Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

ங்குச் சந்தையில் தற்போது நிலையான சூழல் இல்லை. இண்டெக்ஸில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் ஏற்ற இறக்கமும் தொடரவே செய்கிறது. தொடக்கத்தில் 10900 என்ற வரம்பைத் தாண்டுவது கடினமாக இருந்தது, வார இறுதியில் அந்த வரம்பைத் தாண்டியது. தற்போது இண்டெக்ஸானது முக்கியத் தடை மண்டலமான 11150-11200 என்ற வரம்பை நோக்கிச் செல்கிறது. இது மேலும் முன்னேறிச் செல்லவேண்டுமானால், இந்த வரம்பைக் கடந்து, இதற்கு மேலே நிலைகொள்ள வேண்டும்.

டாக்டர் சி.கே.நாராயண் 
நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES

அதிகம் பேசப்பட்ட டெக்னிக்கலான வரம்புகளின் அருகேதான் சந்தை உள்ளது. டிரேடர்கள் இதைப் பெரும்பாலும் சாதகமாகப் பயன்படுத்தப் பார்ப்பார்கள். இப்படி அதிகம் பேசப்பட்ட அளவுகளில் ஒன்றுதான், 200 டே மூவிங் ஆவரேஜ். தற்போது இதற்கு அருகேதான் இருக்கிறோம். இந்த வரம்புகளைத் தாண்டி இண்டெக்ஸ் நிலைகொள்வதை டிரேடர்கள் கவனிக்க வேண்டும்.

வங்கித் துறையின் செயல்பாடு ஒரே மாதிரி இல்லாததும் பங்குச் சந்தையின் போராட்டத்துக்கு ஒரு காரணமாகும். சந்தை உயர்வுக்குத் தேவையான சக்தியைத் தனியார் வங்கிகள் தீவிரமாகத் தரவேண்டும். ஆனால், தற்போதைக்கு தனியார் வங்கிகளின் செயல்பாடு கொஞ்சம் மந்தமாகத்தான் உள்ளது. வங்கி மூலதனம் தொடர்பான செய்தி, பொதுத்துறை வங்கிகளுக்குச் சாதகமாக உள்ளது. ஆனால், பொதுத்துறை வங்கிப் பங்குகள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், இன்னும் நல்ல செய்தி கிடைக்கும்போது சில நல்ல நகர்வுகளை எதிர்கொள்ளலாம். அப்படியே எதிர்கொண்டாலும், அவை வங்கிக்கான இண்டெக்ஸில் பெரிய அளவில் பங்களிக்க உதவாது.

நிதிச் சேவையை வழங்கும் நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன. ஆனால், சந்தையை உயர்த்துவதற்கான சாவி, உண்மையில் தனியார் வங்கிகளிடம்தான் உள்ளது. எனவே, அவற்றின் செயல்பாட்டைத் தூண்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது வங்கிப் பங்குகளின் விலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.டி நிறுவனங்களின் பங்குகள் சற்று சிரமத்தில் உள்ளன. டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் போன்ற முன்னணி ஐ.டி நிறுவனங்கள் நிஃப்டியில் முக்கியப் பங்காற்றும் நிலையில் இவற்றின் செயல்பாடும் மந்தமாக உள்ளது. இவற்றின் பங்கு விலை முன்னேற்றமடைவதற்கு ஆர்வம் காட்டாததால், செயல்திறன் மந்தமாகக் காணப்படுகிறது.

எப்படியாயினும், இப்போது வரும் செய்திகள் உற்சாகமளிப்பதாக உள்ளன. ரூபாயின் மதிப்பு அதன் வீழ்ச்சியிலிருந்து சற்று மீண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா இடையிலான பனிப்போர் சற்று தணிந்திருக்கிறது. ஆனாலும், தங்கம் விலை ஏறி இறங்குவதைப் பார்க்கும்போது, சந்தைக்குச் சாதகமற்ற போக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதையே காட்டுகிறது.

பாசிட்டிவ்வான விஷயங்கள் அனைத்தும் சேர்ந்து வரும் வாரத்தில் நல்லதொரு நகர்வைத் தரலாம். மிகப் பெரிய நல்ல செய்தி சந்தைக்குத் தேவைப்படுகிறது என்றாலும், மோசமான செய்திகளால் சந்தை கீழ்நோக்கிச் செல்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நல்ல செய்தியின் காரணமாகச் சந்தை மேலேறு வதற்கான நேரமாகும்.

ஏற்கெனவே கூறியபடி, நிஃப்டிக்கு 11200 என்ற வரம்பு அடுத்த இலக்காக இருக்கும். இந்த இலக்கைத் தாண்டிவிட்டால், மேலும் சில நூறு புள்ளிகளைத் தொடர்ந்து பெறக்கூடும். அது வரை குறிப்பிட்ட சில பங்குகளை வாங்கி, விற்கிற உத்தியை நாம் கடைப்பிடிப்பதே சரி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இன்டர்குளோப் ஏவியேஷன் (INDIGO)

தற்போதைய விலை: ரூ.1,718.85

வாங்கலாம்.

அதிக முதலீட்டாளர்கள் வாங்குவதன்மூலம் புதிய உச்சத்தை அடையும் பங்குகள்  எப்போதும் நமக்கு விருப்பமானவைதான். சந்தை இறக்கத்தில் இருக்கும்போதே இந்தப் பங்குகள் புதிய உச்சத்தை அடைவதால், இரட்டை விளைவினை இந்தப் பங்குகள் உருவாக்குகின்றன. டிரேடர்களும் முதலீட்டாளர்களும் இந்தப் பங்குகளைப் பற்றி பேசத் தொடங்குவதால், இந்தப் பங்குகளின் விலை மேலும் அதிகரிக்கிறது. இண்டிகோ பங்கும் இப்படிப் பேசப்படுவதால், இந்தப் பங்கின் விலை ரூ.1,850-1,900 வரை செல்லக் கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.1,680.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அதுல் லிமிடெட் (ATUL)

தற்போதைய விலை: ரூ.3,736.90

வாங்கலாம்.

ஒரு பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சிறிது இறக்கம் (Pullbacks) வந்தால், அது வாங்குவதற்குச்  சரியான நேரம் ஆகும். இதுமாதிரியான ஒரு வாய்ப்பு அதுல் பங்கில் தற்போது ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருக்கும் கெமிக்கல் நிறுவனங்கள் பிரச்னை களில் இருப்பது, இந்திய கெமிக்கல் நிறுவனங் களுக்குச் சாதகமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கிறது. ஹையர் டாப் மற்றும் பாட்டம் பேட்டர்னில் இந்தப் பங்கு வர்த்தகமாகிறது. ஒவ்வொருமுறை விலை இறங்கும்போது புதிய உச்சத்தைத் தொடுகிறது. எனவே, இப்போது இந்தப் பங்கு புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்க லாம். ரூ.4,000-க்குப் பக்கத்தில் இலக்கு விலை வைத்துக்கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் ரூ.3,836. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

காதிம் இந்தியா லிமிடெட் (KHADIM)

தற்போதைய விலை: ரூ.269.45

வாங்கலாம்.

கடந்த சில வர்த்தக தினங்களாக இந்தப் பங்கின் விலைப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு ஏற ஆரம்பித்துள்ளது. இந்த உயர்வானது சந்தேகத்திற்கு இடமில்லாமல் புதிய உச்சத்தை நோக்கிச் செல்லவிருக்கிறது. இறக்கத்திற்குப் பிறகு பங்கின் விலை ஏற ஆரம்பித்திருப்பதால் வலிமையான ஏற்றமாக இது இருக்கும். இந்த பங்கின் பட்டியலிடப்பட்ட விலை 850 ரூபாயி லிருந்து ரூ.170 வரை இறக்கத்தைக் கண்டது. மறுபடியும் ரூ.250-க்குமேல் ஏறுமுகத்தில் வர்த்தகமாகிறது. இந்தப் பங்கில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம். பங்கு பேட்டர்னில் பாலிங்கர் பாண்டு உருவாகி யிருக்கிறது. வரும் வாரங்களில் இதன் விலை ரூ.320 வரை செல்லலாம். ஸ்டாப்லாஸ் ரூ.250.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.