நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்தியப் பங்குச் சந்தை வரலாறு காண உச்சத்தை எட்டியிருக்கிறது. பொதுவாக, நீண்ட கால முதலீடு என்கிறபோது லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளைவிட மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் அதிக லாபம் தரக்கூடியவையாக இருக்கும். அந்த வகையில், ஏற்றம் தர வாய்ப்புள்ள மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளைப் பரிந்துரை செய்யும்படி பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். பங்குகளைப் பரிந்துரைக்கும்முன், சந்தையின் தற்போதைய நிலை குறித்து அவர் சொன்னதாவது...

``இந்தியப் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தகுந்த விளைவினை உண்டாக்கும் முக்கியக் காரணியாக நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இருந்தது. தேர்தல் முடிந்து மத்தியில் நிலையான அரசு அமைந்ததைத் தொடர்ந்து லார்ஜ்கேப் பங்குகள் இடம்பெற்றிருக்கும் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. கூடவே, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் ஏற்றம் காணத் தொடங்கியிருக்கின்றன.

இந்த மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் விலை இறங்கும்போது லார்ஜ்கேப் பங்குகளைவிட வேகமாக இறங்கும். அதேசமயம், ஏற்றம் காணும்போது லார்ஜ்கேப் பங்குகளைவிட வேகமாக ஏற்றம் காணும் தன்மை கொண்டவை.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்

மிட்கேப் பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.5,000 கோடி தொடங்கி ரூ.20,000 கோடிக்கு இடைப்பட்டதாக இருக்கும். ஸ்மால்கேப் பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலை சேஷன் ரூ.5,000 கோடி மற்றும் ரூ.1,000 கோடிக்கு இடைப் பட்டதாக இருக்கும்.

இன்றைக்கு லார்ஜ்கேப் அல்லது மிகப் பெரிய புளூசிப் பங்குகளாக இருப்பதெல்லாம் ஒருகாலத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளாக இருந்தவை என்பதால், இந்த வகைப் பங்குகள்மீது சிறு முதலீட்டாளர்களுக்குத் தீராத காதல் எப்போதும் உண்டு.

சிறு முதலீட்டாளர்கள் மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளை விரும்புவதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங் கள்தான் பெரும்பாலான முதலீட்டாளர் கள் விரும்ப முக்கியமான காரணங்களாகும்.

1. லார்ஜ்கேப் பங்குகளுடன் ஒப்பிடும்போது மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலை குறைவு.

2. பங்கு விலை வேகமாக உயர்வது.

3. குறைவான முதலீட்டுக் காலம்.

அட்டவணை சொல்லும் உண்மை...

எதிர்பக்கத்திலுள்ள அட்டவணை 1-ல் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் நிஃப்டி, நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் எப்படிச் செயல் பட்டுள்ளன எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும், இவற்றிலிருந்து தெரியவரும் உண்மைகள்...

1. அனைத்துக் குறியீடுகளும் ஒரே காலகட்டத்தில் உச்சத்தையோ அல்லது அதிக இறக்கத்தையோ சந்திக்கவில்லை.

2. சமீபத்திய இறக்கத்திலிருந்து மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள், கிட்டத்தட்ட லார்ஜ்கேப் குறியீடுகள் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளன.

3. மிட்கேப் குறியீட்டைவிட ஸ்மால்கேப் குறியீடு சிறப்பாக ஏற்றம் கண்டிருக்கிறது.

4. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே-23 முதல் மிட்கேப் குறியீடானது லார்ஜ் கேப் இண்டெக்ஸ் மற்றும் ஸ்மால்கேப் இண்டெக்ஸைவிட அதிக ஏற்றம் கண்டிருக்கிறது.

கற்கும் பாடங்கள்

இதிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் என்ன?

முதல் பாடம், அனைத்துக் குறியீடுகளும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒன்றுபோல் செயல்படவில்லை. அதாவது, ஒரே நேரத்தில் ஏற்றத்தையோ, இறக்கத்தையோ சந்திக்க வில்லை. கடந்த ஆறு மாதங்களில் நிஃப்டி 50 குறியீடு, 2018 டிசம்பரில் குறைந்தபட்சப் புள்ளிகளுக்கு இறக்கம் கண்டுள்ளது. மிட்கேப் குறியீடு மற்றும் ஸ்மால்கேப் குறியீடு, 2019 பிப்ரவரியில் குறைந்தபட்சப் புள்ளிகளுக்கு இறக்கம் கண்டுள்ளன. அதாவது, நிஃப்டி குறியீடு குறைந்தபட்சப் புள்ளிகளுக்கு இறங்கிய இரண்டு மாதங்கள் கழித்து, மிட்கேப் குறியீடு மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் குறைந்தபட்சப் புள்ளிகளுக்கு இறங்கியுள்ளன. ஏற்றத்திலும் இதுபோன்ற ஒற்றுமை காணப்படுகிறது.

இரண்டாம் பாடம், 2019 ஜூனில் நிஃப்டி 50 அதன் வாழ்நாள் உச்சத்தை அடைந்தது. மிட்கேப் குறியீடு மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள், 2019 ஏப்ரலில் அவற்றின் உச்சத்தை அடைந்தன. அவற்றின் முந்தைய உச்சத்தைவிட 4% ஏற்றம் கண்டன. குறியீட்டின் ஏற்ற இறக்கமானது அதில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை நிறுவனப் பங்குகளின் இயக்கத்தின் பிரதிபலிப்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மூன்றாம் பாடம், சந்தையானது வெவ்வேறு சந்தைக் குறியீடுகளில் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு கால கட்டங்களில் நகரும். இது, சிறு முதலீட்டாளர்களுக்கேற்ற பங்குகளைத் தேர்வு செய்வதில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

நான்காம் பாடம், ஒரு முதலீட்டாளர் குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த லார்ஜ்கேப் பங்குகள், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்கு களைத் தேர்வு செய்வதற்கான வேறுபாடுகளை அறிந்துகொள்வது முதல் நிலை. இது ஓர் ஆரம்பநிலைதான். எனவே, எந்தவொரு நிறுவனப் பங்கினையும் அதன் செயல்பாட்டு வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவசியம் கவனித்து, அதன் அடிப்படையில்தான் தேர்வு செய்யவேண்டும்.

நான்காம் காலாண்டு முடிவுகள்

நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட பங்கு நிறுவனங்களிலிருந்து நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 194 மிட்கேப் நிறுவனப் பங்குகளில் 47% பங்குகள் நல்ல நிதிநிலை முடிவுகளையும் 53% நிறுவனங்கள் மோசமான நிதிநிலை முடிவு களையும் தந்துள்ளன. இதேபோல், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட 373 ஸ்மால்கேப் நிறுவனங் களில் 40% நிறுவனங்கள் நல்ல நிதிநிலை முடிவுகளையும் 60% நிறுவனங்கள் மோசமான முடிவு களையும் அளித்துள்ளன.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களை மிகவும் ஆராய்ந்துதான் முதலீட்டுக்குத் தேர்வு செய்ய வேண்டும். சமீபத்திய பொருளா தார மந்தநிலை மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களைப் பாதித்துள்ளன. மேலும், அரசின் கொள்கை மாற்றங்களும் இந்த நிறுவனங்களைப் பாதித்திருக் கின்றன. இவற்றையும் கவனமாக ஆராய்ந்து முதலீட்டுக்கான பங்குகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

அட்டவணை 2-ல் குறிப்பிடப் பட்டிருக்கும் நிறுவனங்கள், தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருபவை. மேலும், கடந்த மூன்று காலாண்டுகளாக முதலீட்டுக்காகக் கவனிக்கப்பட்டுவரும் பங்குகளாகவும் உள்ளன. இந்த நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் எதிர்காலம்

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், சர்வதேச விவகாரங்கள், அரசியல் நிலவரம் போன்றவற்றைப் பொறுத்துத்தான் பங்குச் சந்தையின் செயல்பாடு இருக்கும். மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திருப்பது, பங்குச் சந்தைக்குச் சாதகமான அம்சம் என்பதுடன், அனைத்துப் பிரிவு களும் லாபம் அடைய வாய்ப்புள்ளது. வட்டி விகிதக் குறைப்பின்மூலம் முந்தைய காலாண்டைவிட நடப்புக் காலாண்டில் பெரும்பாலான துறைகள் வளர்ச்சிக் காணும் என எதிர்பார்க்கலாம்.

நுகர்வு அதிகரிப்பு வேலைவாய்ப் பில் வளர்ச்சியை ஏற்படுத்தும். மிட்கேப் பிரிவில் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள், ஸ்மால் கேப் பிரிவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானத் துறை நிறுவனங்கள் முதலீட்டுக்குக் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றன.

பங்கு முதலீட்டுக் கலவையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், இந்தப் பங்குகளை நிறுவனத்தின் நிர்வாகத் திறமையையும் கவனித்து முதலீட்டுக்குத் தேர்வு செய்வது நல்லது. நல்ல தரமான மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளைத் தேர்வுசெய்து முதலீடு செய்யும்போது உங்களின் போர்ட் ஃபோலியோ வருமானம் நன்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் அதிக ரிஸ்க் கொண்டவை என்பதால், இந்தப் பங்கு களைக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது மறுஆய்வு செய்வது அவசியம். இதன்மூலம் இந்தப் பங்குகள் ரிஸ்க்கினைக் குறைக்க முடியும். பங்குகள்மீது சென்டிமென்ட் எதுவும் வைக்காமல், நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் வந்ததும் அதை எடுக்கத் தவறாதீர்கள்’’ என்றார் அவர்.

ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் முயற்சி செய்து பார்க்கலாமே!

சி.சரவணன்