கடந்த வாரத்தில், ‘தற்போதைய நிலையில், இந்தியப் பங்குச் சந்தையில் மந்தமான போக்குத் தொடர வாய்ப்பிருக்கிறது; இது, சந்தையின் போக்கைத் தனிப்பட்ட பங்குகள் சார்ந்ததாக மாற்றும். மேலும், சந்தையானது குறைவான ஏற்ற இறக்கத்துடன் தொடர முயல்வதைப் பார்க்கலாம்’ என எழுதியிருந்தோம்.

சந்தை ஓரளவு ஏறியதும், அதற்குமேல் செல்ல மிகுந்த சிரமப் படுகிறது. ஏனெனில், இண்டெக்ஸின் ஏற்றத்துக்கு உதவுக்கூடிய முக்கியத் துறைகளான வங்கி மற்றும் ஐ.டி இரண்டும் மிகத் தீவிரமாக இதில் பங்கெடுக்கவில்லை. குறிப்பாக, இன்ஃபோசிஸ் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்த இண்டெக்ஸையும் கீழிறக்கியது. எனவே, இண்டெக்ஸில் பலம்பொருந்திய ரிலையன்ஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சிறந்த காலாண்டு நிதிநிலை முடிவை வெளியிட்டபோதும், இண்டெக்ஸின் போக்கை மாற்ற முடியவில்லை. இதன் விளைவாக, கடந்த வாரத்தில் உற்சாகமான நகர்வு இருந்தபோதும் பங்கு விலையில் பெரிய பிரதிபலிப்பு காணப்படவில்லை.

காலாண்டு நிதிநிலை முடிவுகள் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி கலவையாக இருக்கின்றன. முடிந்த காலாண்டு நிறுவனங்களுக்குக் கடுமையானதாக இருக்குமென எதிர்பார்க்கப் பட்டது. நம்பிக்கையளிக்கக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், சந்தையில் சரிவு ஏற்படவில்லை. இன்னும் ஒரு வாரத்துக்குப் பெரிய நிறுவனங்கள், பெரிய அளவிலான வருமானக் கணக்குகளுடன் வரக்கூடும். அதற்கடுத்து காலாண்டு முடிவுகள் மீதான ஆர்வம் குறையும். எனவே, தற்போதுள்ள நிலையிலிருந்து வேறெந்த முன்னேற்றத்தையும் இதில் எதிர்பார்க்க முடியாது. வெளியாகியிருக்கும் மாநிலத் தேர்தல் முடிவுகளும் ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்ததால், சந்தை சிறிது ஏற்றம் கண்டது. கடந்த வாரத்தில், நீண்ட கேண்டிலின் மையப்புள்ளி, நிஃடியில் 11500-ஆக இருந்தது. அது உடைபடாதவரை நாம் பாதகமாக எதையும் யோசிக்கத் தேவையில்லை. அதேநேரம், 11700 புள்ளிகளுக்கு அருகிலுள்ள மல்ட்டி பிரைஸ் பைவோட் வரம்பைத் தாண்டும் வரை காளையின் போக்கை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இப்போதைக்கு இது 200-250 புள்ளிகளுக்கு இடைப்பட்ட வரம்பாகவே அனைத்து இண்டெக்ஸ்களிலும் காணப்படும்.

பங்குகள் ஒரே மாதிரியான மதிப்பீட்டில் இருந்தாலும் வெளியாகும் செய்திகளால் சில பங்குகளின் விலை ஏற்ற வரம்பைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

நாராயண ஹிருதாலயா (NH)

தற்போதைய விலை: ரூ.254.30

வாங்கலாம்.

ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே தேவை இருந்துகொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் ஹாஸ்பிட்டல் நிறுவனப் பங்குகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் இதயநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் இருக்கின்றன.

இந்தப் பங்கு பட்டியலிடப்பட்ட பிறகு இறங்கியது. பல மாதங்களாக மந்தநிலையில் வர்த்தகமாகி, தற்போது விலை பிரேக்-அவுட் ஆகி ஏற்றத்துக்கான சூழ்நிலை இருக்கிறது. நீண்டகால முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.240. படிப்படியாக விலை ஏறி ரூ.350 வரை உயரலாம்.

சுதர்ஷன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (SUDARSCHEM)

தற்போதைய விலை: ரூ.396.75

வாங்கலாம்.

கெமிக்கல் துறை பங்குகளுக்குத் தொடர்ந்து தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நிறுவனப் பங்கின் விலையில், நீண்டகாலமாக ஏற்ற இறக்கம் இல்லாத நிலை இருந்துகொண்டே இருந்தது. தற்போது அந்த நிலை முடிவுக்கு வந்திருக்கிறது. பங்கின் விலையில் ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இதனால் பங்கின் விலை ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையிலும், விலை இறங்கினாலும் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.365. வரும் மாதங்களில் ரூ.500 வரை போகலாம்.

ஃபைஷர் (PFIZER)

தற்போதைய விலை: ரூ.3,493.15

வாங்கலாம்.

ஏற்கெனவே இந்தப் பகுதியில் பரிந்துரைக்கப்பட்ட பங்கு இது. பரிந்துரைத்த விலையிலிருந்து ஏற்றம் கண்டு லாபம் கொடுத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கம் இல்லாமல் வர்த்தகமானது. தற்போதைய விலை உடைக்கப்பட்டு, மேலே ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதைய நிலையில், வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. விலை இறங்கும்போதும் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.3,300 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் ரூ.3,750 வரை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.