Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் மீண்டும் பங்குச் சந்தை நகர்வுக்கு எதிர்மறையாக நகர்ந்துகொண்டிருக்கிறது.  சென்ற வாரம் முழுவதும் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த நிலையில், தங்கம் நல்ல ஏற்றத்தைக் கண்டது.   ஆனாலும், அது நாம் தொடர்ந்து சொல்லிவரும் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையிலிருந்து மேல் எல்லைக்கு நகர்ந்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் மே மாத கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் வருவதால், இனி ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.  தங்கம் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையிலிருந்து மையப் புள்ளிக்கு வந்துள்ளது.  எனவே, 32070 என்ற எல்லை, வலிமையான தடைநிலையாக மாற வாய்ப்புள்ளது. கீழே உடனடி ஆதரவாக 31400 உள்ளது.’’

தங்கம் சென்ற வாரம், நாம் கொடுத்தி ருந்த 31400 என்ற ஆதரவைச் சோதித்தது.  அதை 02.05.2019 அன்று உடைத்து 31160 வரை இறங்கினாலும், மீண்டும் ஏறி 31400-க்கு மேலாக நகர ஆரம்பித்துள்ளது. எனவே, சோதிக்கப்பட்ட ஆதரவு எல்லை மீண்டும் வலிமையாக மாற ஆரம்பித்துள்ளது.  மேலே 32070 என்ற தடைநிலையை இன்னும் தக்கவைத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் அடுத்தகட்டமாக 32160 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 31680-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளியின் நகர்வு இன்னும் ஒரு குறுகிய எல்லைக்குள்தான் நகர்ந்து வருகிறது.  தங்கம் அதைவிட சற்றே அகண்ட எல்லைக்குள் நகர்கிறது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.  வெள்ளி பாட்டத்தை (bottom) ஏற்படுத்தி, மேலே ஏறினாலும் 38450 என்ற எல்லையைத் தடை நிலையாகக் கொண்டுள்ளது. கீழே 37500 என்ற எல்லை ஆதரவாக உள்ளது.’’

நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான     37500-ஐ உடைத்து இறங்கி 02.05.19 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 36678 என்ற எல்லையைத் தொட்டது. அங்கிருந்து, முந்தைய ஆதரவு எல்லையான 37500 தடைநிலையாக மாறியதால், அந்த எல்லைக்கு அருகில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.

இனி என்ன செய்யலாம்?

இறக்கத்தின் போக்கில் உள்ள நிலையில் 37850 என்ற எல்லையை தடைநிலையாகவும், 37000 என்ற எல்லை உடனடி ஆதரவாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் ஏற முடியாமல் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் 4380 என்ற எல்லை மிக முக்கியமான ஆதரவு எல்லை ஆகும்.  மேலே 4670 என்ற எல்லை வலிமையான தடை நிலையாக மாறியுள்ளது.” 

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4380 என்ற எல்லையை 02.05.19 அன்று வலிமையாக உடைத்து இறங்கியது.  இந்த இறக்கம் 4243 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொடவைத்தது. அதன்பின்னும் மெள்ள மெள்ள இறங்கி, 06.05.19 அன்று 4191 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு பின்மீண்டுள்ளது. தற்போது  பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன செய்யலாம்?

கச்சா எண்ணெய் தற்போது 4255 என்ற ஆதரவைக் கொண்டுள்ளது. மேலே 4370 என்ற எல்லை உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.

காப்பர் (மினி)

சென்ற வாரம் சொன்னது…  “காப்பர் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், ஜூன் மாத கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம்.  தற்போது காப்பர் 446-ஐ ஆதரவாகவும் மேலே 455-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.”

காப்பருக்கு நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 446-ஐ வலிமையாக 01.05.19 அன்று உடைத்து இறங்கி, குறைந்தபட்ச புள்ளியாக 434.30-ஐ தொட்டது. அதன்பின் இறக்கம் தொடர்ந்து 428.15 வரை தொடர்ந்தது. இதன்பின் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன செய்ய லாம்?

காப்பர் நல்ல இறக்கத்திற்குப் பிறகு, கீழே 428-ஐ ஆதரவாகவும், மேலே 435-ஐ உடனடித் தடைநிலை யாகவும் உள்ளது!

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in