Published:Updated:

`முதலீடு செய்யும் வயதில் ஆலோசகர்!' - 19 வயதில் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் ஆன இளைஞர்

மேலும், செபி பதிவு சப்- புரோக்கராக இருக்கிறார். இதன் மூலம் 20 பேரின் பங்கு முதலீட்டு கணக்குகளையும் நிர்வகித்து வருகிறார். காப்பீட்டு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

நம்மில் பலர் 19 வயதில் முதலீட்டை கூட ஆரம்பித்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்த வயதில் ஹரியானாவை சேர்ந்த இளைஞர் தேஜ்ஷிவ் சர்மா மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராகி சாதனை படைத்திருக்கிறார்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் படிக்கிற காலத்திலேயே பகுதி நேர வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கிறதா என ஆன்லைனில் தேடியிருக்கிறார். அப்போது அவருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மீது ஆர்வம் பிறந்திருக்கிறது.

mutual Fund
mutual Fund
மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்கைக் குறைத்து லாபம் பெறும் வழிகள்..! முதலீட்டாளர்களுக்கான டிப்ஸ்...

இந்த முதலீடு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள தன் தாயின் பெயரில் சிறிய தொகையை முதலீடு செய்தார். அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நெளிவு சுளிவுகளை அறிந்துகொண்டார். சொந்தமாக மியூச்சுவல் ஃபண்ட் விநியோக வணிகத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதற்கான செபி அமைப்பின் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

ஆரம்பத்தில் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வை பரப்பி, அவர்களை முதலீட்டாளர் ஆக்கினார். மேலும், யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் புதிய முதலீட்டாளர்களைப் பெற்று வருகிறார். இப்போது உலகமே டிஜிட்டல் முறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இவருக்கு டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் கூட முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். தற்போது வாடகைக்கு அலுவலகம் எடுத்து அதில் செயல்பட்டு வருகிறார். இப்போது சுமார் 50 பேர் இவரின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். சில ஆண்டுகளில் குறைந்தது ஆயிரம் பேரையாவது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வைக்க வேண்டும் என்பது இவரின் இலக்காக இருக்கிறது.

தேஜ்ஷிவ் சர்மா
தேஜ்ஷிவ் சர்மா
மியூச்சுவல் ஃபண்ட்... அரசு ஊழியர்களுக்கு நிபந்தனை உள்ளதா..? அடிப்படை சந்தேகங்கள்... தீர்வுகள்

மேலும், செபி பதிவு சப்- புரோக்கராக இருக்கிறார். இதன் மூலம் 20 பேரின் பங்கு முதலீட்டு கணக்குகளையும் நிர்வகித்து வருகிறார். காப்பீட்டு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அதாவது, முழுமையான முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி, செயல்படுத்திவருகிறார். அவர் மென்மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு