பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...
1. காசோலையில் பென்சிலால் எழுத அனுமதி இல்லை.
அ. சரி
ஆ. தவறு
2. முதன்மைச் சந்தையில் (Primary Market) --- பங்குகள் வர்த்தகமாகின்றன.
அ. பழைய
ஆ. புதிய
3. உழையாக் கூட்டாளி (dormant partner) என்பவர்
அ. நட்பின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தில் இணைந்திருப்பவர்
ஆ. உரிமையாளருக்கு நெருக்கமாக இருப்பவர்
இ. நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பார்; ஆனால், நிர்வாகத்தில் பங்கேற்க மாட்டார்.
4. இந்தியாவில் பாலும் பழமும் எப்படி வகைப்படுத்தப் பட்டுள்ளது?
அ. இன்றியமையாத பண்டங்கள்
ஆ. வசதிப் பண்டங்கள்
இ. ஆடம்பரப் பண்டங்கள்
5. தனியார் மற்றும் அரசுத் துறை இணைந்து செயல்படுவது கலப்புப் பொருளாதாரம் ஆகும்.
அ. தவறு
ஆ. சரி
6. மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றப்படும்
அ. சரி ஆ. தவறு
7. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் வருமான வரிச் சலுகை
அ. முதலீடு - முதலீட்டுப் பெருக்கம் - முதிர்வு ஆகிய மூன்று நிலைகளிலும் வரிச் சலுகை உண்டு
ஆ. முதலீடு - வரிச் சலுகை, முதலீட்டு பெருக்கம் - வரி உண்டு
இ. முதலீடு - வரிச்சலுகை, முதலீட்டுப் பெருக்கத்துக்கு வரிச்சலுகை, முதிர்வுக்கு வரி உண்டு
8. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் ஓய்வுக் கால திட்டத்தில் கட்டாய லாக் இன் பிரீயட்
அ. ஓராண்டு
ஆ. மூன்றாண்டு
இ. ஐந்தாண்டு
9. என்.பி.எஸ் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம்) முதலீட்டுக்கு .... கீழ் வரிச்சலுகை கிடைக்கும்.
அ. வருமான வரிப் பிரிவு 80 CCD (1B) கீழ் ரூ. 50,000 வரை
ஆ. 80C பிரிவின்கீழ் ரூ. 1.5 லட்சம்
இ. இரு பிரிவின்கீழும் சேர்த்து மொத்தம் ரூ.2 லட்சம்
10. பங்கு முதலீட்டில் வாங்கும்போதும், விற்கும்போதும் கட்டணம் செலுத்த வேண்டும்
அ.சரி ஆ. தவறு
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சி.சரவணன்
விடைகள்
1. அ. சரி,
2. ஆ. புதிய
3. இ. நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பார் ஆனால், நிர்வாகத்தில் பங்கேற்க மாட்டார்.
4. ஆ. வசதிப் பண்டங்கள்,
5. ஆ. சரி
6. அ.சரி
7. அ. முதலீடு - முதலீட்டு பெருக்கம் - முதிர்வு ஆகிய மூன்று நிலைகளிலும் வரிச்சலுகை உண்டு
8. ஐந்தாண்டு,
9. இ. இரு பிரிவின் கீழும் சேர்த்து மொத்தம் ரூ. 2 லட்சம்,
10. அ.சரி