தங்கம் (மினி)

தங்கம் ஒரு வலுவான பாட்டத்தை ஏற்படுத்தியிருப்பதால், இனி ஒரு வலுவான ஏற்றத்திற்கும் வழிவகுக்கலாம். இப்படித்தான் சென்ற வாரமும் குறிப்பிட்டிருந்தோம். அதுவேதான் நடந்தும் உள்ளது. பங்குச் சந்தை வலுவாக இருக்கும்போதும் கடந்த வாரம் தங்கம் ஏறியது. பங்குச் சந்தை சற்றே வலிமை குன்றியபோதும் தங்கம் ஏறியது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கத்தின் விலைப்போக்கு மாறிய நிலையில், 32300 என்பது உடனடித் தடைநிலை ஆகும். இதை உடைத்து ஏறினால் 32650 என்ற எல்லையை நோக்கி நகரலாம். கீழே முந்தைய தடைநிலையான 31880 தற்போது ஆதரவாக மாற வாய்ப்புள்ளது. இதை உடைத்தால் மிதமான இறக்கம் வரலாம்.’’

சென்ற வாரம் தங்கத்திற்கு தங்கமான வாரமாகவே முடிந்தது. கொடுத்திருந்த தடைநிலையான 32300-ஐ உடைத்து தங்கம் ஏறியது. சென்ற வாரம் திங்களன்றே 32300-ஐ உடைத்து 32440 என்ற உச்சத்தைத் தொட்டது. அடுத்தடுத்த நாள்கள் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தோற்றுவித்துக்கொண்டே இருந்தது. 05.06.2019 அன்று மட்டும் தங்கம் ஏறியபோது, ஒரு மிகப்பெரிய ஏற்றம் அடைத்து, 32866 என்ற உச்சத்தைத் தொட்டு பின் இறங்கி 32607-ல் முடிந்தது. அடுத்தடுத்த நாள்கள் முடிவு விலையின் அடிப்படையில் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தோற்றுவித்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் வலிமையான நிலையில் தற்போது 32900 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது. இதை உடைத்தால் ஏற்றம் மிக பலமாக இருக்கலாம். கீழே 32470 என்பது உடனடி ஆதரவு எல்லை ஆகும்.

வெள்ளி (மினி)

வெள்ளியானது முந்தைய வாரம் தங்கத்தின் நகர்விலிருந்து சற்றே மாறினாலும், சென்ற வாரம் முழுவதும், தங்கம் நகர்ந்த அதே திசையில் அச்சு மாறாமல் நகர்ந்தது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி, தொடர்ந்து இறங்கினாலும் தற்போது 35900 என்ற எல்லையை ஆதரவாக எடுத்து மேலே திரும்பி யுள்ளது. இந்த எல்லையை நஷ்டத் தடையாக வைத்து எல்லா இறக்கத்தி லும் வாங்கலாம். இறங்கினால் அதிகமாக இறங்கலாம். மேலே தடைநிலை 36750 ஆகும்.’’

வெள்ளியை 35900-ஐ நஷ்டத் தடையாக வைத்து வாங்கலாம் என்று சொல்லியிருந்தோம். அதன்படி செய்திருந்தால், பெரிய லாபம் கிடைத்திருக்கும். வெள்ளி சென்ற வாரம் முழுவதும் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருந்தது.

05.06.19 அன்று மட்டும் தங்கத்தைப்போலவே பெரிய ஏற்றம் அடைந்து உச்சமாக 37415-ஐ தொட்டது.

இனி என்ன நடக்கலாம்?

வெள்ளி வலிமையாக ஏறிய நிலையில் 37450 தடைநிலையாகும். இதை உடைத்தால் மிகப்பெரிய ஏற்றம் வரலாம். கீழே 36870 என்பது முக்கிய ஆதரவு நிலை ஆகும்.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தொடர் இறக்கத்தில் உள்ள நிலையில் உடனடி ஆதரவு எல்லை 3780 ஆகும். உடைத்தால் இறக்கம் தொடரலாம். தற்போதைய தடைநிலை 3980 ஆகும்.”

கச்சா எண்ணெய், ஆதரவு எல்லையான 3780-ஐ உடைத்து 3522 என்ற எல்லையைத் தொட்டது. விற்று வாங்கும் முறையில் வியாபாரம் செய்திருந்தால் நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.

சென்ற வாரம் தொடர்ந்து நான்கு நாள்களாக இறங்குமுகமாக இருந்த நிலையில், ஒரு புல்பேக் ரேலிக்குத் தயாராகிறது.

இனி என்ன நடக்கலாம்?

கச்சா எண்ணெய் தொடர்ந்து இறங்கிய நிலையில், உடனடித் தடைநிலை 3780 ஆகும். கீழே 3555 ஆகும்.

காப்பர் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “காப்பர் தொடர் இறக்கத்தில் உள்ள நிலையில் 405 உடனடி ஆதரவாகவும், மேலே 415 தடைநிலையாகவும் உள்ளது.’’

காப்பர், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 415-ஐ தாண்டவில்லை. கீழே ஆதரவு எல்லையான 405 சோதித்துவிட்டு சற்றே மேலே ஏறியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்?

காப்பர் தொடர்ந்து 415-ஐ தடைநிலையாகவும் கீழே 400-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது. எந்த பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் வியாபாரம் செய்யலாம்.

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in