Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

தங்கம் மினி

தங்கம், கடந்த வாரத்தைப் பொறுத்த வரைக்கும் நல்ல ஏற்றத்தைக் கண்டது. பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 11000-க்கு அருகில் சென்று இடித்துவிட்டு ஏற முடியாமல் இறங்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு பங்குச் சந்தை இறங்க ஆரம்பிக்கும்போதெல்லாம் தங்கம் நன்கு ஏற ஆரம்பிக்கிறது. இந்த ஏற்றம் சுமார் 32100 என்ற புள்ளிவரை தொடர்கிறது. ஆனால், அதற்கு மேலே ஏற முடியாமல் கீழ்நோக்கி திரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அக்டோபர் மாதம் 2018-லிருந்து, இதுவரை தங்கம் 7 – 8 முறை வலிமையாக ஏறி 32100 என்ற எல்லையை உடைக்க முயற்சி செய்திருக்கிறது. ஆனால், இதுவரை ஒருமுறைகூட 32100 புள்ளியை தாண்டி வலிமையாக ஏற முடியவில்லை.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

டெக்னிக்கல் அனாலிசிஸ்படி, வலிமையான ஏற்றம் நிகழ்ந்து, பின் இறங்கி ஒரு கப் மற்றும் கைப்பிடி போன்ற உருவமைப்பைத் தோற்றுவித்து வருகிறது. ஒருவேளை தங்கம் 32100 என்ற எல்லைக்கு மேல் ஏறி உட்கார்ந்தால், அது மிகப் பெரிய ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம். அப்படி நிகழ்ந்தால் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியில் இருக்கும். இதையே மாற்றிச் சொன்னால், பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும்போது, தங்கம் பெரும் ஏற்றத்திற்குத் தயாராகலாம்.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது 31570 என்ற எல்லையை உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 31920 என்பது வலிமை யான தடைநிலை ஆகும்.”

தங்கம், 31570 என்ற ஆதரவு நிலைக்கு அருகில் வந்து, அந்த ஆதரவை வலிமையாக எடுத்து தினமும் படிப்படியாக ஏறி தடைநிலையான 31920-ஐ தொட்டு, தாண்டி, ஆனாலும், அதற்கு மேல் ஏற முடியாமல், இறங்கவும் முடியாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் தற்போது 31700 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 32150-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

வெள்ளி மினி

வெள்ளி தங்கத்தைவிட அதிக வலிமை காட்டி வருகிறது என்று சொல்லி வருகிறோம். அதை வெள்ளி மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.  

சென்ற வாரம் சொன்னது… “சற்றே வலிமை குன்ற ஆரம்பித்த நிலையில் வெள்ளி தற்போது 39180 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 39600 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.”
வெள்ளி கடந்த வாரம் முழுவதும் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 39180-க்கும், மேலே கொடுத்த தடைநிலையான 39600-க்கும் இடையே சுற்றி வந்துள்ளது. தங்கத்தைப் போலவே, வெள்ளியும் 39800 என்ற எல்லை நீண்டகால தடைநிலையாக உள்ளது.

இனி என்ன செய்யலாம்? வெள்ளி குறுகிய எல்லைக்குள் இருப்பதால், 39060 என்பது உடனடி ஆதரவாகவும், மேலே 39800 வலிமையான தடைநிலையாகவும் உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

கச்சா எண்ணெய் மினி

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் பலமான இறக்கத்திற்குப் பிறகு, மேலே திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் முக்கிய தடைநிலை 3410 ஆகும்.  கீழே ஆதரவு நிலை 3220 ஆகும்.”

கச்சா எண்ணெய் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 3410-ஐயும் உடைத்து ஏற ஆரம்பித்துள்ளது. சென்ற இதழில் சொன்னது, கச்சா எண்ணெய் நன்கு இறங்கி 26.12.2018 அன்று 2965 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. அன்று ஏறுமுகமாக மாறக்கூடிய பியர்சிங் பேட்டர்ன் என்ற கேண்டில் வகையைத் தோற்றுவித்து மேலே ஏற ஆரம்பித்தது. நாம் குறிப்பிட்டு இருந்தபடியே கச்சா எண்ணெய் விலையில் ஒரு டிரெண்ட் ரிவர்ஷல் நடந்து, கச்சா எண்ணெய் வலிமையான ஏற்றத்தில் உள்ளது. 

இனி என்ன செய்யலாம்? கச்சா எண்ணெய் வலிமையாக ஏறிய நிலையில் மேலே 3860 என்பது வலிமையான தடைநிலை ஆகும்.  கீழே 3600 மிக முக்கிய ஆதரவு ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்த வந்த மென்தா ஆயில் 24.12.2018 அன்று பெல்ட் ஹோல்ட் எனும் கேண்டில் அமைப்பு உருவாக்கி, இறங்குமுகமாக இருந்துவந்த மென்தா ஆயில், இறக்கம் முடிவுக்கு வந்ததைக் காட்டியது என்று கூறியிருந்தோம்.  தற்போது மென்தா ஆயில் ஏறுமுகமாக மாறியது உண்மை ஏன்றாலும், அந்த ஏற்றத்தின் அடுத்த தடை நிலைக்கு அருகில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வாரம் நாம் சொன்னது… “மென்தா ஆயில் நல்ல ஏற்றத்திற்குப் பிறகு, தற்போது பக்கவாட்டு நகர்வில் உள்ளது. தற்போது 1570 என்ற எல்லையை ஆதரவாகவும், 1640 என்ற எல்லை தடைநிலையாகவும் உள்ளது.”

சென்ற வாரம் மென்தா ஆயில் நாம் கொடுத்தி ருந்த தடைநிலையான 1640-ஐ  என்ற எல்லையில் தொடர்ந்து தடுக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால், 07.01.2019 அன்று மட்டும் 1640 என்ற தடையைத் தாண்டி ஏறி உச்சமாக 1659-ஐ தொட்டது.  ஆனால், முடியும்போது இறங்கி வந்து 1650-ல் முடிந்தது. அடுத்தடுத்த நாள்களில் 1640 என்ற எல்லையே மீண்டும் தடைநிலையாக மாறி உள்ளது. சென்ற வாரம் திங்களன்று வலிமையாக ஏறிய மென்தா ஆயில் அதன்பின் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது.

தொடர்ந்து செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாளும் பக்கவாட்டு நகர்வில் இருந்த மென்தா ஆயில், வியாழனன்று பலமாக இறங்கியது.  ஒரு கேப் டவுனுடன் இறங்கிய இந்த இறக்கம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 1570-க்கு அருகில் வந்தது. அதாவது குறைந்தபட்ச புள்ளியாக  1585-ஐ தொட்டு மேலே ஏறி, அந்த கேப்பை மூடுவதற்கு முயற்சி செய்துள்ளது. வாராந்திர வரை படத்தில் டோஜி வந்துள்ளதால், ஏற்றத்தின் நிச்சயமற்ற தன்மை தோன்றியுள்ளது.

இனி என்ன செய்யலாம்…? மென்தா ஆயில் இறங்கினாலும், நாம் ஏற்கெனவே கொடுத்திருந்த 1570 என்ற எல்லை நல்ல ஆதரவாகவும், மேலே 1640 என்ற எல்லை உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.

காட்டன்

காட்டன் இன்னமும் ஒரு தொடர் இறக்கத்தில் தான் இருந்துவருகிறது எனக் கூறிவருகிறோம்.  10.08.2018 அன்று உச்சமாக 24280-ஐ தொட்டபிறகு இறக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடுநடுவே கொஞ்சம் புல்பேக் ரேலி வந்துபோகிறது. 

சென்ற வாரம் சொன்னது… “தொடர் இறக்கத்தில் உள்ள காட்டன் 21250 என்ற வலிமை யான தடைநிலையையும், கீழே 20820 என்ற ஆதரவு எல்லையையும் கொண்டுள்ளது.”

காட்டன், முந்தைய வாரம் தொடர் இறக்கத்தில் இருந்து தற்காலிகமாக மீண்டு ஒரு புல்பேக் ரேலியைக் கொடுத்தது. சென்ற வாரம் திங்களன்று ஒரு கேப்அப்பில் தோன்றி, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 21250-ஐ தாண்டி 21200-ல் தோன்றினாலும், பின் இறங்கி குறைந்தபட்ச எல்லையாக 20880-ஐ தொட்டு 20940-ல் முடிவடைந்துள்ளது. இதன்மூலம், ஏற்றத்தின் முடிவில் ஒரு பியரிஷ் என்கல்ஃபிங் பேட்டர்னை உருவாக்கியது. அதன்பின் தொடர்ந்து இறங்க ஆரம்பித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்..? காட்டன் தற்போது 20700 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 21080 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்ற வாரம் சொன்னது… “சென்னா தொடர்ந்து இறங்கி வரும்வேளையில், தற்போது 4220 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகவும், மேலே 4295 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.”

சென்னா விலை தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லை யான 4220 என்ற புள்ளியை, சென்ற வாரம் திங்களன்றே சென்னா உடைத்து இறங்கியது.  கடந்த செவ்வாயன்று குறைந்தபட்ச புள்ளியாக 4095-ஐ தொட்டது. அதன்பின் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்? சென்னா மேலே 4220 முந்தைய ஆதரவைத் தடைநிலையாகவும், கீழே 4080 என்ற எல்லையை ஆதரவு எல்லையாகவும் கொண்டுள்ளது.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in