Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் 20.02.2019  அன்று இறங்க ஆரம்பித்தபிறகு, அது ஒரு டவுன் டிரெண்ட்டுக்கு மாறியதைப் பார்த்தோம். இந்த டவுன் டிரெண்ட் தொடரும்போது, பங்குச் சந்தை வலிமையாக மாறியதையும் பார்த்தோம். இப்படி பங்குச் சந்தை தொடர்ந்து வலிமை காட்டிவரும் நிலையில், தங்கம் தொடர்ந்து இறங்குவதா அல்லது பொறுத்து இருப்பதா என்ற தயக்கத்தில் இருந்து வருகிறது. 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது வலிமையான ஆதரவை 31700 என்ற எல்லையில் உருவாக்க முயற்சி செய்கிறது. உடைத்தால் நன்கு இறங்கலாம். மேலே 32100 என்பது வலிமையான தடைநிலையாக உள்ளது.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 31700 என்ற எல்லையை தங்கம் திங்களன்று 18.03.19 அன்று உடைத்து குறைந்தபட்ச புள்ளியாக 31590-ஐ தொட்டு 31685-ல் முடிந்தது. இந்த நாளில் ஒரு ஸ்பின்னிங் டாப்பையும் உருவாக்கியதால், தங்கம் தொடர்ந்து இறங்க முடியவில்லை என்பதைக் காட்டியுள்ளது.  அதற்கு அடுத்தடுத்த நாள்களில் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 31700-க்கு மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது. 

எனவே, 31700 என்ற எல்லை வலுவாக மாறியுள்ளது. அதன் பின் மேலே ஏற முயன்ற தங்கம் 32000-லிருந்து 32100 வரை ஏறி, நாம் கொடுத்திருந்த தடைநிலையை தாண்ட முடியாமல் இறங்கியது.   தற்போது தங்கம் ஒரு குறுகிய எல்லைக்குள் சுழன்று வருவதை நாம் பார்க்கிறோம்.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் தற்போது  31640 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 32150 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது. தொடர்ந்து பல நாள்களாக இந்த எல்லைக்குள் இருப்பதால், எந்தப் பக்கம் உடைத்தாலும் வலுவாக நகர வாய்ப்புள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளியும், கடந்த வாரம் தங்கம் நகர்ந்த வகையிலேயே நகர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாகவே பக்கவாட்டு நகர்வில் இருந்து வருகிறது. 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி,  இன்னமும் 37800 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது.  இந்த ஆதரவு உடைக்கப்பட்டால் வலிமையான இறக்கம் வரலாம். மேலே 38900 என்ற எல்லை பலமான தடைநிலை ஆகும்.”

வெள்ளி நாம் கொடுத்திருந்த ஆதரவுநிலையான 37800 என்ற எல்லையை இன்னமும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் திங்களன்று மட்டும் ஆதரவான 37800-ஐ மெள்ள உடைத்து 37780-ஐ தொட்டு மீண்டும் 37800-க்கு மேல் ஏறியதால், இந்த எல்லை வலிமையாக மாறியுள்ளது. மேலே நாம் கொடுத்திருந்த தடைநிலையான 38900 என்ற எல்லையைத் தாண்டவில்லை.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளியும் தொடர் பக்கவாட்டு நகர்வில் இருந்து வருவதால்,  பிரேக்அவுட் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கீழே 37800 இன்னும் ஆதரவாகவே உள்ளது. மேலே 38900 என்பதும் தடைநிலையாக இருப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம். 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய்யின் மார்ச் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நாம் ஏப்ரல் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். தற்போது 4060 என்பது உடனடி ஆதரவாகவும், 4010 முக்கிய ஆதரவாகவும் உள்ளது. மேலே 4130 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.”

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4060-ஐ திங்களன்று (18.03.2019)  உடைத்து இறங்கினாலும், அடுத்து நாம் கொடுத்திருந்த வலிமையான ஆதரவான 4010-ஐ உடைக்கவில்லை.  மாறாக, மேலே ஏற முனைந்து, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4130-ஐ உடைத்து ஏறி உச்சமாக 4164-ஐ தொட்டு இறங்கியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?

கச்சா எண்ணெய், சற்றே ஏற முனைந்தாலும்  4190 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. கீழே 4040 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

காப்பர் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “காப்பர் மினி தற்போது 442 என்ற எல்லையை மிக வலிமையான ஆதரவாகக் கொண்டுள்ளது.  மேலே 457 என்பது முக்கிய தடைநிலை ஆகும்.”

காப்பர் ஒரு தொடர் இறக்கத்திலிருந்து வருகிறது. நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 442-ஐ தொட்டு, அதை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலே நாம் கொடுத்திருந்த தடைநிலையான 457-ஐ தாண்ட முடியவில்லை. இது காப்பர் வலிமை குன்றி காணப்படுவதைக் குறிக்கிறது.

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in

அக்ரி கமாடிட்டிப் பகுதியைப் படிக்க: https://bit.ly/2UOqHsP