Published:Updated:

சவுதி அராம்கோ மீது தாக்குதல்.... கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு நீடிக்குமா?

crude oil
பிரீமியம் ஸ்டோரி
News
crude oil

கச்சா எண்ணெய்

ந்தியப் பொருளாதாரத்தை அவ்வப்போது பயமுறுத்தும் விஷயம், கச்சா எண்ணெய் விலையேற்றம். மீண்டும் சர்வதேசச் சந்தையில் ஒரே தினத்தில் நைமெக்ஸ் க்ரூட், பிரன்ட் (Brent) ஆகிய இரண்டுமே சுமார் 19% அதிகரித்தன. அதன்பிறகு, கடந்த திங்களன்று வர்த்தகத்தில் நாள் முழுவதும் கச்சா எண்ணெய் விலை 15 சதவிகிதத்துக்கு மேலாக அதிகரித்துக் காணப்பட்டது. 1988-ம் ஆண்டிற்குப்பிறகு ஒரே தினத்தில் இத்தகைய விலையேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

இந்த விலை அதிகரிப்புக்கு, சவுதி எண்ணெய் கிணறுகளின்மீது நடைபெற்ற தாக்குதல்கள் தான் இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டன. இதனால் சவுதியின் உற்பத்தியில், நாள் ஒன்றுக்கு 5.7 மில்லி பேரல்கள் என்ற அளவிற்கு உற்பத்தியானது தடைப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இது சவுதியின் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்துக்கும் மேலாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதியின் பங்களிப்பு 10% இருக்கிற நிலையில், 5% தற்சமயம் குறைந்துள்ளது.

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

இத்தகைய தாக்குதல் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கிற ஒரு நாட்டின் உற்பத்தி தடைப்படும்போது, பதற்றமான சூழ்நிலை உருவாவது இயற்கையே. சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெயை எடுத்து உடனடியாக சப்ளை செய்யவேண்டியிருப்பதால், ‘இன்வென்ட்ரி’ என்று சொல்லப்படுகிற கையிருப்பு குறைகிறது. இதன் தாக்கம் விலையேற்றத்தில் முடிவடைகிறது.

சர்வதேச விலை அதிகரிப்பு நீடிக்குமா?

தாக்குதல்களை அடுத்து பல்வேறு கேள்வி களை நமக்கு எழுப்புகின்றன. அதாவது, தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள உற்பத்தி முடக்கம் எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் அல்லது உடனடியாக சகஜநிலைமைக்குத் திரும்பி உற்பத்தியைத் தொடர இயலுமா என்பது போன்ற சந்தேகங்களை எழச் செய்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சவுதி அராம்கோ மீது தாக்குதல்.... கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு நீடிக்குமா?

மேலும், இப்படிப்பட்ட தாக்குதல்கள் மீண்டும் நடைபெறுவதற்குச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதையும் உலக அளவில் முதலீட்டாளர்கள் அச்சத்துடன் பார்ப்பதால், ஒருவிதமான நிச்சயமற்றத்தன்மை காணப்படுகிறது.

இப்படிப்பட்ட பதற்றங்கள் கச்சா எண்ணெய் விலையிலும் தங்கம் போன்ற பாதுகாப்பான விஷயங்களை நோக்கி முதலீடுகள் நகர்வதற்கும் காரணமாக இருக்கின்றன. மேலும், இதுபோன்ற தாக்குதல்களால், முதலீட்டாளர்களின் நிதி சார்ந்த, அதுவும் ‘ரிஸ்க் அஸெட்’ என்று சொல்லக் கூடிய பங்குச் சந்தைகள் உடனடியாக அதிக இறக்கங்களைச் சந்திக்கவைக்கின்றன.

இந்த நிகழ்வுக்குப்பிறகு, தனது இழப்புகளை ஈடுகட்ட சவுதி, ‘ஒபெக்’ உறுப்பு நாடுகளை உற்பத்தியை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்வதற்குப் பதிலாக, அதிக உற்பத்தியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டது. அதாவது, இந்த நிகழ்வினால் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தைத் தக்க வைக்கும் முகமாக இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கருதப் படுகிறது. ஏனென்றால், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெயை உலகச் சந்தைக்குத் திரும்ப வாய்ப்பிருந்தாலும் அதை உடனடியாக நடைமுறைப் படுத்த விரும்பவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தாக்குதலுக்கு முந்தைய உற்பத்தி அளவை சவுதி எட்ட 10 முதல் 15 நாள்கள் ஆகலாம் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த புதன் கிழமையன்றே சவுதியின் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின்படி, தடைப்பட்ட உற்பத்தி அளவில் பாதிக்கும்மேலாக இரு தினங்களுக்குள்ளேயே சீரமைக்கப்பட்டு, உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாகக் கூறப் பட்டது. அடுத்து, ‘பிரன்ட்’ வகை கச்சா எண்ணெய் 5 சதவிகிதத்துக்கும் மேலாக இறக்கம் கண்டு வர்த்தகமானது. இந்த செப்டம்பர் கடைசியில் சவுதியானது தனது முழு உற்பத்தியை அடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, இந்தக் கால அளவு நீடிக்கும்பட்சத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரலாம். ஆனால், அப்படிக் காலதாமதமாவதற்கு வாய்ப்புகள் குறைவு.

சவுதி அராம்கோ மீது தாக்குதல்.... கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு நீடிக்குமா?

இதற்கான காரணங்கள் பல. முதலாவதாக, மற்ற எண்ணெய் வள நாடுகளை விட, உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கும் திறன் சவுதிக்கு மட்டுமே கொண்டது. இரண்டாவதாக, சந்தைப் போட்டியில் சவுதி தனது விற்பனை வாய்ப்பை மற்ற நாடுகளுக்கு விட்டுத்தர முன்வருமா என்பதும் சந்தேகமே. எனவே, விலையேற்றம் என்பது தற்காலிகமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும், உலகளவில் பொருளாதார மந்தநிலை என்ற கருத்துகள் மேலோங்கிய நிலையில், தேவை அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

கச்சா எண்ணெய் விலையேற்றமும் பங்குச் சந்தைகளின் இறக்கமும்

பொதுவாகவே கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பங்குச் சந்தைகள் உடனடியாக இறங்குவது இயல்பான ஒன்று என்றாலும், இந்த முறை 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித் திருப்பது, வளரும் நாடுகளுக்கு மிகவும் கவலையளிக்கும் செய்தியாக மாறியது. இதனால் அரசாங்கங்கள் சவாலான கால கட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை சர்வதேசச் சந்தையில் பத்து டாலர்கள் அதிகரித்தால், பணவீக்கம் 0.5% அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, ரிசர்வ் வங்கியும் கச்சா எண்ணெய் விலைபோக்கின்மீது தனது கவனத்தைச் செலுத்தும்.

ஏற்கெனவே வாகனத்துறை மந்தமான போக்கைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது நுகர்வோரின் வாங்கும் திறனைக் குறைக்கச் செய்து, மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். நடப்புக் காலாண்டில், நிறுவனங்களின் செயல்பாடுகளில் தொய்வைச் சந்திக்கலாம். இதனை முன்கூட்டியே உணர்ந்து பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திக்கின்றன.

நம் நாட்டுக்கு என்ன பாதிப்பு?

நமது கச்சா எண்ணெய்த் தேவையில் 83 சதவிகிதமானது இறக்குமதி செய்து பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் 70% மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளின் வரிசையில், ஈராக்கிற்கு அடுத்தபடியாக சவுதி இருக்கிறது. (பார்க்க, அட்டவணை) சவுதியில் இப்போது ஏற்பட்டிருக்கும் உற்பத்தி இழப்பினால், நம் நாட்டிற்கு எத்தகைய இடையூறுகள் வரும் என்பதையும் அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு நாடுமே, கச்சா எண்ணெயை அவசரக் காலத் தேவைக்கென்று கையிருப்பைச் சேமித்துவைத்திருக்கும். உதாரணத்திற்கு, அமெரிக்கா, தனது பயன்பாட்டுக்குத் தேவை யானதைப் பூர்த்தி செய்ய இரண்டு மாதங்களுக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெய் தேவையைக் கையிருப்பாக வைத்துள்ளது. அதேபோல, நம் நாடும் தனது பயன்பாட்டில் இரண்டு வாரத்திற் கான தேவையைக் கையிருப்பாக வைத்திருக்கிறது.

விசாகப்பட்டினம், மங்களூர் மற்றும் உடுப்பி அருகே படூர் ஆகிய மூன்று இடங்களில் பூமிக்கு அடியில் 5 மில்லியன் டன்கள் என்ற அளவிற்குக் கையிருப்பாக வைத்துள்ளது. இதுதவிர, நாடு முழுவதுமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களிலும் (சேமிப்புக்கிடங்குகளில்) 40 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயைக் கைவசம் வைத்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை கடந்த ஜூன், ஜூலையுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் 60 டாலர்களுக்கும் குறைவாகக் காணப்பட்டது.

அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல் நடந்த சில நாள் களிலேயே கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிவிட்டன. கடந்த புதன்கிழமை அன்று காலை நிலவரப்படி, டபிள்யு.டி.ஐ குரூட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 59.04 டாலராகவும் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் விலை 63.54 டாலராகவும் வர்த்தகமானது. மீண்டுமொரு அபாயகரமான தாக்குதல் நடக்காத பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை குறையவே செய்யும் என்று நம்புவோம்!

சவுதி அராம்கோ மீது தாக்குதல்.... கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு நீடிக்குமா?

பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

சவுதி அரேபியா எண்ணெய்க் கிணறுமீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த வாரத்தின் முதல் மூன்று நாள்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.85-லிருந்து ரூ.75.26-ஆக இருந்தது; டீசல் விலை ரூ.69.15-லிருந்து ரூ.69.57-ஆக இருந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2 வரை உயரும் என்று சொல்லப்பட்ட நிலையில், இப்போதைக்கு 50 காசு என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இனியும் விலை உயராமல் இருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!

சவுதி அராம்கோ மீது தாக்குதல்.... கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு நீடிக்குமா?

அராம்கோ மீது தாக்குதல் ஏன்?

சவுதி அரேபியாவின் முக்கியமான நிறுவனமான அராம்கோமீது குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமானது, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் அராம்கோ நிறுவனத்துக்குமான பிசினஸ் ஒப்பந்தம். இது இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பல நாடு களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்தியாவுக்குத் தடங்கல்களை ஏற்படுத்த இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.