Published:Updated:

சன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்?

சன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
சன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், www.askgopal.com

சன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், www.askgopal.com

Published:Updated:
சன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
சன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்?

டந்த வாரத் தொடக்கத்தில் சன் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை, ஒரே வர்த்தக நாளில் சுமார் 20% இறங்கி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வேறு சில பார்மா நிறுவனங்களும் பங்கு விலையில் வீழ்ச்சியடைந்தன. ஆனாலும், சன் பார்மாவின் பங்கு விலை வீழ்ச்சியானது, மற்ற நிறுவனங்களின் விலை வீழ்ச்சியைவிட அதிகமாக இருந்தது. சன் பார்மாவின் இந்த விலை இறக்கத்துக்குக் காரணம், அமெரிக்காவில் உள்ள சன் பார்மா நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒரு மிகப் பெரிய சட்டச் சிக்கலில் சிக்கியதுதான்.  

சன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்?

சன் பார்மாவின் துணை நிறுவனமான டாரோ பார்மா அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் மற்றும் இதர வெளிநாட்டுச் சந்தைகளில் இயங்கிவரும் ஒரு மிகப்பெரிய மருந்து நிறுவனம். இஸ்ரேலைச் சேர்ந்த இந்த நிறுவனத்தை நீண்ட சட்டப் போராட்டத்திற்குப்பின் கட்டுப்படுத்தும் பங்கு உரிமையை 2010-ல் பெற்றது சன் பார்மா நிறுவனம். சன் பார்மாவின் வெளிநாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பொருந்தியதாக அமைந்ததால், டாரோ பார்மாவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இப்போது சன் பார்மாவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கும் அந்த நிறுவனமே காரணமாக அமைந்துள்ளது.

என்ன சிக்கல்? 

உலகத்திலேயே அமெரிக்கா ஒரு முக்கிய மற்றும் மிகப் பெரிய மருந்துச் சந்தை. அமெரிக்காவில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் அங்குள்ள மக்களுக்கு உடல் ஆரோக்கியம் என்பது ஒரு முக்கிய பிரச்னை யாக இருப்பதால், அமெரிக்க மருந்துச் சந்தை ஒரு முக்கியமான சந்தையாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், எஃப்.டி.ஏ என வழங்கப்படும் அந்த நாட்டு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு பலவிதமான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தி மருந்துத் துறையை நெறிப்படுத்திவருகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சூழலில் 2014 காலகட்டத்தில், அமெரிக்காவில்  பொதுவான மருந்துகளின் (Generic drugs) விலை தொடர்ந்து ஏறிவந்த காரணத்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் உள்ளூர்  மக்களுக்கு ஆதரவாகவும் மருந்து நிறுவனங் களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கின. மருந்துகளின் விலை ஏற்றம் என்பது 1000% அளவில் இருந்த காரணத்தால் பல நிறுவனங்கள்மீது அந்தக் காலகட்டத்தில் ‘ஆன்டி ட்ரஸ்ட்’ (Anti trust) சட்டப்பிரிவின்படி, உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது. அந்த விசாரணை வளையம் விரிவாகி, இன்றைய சூழலில் அமெரிக்கா விலுள்ள 44 மாகாணங்களில் பல மருந்து நிறுவனங்கள்மீது வழக்குத் தொடரப் பட்டுள்ளது.  

குறிப்பிட்ட பல முன்னணி மருந்து நிறுவனங்கள் கைகோத்துக்கொண்டு, காப்புரிமை அல்லாத பொது மருந்துகளின் விலையை முறைகேடாகப் பன்மடங்கு உயர்த்தி மக்களை ஏமாற்றி வந்துள்ளன என்பதே வழக்கின் சாராம்சம். டாரோ பார்மாவுக்குப் பாதகமான இந்தச் செய்தியின் எதிரொலியாகவே, சன் பார்மாவின் பங்கு விலை  கடும் வீழ்ச்சியடைந்தது.

முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்?

பங்கு விலையில் இதுபோன்ற கடும் வீழ்ச்சி ஏற்படும்போது முதலீட்டாளர்களுக்குக் கவலை ஏற்படும். இப்போதைய சூழலில் இந்தப் பிரச்னை அமெரிக்காவில் சட்ட மற்றும் நீதிமன்றம் சார்ந்த விஷயமாக விஸ்வரூபம் எடுத்துள்ளதால், வரும் மாதங்களில் இதன் தாக்கமானது பங்கு விலையில் எதிரொலிக்கக்கூடும். 

சன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்?

பொதுவாக, இதுபோன்ற வழக்குகளின் வேகம் அசுர வேகத்தில் இருக்காது என்றாலும், இந்த விஷயத்தில் முடிவு விரைவாகத் தெரியும்பட்சத்தில் சன் பார்மா நிறுவனத்திற்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். முறைகேடான விலை நிர்ணயத்தில் டாரோ பார்மா நிறுவனத்தின் பங்களிப்பை உறுதிசெய்தால், பல மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவும், நிர்வாக மற்றும் வியாபாரக் கட்டுப்பாடுகளைச் சந்திக்கவும் நேரிடும்.

அது சன் பார்மா நிறுவனத்திற்கும் பங்கு விலைக்கும் பாதகமான சூழலை ஏற்படுத்தும் என அனலிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். மேலும்,  சென்ற ஆண்டின் இறுதியில் சன் பார்மா நிறுவன முதலாளிகள் மற்றும் உறவினர்கள்மீது நிர்வாக முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனத்தில், தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றம்  சுமத்தப்பட்டது. அதன் காரணமாக, கடந்த பல மாதங்களாகவே நிறுவனத்தின் பங்கு விலை சற்று இறங்கியே வந்தது. இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க சட்டச் சிக்கலும் சேர்ந்துள்ளதால், இந்த நிறுவனத்திற்கு வருங்காலம் சோதனைக் காலமாக அமையலாம்.   

சன் பார்மாவின் வளர்ச்சியானது நீண்ட காலத்தில்  மருந்துத் துறையின் வளர்ச்சியையொட்டி ஒரு நல்ல நிலையை எட்டிப்பிடிக்கும் என்றாலும், இப்போதைய சவால்களை நிறுவனம் எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ..?