் தொடரும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆகவே, இண்டெக்ஸ் டிரேடர்கள், தற்போதைக்கு பேங்க் நிஃப்டியை தங்களது வர்த்தக வாகனமாகக் கருதி பார்ப்பது நல்லதாக இருக்கும். அதேசமயம் தனியார் வங்கிகளின் காலாண்டு முடிவுகளையும் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி 10900-க்கு உயர சில நல்ல செய்திகளால் உதவ முடியும். அதை அடைந்துவிட்டால், இந்த மாதத்தில் நிஃப்டி 11250 புள்ளிகளைக் கடக்கக்கூடும்.  சந்தை தொடர்ந்து ஏற்றத்திலிருந்து, பிரேக் அவுட்டிலும் லாங்க் டிரேடிங் இருந்தாலோ அல்லது வாரத்தின் இடையே ஏற்படும் சரிவுகளையோ பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி (ICICIGI)

தற்போதைய விலை: ரூ.885.00

வாங்கலாம்

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் வாங்க ஆரம்பித்தி ருக்கின்றன.  ஆனால், சிறு முதலீட்டாளர்களிடம் இது இன்னமும் சூடுபிடிக்கவில்லை. ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் நிறுவனப் பங்குகள் பட்டியலிடப் பட்டதிலிருந்தே ஒருவித நிலைத்தன்மையுடன் இருந்து வந்தது. தற்போது இந்தப் பங்கு விலை, முதலீட்டாளர்கள் மத்தியில் வாங்கும் ஆர்வத்தைத் தூண்டும்விதமாக சார்ட்டில் காணப்படுகிறது. விலையானது சூப்பர் டிரெண்ட் இண்டிகேட்டர் கோட்டுக்கு மேலே நிலைத்தி ருக்கிறது. தற்போது வால்யூம் உத்வேகத்துடன் மேலேறுகிறது. பங்கு விலை மேலும் அதிகரிக்கக்கூடும். 

முதலீட்டில் பொறுமைகாக்க கூடிய முதலீட்டாளர்கள் மூன்று மாத இலக்கு விலையாக ரூ.960 என வைத்து வாங்கலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மெர்க் (MERCK)

தற்போதைய விலை: ரூ.3,299.20

வாங்கலாம்

பார்மா நிறுவனப் பங்குகள் விலை மெள்ள உயர்ந்து வருகின்றன. நீண்ட மேல்நோக்கிய செயல்பாட்டைக் குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளின் விலையில் காணமுடிகிறது. இவற்றில் ஒன்றான மெர்க் நிறுவனப் பங்குகள் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கின்றன. வாராந்திரச் சார்ட்டில் இதன் மேல்நோக்கிய பயணம் இழப்பின்றி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதேபோல சூப்பர் டிரெண்ட் இண்டிகேட்டருக்கு மேலாகவே இதன் ஏற்றம் தொடர்ச்சியாக உள்ளது. குறுகிய கால இலக்கு விலை ரூ.3,600. ஸ்டாப்லாஸ் ரூ.3,250 வைத்துக்கொள்ளவும்.

கிரீவ்ஸ் காட்டன் (GREAVESCOT)

தற்போதைய விலை: ரூ.120.55

வாங்கலாம்

பெரும்பாலும் நன்றாகச் செயல்படும் இந்த நிறுவனப் பங்கு, தற்போது முக்கியமான சப்போர்ட் லெவலில் நிலைபெற்றுள்ளது. பங்கு விலை 120 ரூபாய்க்கு அருகே முக்கியமான ஆதரவு மண்டலத்திற்கு இறங்கியுள்ள நிலையில், தற்போது காலாண்டு முடிவுகள் வரக்கூடிய நேரம் நெருங்கிவிட்டதால் இந்தப் பங்குக்குத் தேவைப்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.           ஆர்.எஸ்.ஐ சார்ட்டும் பங்கின் போக்கில் மாற்றத்திற்கான அறிகுறியை வாராந்திர சார்ட்டில் காட்டுகிறது.

தீர்க்கமான ஆதரவு நிலைக்கு அருகே விலை ரூ.118-க்கு கீழே ஸ்டாப்லாஸ் மண்டலத்தைக் காணலாம். நல்ல லாபத்தை எதிர்பார்த்து ஓரளவு ரிஸ்க்கோடு வாங்கப்படும் சூழல் தற்போது இருக்கிறது. சாதகமான சூழல் வருமானால் பங்கின் விலையில் நல்ல ஏற்றத்தைக் காணலாம். குறுகிய கால இலக்கு விலை ரூ.140.

-  டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!