நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

பொதுவாக, உலகப் பங்குச் சந்தையைப் பொறுத்து, தங்கத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பது வரலாறு. அது நம் உள்நாட்டுப் பங்குச் சந்தை தன்னிச்சையாக நகருவதற்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறியே. இந்திய நாடளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 23.05.19 அன்று காலையில் இந்திய பங்குச் சந்தை பெரிய ஏற்றத்தைச் சந்தித்தவேளையில், தங்கமும் ஏறியது குறிப்பிடத்தக்கது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது நல்ல இறக்கத்திற்குப்பிறகு, முக்கிய ஆதரவு எல்லையாக 31880-யும் உடனடித் தடைநிலையாக 32260-யும் கொண்டுள்ளது.’’

தங்கம் சென்ற வாரம்,  திங்களன்று கேப் டவுனில் (gap down) இறங்கி, 31406 வரை இறங்கியது. இது உலகச் சந்தையையொட்டி நடந்தது என்று சொல்லலாம். அதன்பின் தங்கத்திற்கு நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 31880 தடைநிலையாக மாறிவிட்டது.  இதனால் தங்கம் அங்கிருந்து இறங்குமுகமாக மாறியது.

அடுத்து உருவான ஆதரவான 31460-யும் உடைத்து 31265-ஐ தொட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த அன்று, பங்குச் சந்தை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டபோது, தங்கமும் 31265 என்ற குறைந்தபட்சப் புள்ளி யிலிருந்து வலிமையாக ஏறி, 31750 என்ற உச்சத்தைத் தொட்டது. அதாவது, இந்திய பங்குச் சந்தையும், தங்கமும் ஒரே திசையில் நகர்ந்தது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? தங்கத்தின் ஜூன் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால்,  ஜூலை மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம்.   தங்கம் வலிமையான இறக்கத்திற்குப்பிறகு  31420 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. இதை உடைக்காதவரை, எல்லா இறக்கத்திலும் 31420-ஐ நஷ்டத் தடையாக (stop loss) வைத்து வாங்கி விற்கலாம். 

மேலே 31880 உடனடித் தடைநிலையாக உள்ளது. இந்த தடையைத் தாண்டினால் வலிமையான ஏற்றம் வரலாம்.

வெள்ளி (மினி)

வெள்ளியானது தங்கத்தைவிட அதிக அளவு வலிமைகுன்றி இறங்க ஆரம்பித்துள்ளது.  தங்கம் ஒரு பாட்டத்தை உருவாக்கி அதற்குமேல் இருக்க, வெள்ளி அதனுடைய பாட்டத்தை உடைத்து இறங்கியுள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி வலிமையான இறக்கத்திற்குப்பிறகு, 36540 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 37160 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி நாம் தந்திருந்த ஆதரவு எல்லையான 36540-ஐ உடைத்து இறங்கி 36080 வரை இறங்கியது. ஆனாலும், கடந்த ஐந்து நாள்களாக ஒரு புதிய பாட்டத்தை ஏற்படுத்த வெள்ளி முயற்சி செய்து வருகிறது.

இனி என்ன செய்யலாம்?  வெள்ளி, 36000 என்ற புதிய பாட்டத்தை உருவாக்கிய நிலையில் அதுவே ஆதரவாகச் செயல்படலாம். இதையே இனி எல்லா வாங்குதலுக்கும் நஷ்டத் தடையாகக் கொள்ளலாம். மேலே 36890-ஐ தடைநிலையாகக் கொள்ளலாம். இதைத் தாண்டினால் புதிய ஏற்றம் வரலாம்.
    
கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் மே மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். தற்போது 4540 என்ற எல்லையை உடனடித் தடை நிலையாகவும், கீழே 4380 முக்கிய ஆதரவாகவும் உள்ளது.” 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் நன்கு இறங்கி, சில வாரங்கள் பக்கவாட்டு நகர்வில் இருந்துவந்தது.  அதன்பின் நாம் கொடுத்த ஆதரவான 4380-ஐ உடைத்து வலிமையாக இறங்கி 4019 வரை இறங்கியது. 

இனி என்ன செய்யலாம்? கச்சா எண்ணெய் புதிய இறக்கத்திற்குத் தயாரானாலும், கீழே 4000 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது. இதையும் உடைத்தால் பெரிய இறக்கம் வரலாம். மேலே 4190 உடனடித் தடைநிலை ஆகும்.

காப்பர் (மினி)


சென்ற வாரம் சொன்னது… “காப்பர் நெருக்கமான பக்கவாட்டு நகர்வில் உள்ள நிலையில் 423 என்பது உடனடி ஆதரவாகும்.  மேலே 431 உடனடித் தடைநிலை ஆகும்.”

காப்பருக்கு நாம் தந்திருந்த ஆதரவான 423-ஐ உடைத்து, 410.65 வரை இறங்கியுள்ளது.  தொடர் இறக்கத்திலுள்ள காப்பர் ஒரு புல்பேக் ரேலி மூலம் மேலே ஏறலாம்.

இனி என்ன செய்யலாம்? காப்பர் தொடர் இறக்கத்திலுள்ள நிலையில் 408-ஐ உடனடி ஆதரவாக வும், மேலே 420-ஐ தடை நிலையாகவும் கொண்டுள்ளது. அந்த எல்லையை உடைக்கும் போது ஏற்றம் வரலாம்.

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in