மென்தா ஆயில்

சென்ற வாரத்தில் மென்தா ஆயில் நன்கு ஏறி, காளைகளுக்கான கேன்டில் தோன்றுவித்து, அடுத்து ஷூட்டிங் ஸ்டார் அமைப்பையும் உருவாக்கியதைச் சொன்னோம். எனவே, காளைகள் வலிமையாக ஏற முனைத்தாலும், கரடிகள் அதை வலிமையாகத் தடுப்பதையே இது காட்டுகிறது.கடந்த வாரத்தின் உச்சமான 1636 என்ற எல்லையையும் தாண்டி, 1662 என்ற உச்சத்தைத் தொட்டு, பின்பு முடியும்போது 1619 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது…

“தற்போது 1648 வலிமையான தடைநிலை யாகவும், கீழே 1590 உடனடி ஆதரவாகவும் உள்ளது.”

கரடிகள் மென்தா ஆயில் விலையை, ஒவ்வொரு நாளும் விலையைப் படிப்படியாக இறக்கினார்கள். கடந்த வாரம் வியாழன் அன்று மிகப் பலமாக இறக்கி, குறைந்தபட்ச புள்ளியாக 1610-ஐ தொடவைத்தார்கள். கரடிகளின் இந்தத் தொடர் தாக்குதல் கடந்த வெள்ளியன்றும் தொடர்ந்து 1586 என்ற குறைந்தபட்ச எல்லையைத் தொடவைத்து, முடியும்போது, 1615 என்ற புள்ளியில் முடித்துள்ளார்கள்.

டெக்னிக்கலாகச் சொல்வதாக இருந்தால், காளைகள் மீண்டும் ஆட்டத்தில் இறங்கியிருக் கிறார்கள். அடுத்து, கடந்த வெள்ளியன்று சுத்தியல் போன்ற உருவமைப்பு தோன்றி உள்ளது, காளைகளின் பலத்தைக் காட்டுகிறது.

இனி என்ன செய்யலாம்..?

மென்தா ஆயில் பிப்ரவரி கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நாம் மார்ச் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். மார்ச் 2019, கொஞ்சம் டிஸ்கவுன்ட்டில்தான் வியாபாரம் ஆகி வருகிறது. தற்போது 1565 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1625 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

காட்டன்

காட்டன் விலையும் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குமேலாக இறக்கம் கண்டு வருகிறது. இதுவும் லோயர் டாப் மற்றும் லோயர் பாட்டத்தை ஏற்படுத்தி டவுன் டிரெண்டை உறுதி செய்துள்ளது. முந்தைய வாரம் வரை இதுதான் தொடர்ந்துள்ளது. ஆனால், கடைசியாக சென்ற வார இறுதியில் விலையானது, பலமான ஏற்றத்திற்கு முயற்சி செய்யும் ஆரம்ப நிலையில் உள்ளது.

சென்ற வாரம் சொன்னது..

“காட்டன் வலிமையாக இறங்கிவரும் நிலையில் தற்போது 20000 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது. மேலே 20500 தடைநிலை ஆகும். தாண்டினால் ஒரு புல்பேக் ரேலி வரலாம்.”

நாம் கொடுத்திருந்த 20000 என்ற ஆதரவு எல்லையைச் சென்ற வாரம் உடைப்பதற்கு கரடிகள் முயற்சி செய்தாலும், நாள் முடிவுகள் காளைகள் 20000 என்ற எல்லைக்கு மேலாகக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள்.

அதையும் தாண்டி வார இறுதியில் ஒரு புல்லிஷ் என்கல்ஃபிங் பேட்டர்ன் தோன்றி, அடுத்த நாளும் தொடர்ந்து ஏறி காளைகள் வலிமை காட்டியுள்ளார்கள்.

இனி என்ன செய்யலாம்..?

காட்டன், பிப்ரவரி கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நாம் மார்ச் கான்ட்ராக்டை எடுத்துக் கொள்வோம். காட்டன் தற்போது 20960 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும், கீழே அதே 20180 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.

சென்ற வாரம் சொன்னது…

“தற்போது நாம் மார்ச் மாத கான்ட்ராக்ட்டில் உள்ளோம். சென்னாவின் இந்த புல்பேக் ரேலி 4366 என்ற புள்ளியில் வலுவாகத் தடுக்கப்படலாம். கீழே உடனடி ஆதரவு 4150 ஆகும்.

நாம் ஏற்கெனவே கொடுத்திருந்தது போலவே சென்னா 4366 என்ற தடைநிலையைத் தாண்ட முடியாமல் இறங்கி முதலில் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது.

அதன்பின் வாரத்தின் முடிவில் வலுவாக இறங்கி, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4150 உடைக்க முயன்று 4133 வரை சென்றாலும், சந்தை முடியும்போது 4154-ல் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

வலிமையாக இறங்கிவரும் சென்னா, உடனடி ஆதரவாக 4120-ஐ கொண்டுள்ளது. மேலே 4220 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன்