Published:Updated:

சந்தைக்குப் புதுசு! : கைகொடுக்கும் மொபைல் இன்ஷூரன்ஸ்!

மொபைல்
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மொபைல் இன்ஷூரன்ஸ்

புதிய அறிமுகம்

சந்தைக்குப் புதுசு! : கைகொடுக்கும் மொபைல் இன்ஷூரன்ஸ்!

புதிய அறிமுகம்

Published:Updated:
மொபைல்
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மொபைல் இன்ஷூரன்ஸ்

ற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், பங்கு வெளியீடுகள், கடன் பத்திரங்கள் குறித்துப் பார்ப்போம்.

லைஃப்டைம் இன்கம் பிளான்!

இழப்பீடு விகிதத்தில் முன்னணியிலிருக்கும் மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஓய்வுக்காலத்துக்குப் பிறகு பயன்பெறும் வகையில், ‘மேக்ஸ் லைஃப் கேரண்டீடு லைஃப்டைம் இன்கம் பிளான்’ (Max Life Guaranteed Lifetime Income Plan) என்ற இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பாலிசி, ஓய்வுக்காலத்துக்காகத் திட்டமிடும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கிறது.

மொபைல்
இன்ஷூரன்ஸ்
மொபைல் இன்ஷூரன்ஸ்

முதிர்வுத் தொகையை மொத்தமாகக் கொடுப்பது, மாதா மாதம் கொடுப்பது, கணவன் மற்றும் மனைவி இருவருக்குமோ, கணவனுக்குப் பிறகு மனைவிக்கோ கொடுப்பது என நான்கு வகையான ஆண்டளிப்பு வாய்ப்புகள் இந்தத் திட்டத்தில் இருக்கின்றன. உடனடி ஆண்டளிப்பு பெற விரும்பினால், குறைந்தபட்ச வயது 50 ஆகவும், அதிகபட்ச வயது 80 ஆகவும் உள்ளது. கவரேஜ் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. அதிகபட்சம் எவ்வளவு தொகைக்கும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ள முடியும். பாலிசிக்கான பிரீமியம், முதிர்வுத் தொகை மற்றும் பாலிசிதாரர்களின் வயதைக்கொண்டு கணக்கிடப்படும். பாலிசிக்கான பிரீமியத்தை மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம்.

மொபைல் இன்ஷூரன்ஸ்!

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு இன்ஷூரன்ஸ் நிறுவனமும், ரியல்மீ ஸ்மார்ட்போன் நிறுவனமும் இணைந்து ரியல்மீ ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்காக ஒரு மொபைல் இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி யிருக்கின்றன.

18 மாதங்கள் வரையுள்ள ரியல்மீ ஸ்மார்ட் போன்களுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட்போன் டிஸ்பிளே பிரச்னைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பழுது பார்த்துக் கொள்ளலாம். இதற்கான பிரீமியம் 250 ரூபாய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

18 மாதங்கள் வரையுள்ள ரியல்மீ ஸ்மார்ட் போன்களுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஷாப்பிங் கிரெடிட் கார்டுகள்!

எஸ்.பி.ஐ கார்டு நிறுவனம், லேண்ட்மார்க் குழுமத்துடன் இணைந்து கோ-ஷாப்பிங் கார்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் லைஃப்ஸ்டைல் ஹோம் சென்டர் எஸ்.பி.ஐ கார்டு, மேக்ஸ் எஸ்.பி.ஐ கார்டு மற்றும் ஸ்பார் எஸ்.பி.ஐ கார்டு ஆகிய மூன்று கிரெடிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இந்த கார்டுகளைக்கொண்டு சில முக்கியக் கடைகளில் ஷாப்பிங் செய்யலாம். இதனால் அதிக ரிவார்டு பாயின்ட்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இந்த கிரெடிட் கார்டுகள் பேஸ், செலக்ட் மற்றும் பிரைம் என்கிற மூன்று வகைகளில் கிடைக்கும்.

மொபைல்
இன்ஷூரன்ஸ்
மொபைல் இன்ஷூரன்ஸ்

லைஃப் ஸ்மார்ட் புரொடெக்ட்!

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ‘லைஃப் ஸ்மார்ட் புரொடெக்ட் கோல்’ (Life Smart Protect Goal) என்ற டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி யிருக்கிறது. இந்தத் திட்டத்தின் துணை பாலிசிகள் மூலம் 55 வகையான பெரிய மற்றும் சிறிய வியாதிகளுக்கான மருத்துவச் செலவுகளை க்ளெய்ம் செய்துகொள்ளும் படியான துணை பாலிசிகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

பாலிசிதாரரின் பிள்ளைக்கு 25 வயது பூர்த்தி ஆவதற்குள், பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், அவருடைய மனைவியின் ஆதாரத்துக்கும் பிள்ளையின் படிப்புச் செலவுக்கும் இந்த பாலிசியிலிருந்து க்ளெய்ம் கிடைக்கும்.

பாலிசிக்கான பிரீமியம் செலுத்துவதில் சிங்கிள், ரெகுலர் மற்றும் லிமிடெட் ஆகிய மூன்று ஆப்ஷன்கள் இருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism