தங்கம் (மினி)

சென்ற வாரத்தின் கடைசி நாள்களில் பங்குச் சந்தை வலிமையாக ஏற, தங்கம் வலிமையாக இறங்கத் தொடங்கியது.

கடந்த வாரங்களில் நாம் சொன்னது... “பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகபட்ச புள்ளியாக 33367-ஐ தொட்டு, பின் இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் அதாவது, ரிடிரேஸ்மென்ட் முடிவுக்கு வரும்போது ஏற்றம் தொடரும் என்றும் அர்த்தம்.”

இந்த இறக்கத்தின் விளைவாக 13.02.2018 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 32680-ஐ தொட்டது. இதன்பிறகு தங்கம் மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் ரிடிரேஸ்மென்ட் முடிந்து ஏற ஆரம்பிக்கும் நிலையில் உடனடி ஆதரவு 32950 ஆகும். மேலே தடைநிலை 33377 ஆகும்.”

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 33377 என்ற புள்ளியைக் கடந்த திங்களன்று உடைத்து அதிகபட்சமாக 33484-ஐ தொட்டது. அதன்பின் மிகப் பலத்த ஏற்றத்தை அடைந்து அதிகபட்சமாக 33797-ஐ தொட்டது.

அடுத்த நாளும் 33877 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனால், முடிவில் ஸ்பின்னிங் டாப் உருவமைப்பைத் தோற்றுவித்ததன்மூலம், ஏற்றம் முடிவுக்கு வந்ததைக் காட்டியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் 33120-ஐ உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 33500-ஐ உடனடித் தடைநிலையாகக் கொண்டுள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளியும், தங்கம் நகரும் திசையிலேயே நகர்ந்து கொண்டிருந்தாலும், வெள்ளியின் வேகம் அவ்வப்போது தங்கத்தைவிடக் குறைவதும், அதன்பின் தங்கத்தைவிட அதிக வலிமையாக ஏறுவதும் நிகழ்ந்துள்ளது.
சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி தற்போது மெள்ள மேலே ஏற ஆரம்பித்தாலும், 40250 என்பது வலிமையான தடைநிலையாக உள்ளது. கீழே 39400 என்பது உடனடி ஆதரவு ஆகும்.”

வெள்ளி நாம் கொடுத்திருந்த தடைநிலையான 40250 என்ற எல்லையைக் கடந்த வாரம் திங்களன்று தாண்ட முயற்சி எடுத்தது. ஆனால், 40250-ஐ தாண்ட முடிந்தாலும், அதன்பின் இறங்கி 40183-ல் முடிந்தாலும், அடுத்த நாள் மிகப் பலமாக ஏறி 4600-ஐ தொட்டது, அதற்கும் அடுத்த நாள் ஏறி 40960-ஐயும் தொட்டபின் இறங்க ஆரம்பித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி, பிப்ரவரி கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், அடுத்து ஏப்ரல் கான்ட்ராக்டை எடுத்துக் கொள்வோம். இனி, நன்கு இறங்கி 40560-ஐ ஆதரவாகவும், மேலே 40460-ஐ தடை நிலையாகவும் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய்யில் பிப்ரவரி கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், மார்ச் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். தற்போதைய ஏற்றத்திற்கு 4020 என்பது வலிமையான தடைநிலை ஆகும். கீழே 3830 என்பது முக்கிய ஆதரவு.”

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடை நிலையான 4020 அருகில் சென்று தாண்ட முடியாமல் கீழே இறங்கி, பின் பக்கவாட்டு நகர்வில் உள்ளது. பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும்கூட, மெள்ள மெள்ள ஏறி, ஒவ்வொரு கேன்டிலும் புதிய உச்சத்தைக் காட்டியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?

கச்சா எண்ணெய் தற்போதைய 4020 என்ற தடை நிலையை உடைத்தால் மிக வலிமையான ஏற்றத்திற்கு வழி வகுக்கலாம். கீழே 3940 உடனடி ஆதரவு ஆகும்.

காப்பர் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “காப்பர் மினி ஏற ஆரம்பித்துள்ளது. உடனடித் தடைநிலை 444.50. கீழே 433 முக்கிய ஆதரவாக உள்ளது.”

காப்பர் சென்ற ஜனவரி 2019-ல் திசை திரும்பி ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றத்திற்கு இடையே அவ்வப்போது இறங்கினாலும், தொடர்ந்து வலிமையான ஏற்றத்தில் இருந்து வருகிறது. நாம் கொடுத்திருந்த 444.50 என்ற தடைநிலையை உடைத்து 462 வரையிலும் ஏறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?

காப்பர் மினி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால், உடனடி தடைநிலை 465ஆகும். கீழே 465.60 உடனடி ஆதரவு ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in