Published:Updated:

எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

ங்களுடைய தொழில் நிறுவனத்தைப் பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டதன் மூலம் நிதி திரட்டி தங்கள் தொழிலை சிறப்பாகச் செய்துவரும் நிறுவனங்கள் பலப்பல. டி.சி.எஸ், எல் அண்டு டி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி எனத் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, எஸ்.பி.ஐ, ஓ.என்.ஜி.சி. உட்பட அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் பலவும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. 

எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

சில ஆண்டுகளுக்குமுன்பு வரை பல நூறு கோடி ரூபாய் மூலதனத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களே பங்குச் சந்தையில் பட்டியலிட முடியும் என்கிற நிலை இருந்து வந்தது. எஸ்.எம்.இ என்று சொல்லப்படுகிற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனில், வங்கிகளில் கடன் வாங்கித்தான் செய்ய வேண்டிய நிலை இருந்தது. பல வங்கிகள் எஸ்.எம்.இ நிறுவனங்களுக்குக் கடன் தராமலே காலம் கடத்தியதால், தொழில் விரிவாக்கம் செய்ய முடியாமல் தவித்தன. அல்லது, மிக அதிகமான வட்டிக்குத் தனிப்பட்ட நபர்களிடம் கடன் வாங்கி தொழில் விரிவாக்கம் செய்யவேண்டிய கட்டாயம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

தொழில் வளர்ச்சிக்காக எஸ்.எம்.இ நிறுவனங் களும் எளிதில் பணம் திரட்டுவதற்கு வசதியாக, அந்த நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு, பணத்தைத் திரட்டலாம் என்கிற மாற்றம் சில ஆண்டுகளுக்குமுன்பு கொண்டுவரப் பட்டது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான எஸ்.எம்.இ நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தங்கள் நிறுவனங்களைப் பட்டியலிட்டு, இன்று வெற்றிகரமாகத் தொழில் நடத்தி வருகின்றன.

எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்கள் நிதித் தேவை களுக்காகத் தங்களின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விநியோகிப்பது குறித்தும், அதன்மூலம் அந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கக் கூடிய பயன்கள் பற்றியும் கடந்த 22-ம் தேதி திருப்பூரில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், கோவையைச் சேர்ந்த துரோணா கன்சல்டிங் நிறுவனர் அருண் தயாநிதி மற்றும் மும்பைப் பங்குச் சந்தையின் சிறு, குறு பங்குகள் பிரிவின் தலைவர் அஜய் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். 

எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

இந்தக் கூட்டத்தினைத் தொடங்கிவைத்துப் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், ``சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை திருப்பூர், ஒரு சிறு கிராமம்தான். பின்னலாடைத் தொழில் வந்தபிறகுதான் இந்த நகரம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. `நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி’ என்ற அடிப்படையில்தான் திருப்பூர் தொழில்துறை இயங்கிவருகிறது. ஆனால், அதுவே இந்தத் துறையில் பெரும் அறியாமைக்கும் காரணமாகிவிட்டது.

மனிதவளம் நிறைந்த இந்த நகரத்தில் கடுமையான உழைப்பாளிகள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால், ஸ்மார்ட் ஒர்க்கர்ஸ் மிகவும் குறைவு. உலகளவில் பின்னலாடைத் துறையில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம், வியட்நாம் மற்றும் சீனா போன்ற நாடுகள்தான் இந்தத் துறையில் நமக்குப் போட்டியாக இருக்கின்றன. பஞ்சு உற்பத்தியில் நாம்தான் அவர்களைவிட முன்னணியில் இருக்கிறோம்.

நம்முடைய வளங்களை முழுமையாக நம் திறனுக்காகப் பயன்படுத்தாமல் இருக்கிறோம். உலகில் மனிதன் இருக்கும்வரை துணிகளின் தேவையும் இருந்துகொண்டேதான் இருக்கும். அழிவில்லாத இந்தத் துறையில் அவ்வப்போது புதுமையான உத்திகளைப் புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நிறுவனம் லாபத்தைச் சுவைத்துக்கொண்டே இருக்க முடியும். இங்கு உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பல புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு மேலும் மேலும் உயர்வதற்கு இந்தக் கருத்தரங்கம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும்’’ என்றார்.

அடுத்ததாகப் பேசிய மும்பை பங்குச் சந்தையின் சிறு, குறு பங்குகள் பிரிவின் தலைவர் அஜய் தாக்கூர், ``வடஇந்தியாவில் தொழில் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்ளச் செல்பவர்கள் கோட் சூட் அணிந்துகொண்டும், சொகுசு கார்களிலும்தான் பகட்டாகச் செல்கிறார்கள். ஆனால், இங்கு எல்லோருமே மிகவும் சிம்பிளாக இருக்கிறீர்கள். இதற்குமுன் இரண்டு, மூன்று முறை திருப்பூருக்கு வந்திருக்கிறேன். எஸ்.எம்.இ பிளாட்ஃபார்மில் பல நிறுவனங்களை இங்கு இணைக்க முடியவில்லை.

இந்தத் துறையில் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள நிறைய தொழில்முனைவோர்கள் என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யில் பட்டியலிட்டுள்ளனர். ஆனால், தென் இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அதுவும் ஏற்றுமதிக்குப் பெயர்போன திருப்பூரில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் (Listed Companies) சொற்ப அளவிலேயே இருக்கின்றன.

இங்கு உள்ள பெரும்பாலான நிறுவனங்கள், முதலீட்டாளர் களின் சொந்தப் பணத்தை வைத்துத்தான் தொடங்கப்பட் டுள்ளன. நிலையான ஓர் இடத்தைப் பிடித்தபிறகே வங்கிகளில் கடன் பெற்று தங்களின் தொழிலை மேம்படுத்து கின்றனர். அதனால்தான் பட்டியலிடப்பட்ட பிற நிறுவனங்களின் வளர்ச்சியுடன் இவர்களால் ஈடுசெய்ய முடியவில்லை.

கடன் பிரச்னையைச் சரிக்கட்ட முடியாமல்தான், இங்கு பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அவர்களுடைய பேலன்ஸ் ஷீட்டைப் பார்த்தால், அது மிக ஏற்ற இறக்கமாகவே (Imbalanced) இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் ஜி.டி.பி-யில் எஸ்.எம்.இ நிறுவனங் களின் பங்கு 30 - 40% வரை இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் வெறும் 8% மட்டுமே. இருப்பினும், இங்கு எம்.எஸ்.எம்.இ-க்களே அதிகளவில் வேலைவாய்ப்புகளைப் பூர்த்தி செய்கின்றன. அப்போதும் எஸ்.எம்.இ-களின் பணத்தேவைகள் சீக்கிரம் பூர்த்தி ஆகாததே வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது.

சிறு, குறு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நுழைவதன்மூலமாக, தங்களுக்கு வேண்டிய முதலீட்டை மிக எளிதாகப் பெறலாம். தங்களது சொத்துகளைப் பிணையம் வைக்கவேண்டிய அவசியமில்லை. வட்டி பிரச்னை இருக்காது. 

ஆனால், பங்கு வர்த்தகத்தில் நுழைவதற்கு சில முக்கிய விதிமுறைகள் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, சுமார் மூன்று கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து மதிப்பு இருந்தாக வேண்டும். பங்குச் சந்தையில் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள் தானாகவே கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப் படுகிறமாதிரி, இந்த நிறுவனங் களும் கண்காணிக்கப்படும். அதன்மூலம் அந்த நிறுவனங்கள் இன்னும் வளர்ச்சியடைய வாய்ப்புகள் உருவாகும். 

எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

அதாவது, சிறிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அங்கம் வகிப்பதன்மூலமாக, அவை நாடு முழுவதும் அறியப்படும் நிறுவனங்களாகின்றன. பிறகு அந்த நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுத்து, பலரும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வமுடன் முன்வருவார்கள்.

காலப்போக்கில் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பும் சந்தையில் உயர்ந்துவிடும். என்னைப் பொறுத்தவரை, தொழிற்சாலையே கோயில். அதில் பங்குதாரர்களே கடவுள். கடவுளிடம் வேண்டிக்கொண்டால், வளம் கிடைப்பதைப் போன்று, பங்குதாரர்களே நமக்கு வளம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய துரோணா கன்சல்டிங் நிறுவனர் அருண் தயாநிதி, ``இந்தியாவில் நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு பங்குச் சந்தை சார்ந்த நிதி (Equity Funds) உள்ளன. ஆனால், அவற்றை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

எஸ்.எம்.இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள 480 நிறுவனங்களில், வெறும் 18 நிறுவனங்கள் மட்டுமே தென் இந்தியாவைச் சேர்ந்தவை. எனவே, இங்கு உள்ள நல்ல செயல்திறன்கள் உடைய கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டும்.

சீனா, அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளின் எஸ்.எம்.இ பங்குச் சந்தை மதிப்பைவிட இந்தியாவின் பங்குச் சந்தை மதிப்பு பல மடங்கு குறைவு. இந்த நாடுகளுக்கு இணையான மனிதவளமும் தொழில்வளமும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால், பணவளம் இல்லை. இதை மாற்றியமைத்து நாம் முன்னேற பங்குச் சந்தை மூலம் திரட்டப்படும் நிதி பெரும் உதவியாக இருக்கும்.

சுமார் ஆறு வருடத்துக்குமுன்பு 100 புள்ளிகளில் இருந்த எஸ்.எம்.இ இண்டெக்ஸ் (SME INDEX) இப்போது 1,400 புள்ளிகளில் இருக்கிறது. இதுபோன்ற வளர்ச்சியால் மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு எஸ்.எம்.இ பக்கம் திரும்பும். அப்படியானால், எஸ்.எம்.இ மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். ஒரு தொழில் நிறுவனத்தின் சந்தை மதிப்பைப் பெருக்க, பங்குச் சந்தை தரும் நிதியினால்தான் முடியும். இனியும் சொந்தப் பணத்தையும் வங்கிக் கடனையும் மட்டுமே நம்பியிருக்காமல், நம் இருப்பை ஈக்விட்டியாக மாற்றி வளம்பெற முன்வர வேண்டும்’’ என்றார்.

திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுவரும் சிறு, குறு நிறுவனங் களின் உரிமையாளர்கள், முக்கிய ஊழியர்கள் பலர் இந்தக் கருத்தரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். இறுதியாக, தங்களின் சந்தேகங் கள்- கேள்விகளுக்கு, தெளிவான பதில்களைப் பெற்றனர் கூடியிருந்த தொழில்முனைவோர்கள்.

தி.ஜெயபிரகாஷ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி