நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

தங்கம் (மினி)

தங்கத்தின் ஏற்றம் தற்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தங்கம் சென்ற வாரம், டிரெண்ட் லைனை உடைத்து இறங்கியது. கடந்த வாரம் ஒரு லோயர் டாப்பை உருவாக்கியது.  20.02.2019 அன்று புதிய உச்சத்தை 34000 என்ற புள்ளியைத் தொட்டு தோற்றுவித்தது. அதன்பின் அடுத்தடுத்த நாள்களில் 33359 என்ற முதல் குறைந்த டாப்பையும், அடுத்து 33330 என்ற இரண்டாவது குறைந்த டாப்பையும் உருவாக்கியதால், ஏற்றம் முடிவுக்கு வந்துள்ளதை இது காட்டுகிறது. 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் 33120-ஐ உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 33500-ஐ உடனடித் தடைநிலையாகக் கொண்டுள்ளது.”

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 33500 என்ற புள்ளியைச் சென்ற வாரம் தாண்ட முடியவில்லை. இதற்கு மாறாக, நாம் கடந்த வாரம் கொடுத்திருந்த ஆதரவான 33120-ஐ 28.02.19 வியாழனன்று உடைத்து இறங்கியது.  தற்போது 32750 என்பது மிக மிக முக்கிய ஆதரவு ஆகும்.  இந்த ஆதரவைத் தங்கம் உடைத்தால், கடுமையான இறக்கத்தைச் சந்திக்கலாம்.

இனி என்ன நடக்கலாம்?

ஏப்ரல் கான்ட்ராக்ட்டுக்கு மாறுகிறோம்.  தங்கம் தொடர்ந்து இறங்கி வரும் நிலையில் 32750 என்பது ஆதரவு ஆகும்.   ஒருவேளை ஒரு புல்பேக் ரேலி வந்தால், 33240 என்ற எல்லையில் தடுக்கப்படலாம்.

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி, பிப்ரவரி கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், அடுத்து ஏப்ரல் கான்ட்ராக்டை எடுத்துக் கொள்வோம். இனி, நன்கு இறங்கி 40560-ஐ ஆதரவாகவும், மேலே 40860-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.” 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

வெள்ளி நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான  40560 என்ற எல்லையை 27.02.209 அன்றே, அதாவது, தங்கம் கடந்த வாரம் வியாழனன்று வலிமையாக இறங்கியது.  ஆனால், வெள்ளி, அதற்கு ஒருநாள் முன்பாகவே இறங்க ஆரம்பித்துள்ளது. அடுத்து 28.02.2019 அன்று இன்னும் வலிமையாக இறங்கி முக்கிய ஆதரவுக்கு அருகில் உள்ளது. தற்போது ஒரு டபுள் பாட்டத்தைத் தோற்றுவித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி வலுவாக இறங்கி உள்ள நிலையில், 39360 மிக முக்கிய ஆதரவு ஆகும். மேலே 40440 என்பது, புல்பேக்ரேலி வந்தால் தடுக்கப்படும் இடமாகும். 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தற்போதைய 4020 என்ற தடைநிலையை உடைத்தால் மிக வலிமையான ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம். கீழே 3940 உடனடி ஆதரவு ஆகும்.”

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4020-ஐ உடைத்துள்ளது. உடைத்ததோடு மட்டும் அல்லாமல், மேலே 100 புள்ளிகளைத் தாண்டியும் உள்ளது. ஆனால், மீண்டும் முந்தைய பக்கவாட்டு நகர்வின் தடைநிலையில் தடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இனி என்ன செய்யலாம்?

கச்சா எண்ணெய் தற்போது 4140 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்படுகிறது.  தாண்டினால், பெரிய ஏற்றம் வரலாம்.  கீழே 3980 உடனடி ஆதரவு ஆகும்.

காப்பர் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “காப்பர் மினி  ஏறுமுகமாக உள்ளதால், உடனடித் தடைநிலை 465. கீழே 460.60 உடனடி ஆதரவு ஆகும்.” 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

காப்பர் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 465-ஐ உடைத்து 470-ஐ தொட்டது.  அதன்பின்  ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்?

காப்பர் பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், உடனடித் தடைநிலை 472. கீழே 461 முக்கிய ஆதரவு நிலை ஆகும்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், 19.02.19 அன்று உச்சமாக 1638-ஐ தொட்டது. அதன்பிறகு, இறக்கம் ஏற்றங்கள் வந்தாலும், கீழே அப் டிரெண்ட் லைனைத் தாண்டி இறங்காமலும், மேலே முந்தைய உச்சமான 1638-ஐ தாண்ட முடியாமலும் உள்ளது. எனவே, தற்போது கன்சாலிடேஷன் நகர்வுக்குள் உள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “மென்தா ஆயில், நாம் மார்ச் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். மார்ச் 2019, கொஞ்சம் டிஸ்கவுன்டில்தான் வியாபாரம் ஆகி வருகிறது. தற்போது 1565 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1625 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.”

காளைகள் மற்றும் கரடிகள் தொடர்ந்து போரடி வருகிறார்கள். ஆனாலும், காளைகளின் ஆதிக்கம் தொடர்ந்து பலவாரங்கள் இருந்தாலும் கடந்த இரண்டு வாரங்களாக காளைகளால் முந்தைய உச்சத்தைத் தாண்ட முடியாமல் இருப்பதால், கரடிகள் வலுவான சண்டைக்கு தங்களை தயார் செய்வதுபோலவே உள்ளது.

இனி என்ன செய்யலாம்..?

மென்தா ஆயில், தற்போது 1645 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், அடுத்தகட்ட வலுவான ஏற்றம் வரலாம். கீழே 1555 என்பது முக்கிய ஆதரவு ஆகும். அதே சமயம் 1580 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

காட்டன்

காட்டன் விலை நீண்ட கால இறக்கத்தில் இருந்து வந்துள்ளது. டெக்னிக்கலாக இதுவும் ஒரு லோயர் டாப் மற்றும் லோயர் பாட்டத்தை ஏற்படுத்தி டவுன் டிரெண்ட் என்பதைக் காட்டி வந்தாலும், 13.02.2019-லிருந்து புதிய பாட்டங்கள் உருவாக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில்தான், இறக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக நாம் பார்க்கிறோம்.

சென்ற வாரம் சொன்னது… “காட்டன், பிப்ரவரி கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நாம் மார்ச் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். காட்டன் தற்போது 20960 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும், கீழே அதே 20180 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.”

நாம் கொடுத்திருந்த 20180 என்ற ஆதரவு எல்லையைத் தொடர்ந்து இன்னமும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, மெள்ள மெள்ள ஆதரவு எல்லை உயர்ந்து வந்துகொண்டு இருக்கிறது.

அதேசமயம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 20960 என்ற எல்லையையும் உடைக்காமல் உள்ளது. இது பரந்த பக்கவாட்டு நகர்வு.  இதற்கு உள்ளாகவே காட்டன் தொடர்ந்து நகர்ந்து வருகிறது.

இனி என்ன செய்யலாம்..? 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

காட்டன் நகர்வை நாம் இப்போது இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது, 20385 என்ற உடனடி ஆதரவையும், மேலே 20690 என்ற எல்லையை உடனடித் தடையாகவும் கொண்டுள்ளது.

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.

சென்ற வாரம் சொன்னது…“வலிமையாக இறங்கி வரும் சென்னா, உடனடி ஆதரவாக 4120-ஐ கொண்டுள்ளது. மேலே 4220 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.”

 சென்னா, தொடர்ந்து நீண்ட காலமாக டவுன் ட்ரெண்டில் இருக்கிறது.

இந்த இறக்கம் 14.12.2018-ல் உச்சமாக 4790-ஐ தொட்ட பின் ஆரம்பித்தது. கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4120-ஐ உடைத்து 4052 வரை இறங்கியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?

சென்னாவின் தொடர் இறக்கத்தில், தற்போது புல்லிஷ் என்கல்ஃபிங் தோன்றியுள்ளது. இந்த நிலையில் 4045 என்பது முக்கிய ஆதரவாகவும், மேலே 4155 என்பது உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in