நிஃப்டி இண்டெக்ஸ் 12000 என்ற புள்ளியைக் கடந்த பிறகு, சந்தையின் போக்கில் புத்துணர்வு ஏற்படும் என்று எதிர்பார்த்தோம். தற்போது 12000 புள்ளிகளைக் கடந்த பின்னரும்கூட எதிர்பார்த்த புத்துணர்வு சந்தையில் ஏற்படவில்லை. மாறாக, கடந்த வாரத்தில் சந்தை ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

கடந்த வாரம் முழுக்க காளையின் போக்கு காணப்பட்டபோதிலும், வெவ்வேறு பகுதிகளில் மந்தநிலை காணப்பட்டது. கடந்த வாரத்தில் நிஃப்டி மூன்று வர்த்தக நாள்களுக்கு அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே மாதிரியாகவும், நான்காவது நாளில் ஏற்றத்தோடும் ஐந்தாவது நாளில் இறக்கமுமாகச் செயல்பட்டுள்ளது.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இண்டெக்ஸ்கள் சிறிதளவு சரிவுகண்டாலும், பாதிப்பு ஒரு வரம்புக்குள் இருந்தது. பேங்க் நிஃப்டி சீராகவும், வார இறுதியில் சிறிதளவு லாபமீட்டுவதாகவும் இருந்தது. எனவே, கடந்தவாரப் பங்குச் சந்தைச் செயல்பாடு ஒரு கலவையான தொகுப்பாகவே இருந்தது.

நிஃப்டியின் தினசரி சார்ட்டில் ஈவ்னிங் ஸ்டார் பேட்டர்ன் தெரிகிறது. இது வரவிருக்கும் நாள்களில் சற்று அச்சமூட்டுவதாக இருக்கக்கூடும். வார சார்ட்டில் நட்சத்திர வடிவ ஒருங்கமைப்பு தெரிகிறது. வரும் நாள்களில் சந்தை இறங்குவற்கான வாய்ப்பு இருப்பதால், இதை கவனித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

சந்தையின் ஒட்டுமொத்த மனநிலையும் சாதகமாக இல்லாததால், இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருந்தாலும் அதற்கு முன்னதாக இதன் போக்கு மாறுவதற்கான அறிகுறியும் தென்படுகிறது. ஆனால், உடனடி ஆபத்துகள் இருப்பதாகத் தெரிவதால், விழிப்புடன் இருக்க வேண்டுமென்று பேட்டர்ன் எச்சரிக்கிறது.

ஆதரவு / தடை நிலைகளை எட்டக்கூடிய மதர் கேண்டில் கான்செப்ட் வரம்புக்கு நிஃப்டி இண்டெக்ஸ் புள்ளி உயர்ந்திருக்கிறது. தற்போது 11600 புள்ளிகள் வரம்பில் ஆதரவு கிடைக்கக்கூடும். இப்போது இறக்கம் ஏற்பட்டால் மீண்டெழுவதற்கான புள்ளியாக அது இருக்கக்கூடும். ஒட்டுமொத்த மனநிலையும் காளையின் போக்கில் காணப்படுவதால், இறக்கம் ஏற்படும்போதெல்லாம் பங்குகளை வாங்கலாம்.

காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகும் தற்போதைய காலகட்டத்தில் நிறைய நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெறக்கூடும். அவற்றில் முதலீடும் வர்த்தகமும் செய்யலாம்.

டி.எல்.எஃப் (DLF)

தற்போதைய விலை ரூ.203.10

வாங்கலாம்.

தேங்கிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி அறிவிப்பை அடுத்து ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் ஏற்றம் காணத் தொடங்கியிருக்கின்றன. இதில் முக்கியமான பங்கு டி.எல்.எஃப்.

கடந்த வாரத்தில் இந்தப் பங்கின் விலை கணிசமாக ஏறத் தொடங்கியிருக்கிறது. இது சார்ட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், வரும் நாள்களில் இந்த நிறுவனப் பங்கின் விலை மேலும் ஏற்றம் காணும் எனலாம்.

தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.195. இலக்கு விலை ரூ.230.

யெஸ் பேங்க் (YESBANK)

தற்போதைய விலை: ரூ.68.95

வாங்கலாம்.

தனியார் துறையைச் சேர்ந்த இந்த வங்கி செப்டம்பர் காலாண்டில் மோசமான நிதிநிலை முடிவுகளைக் கொடுத்திருந்தாலும் பங்கு விலையை அது பெரிதாகப் பாதிக்கவில்லை. இந்தப் பங்கின் மீதான சென்டிமென்ட்டில் முதலீட்டாளர்கள் மனநிலை மாறியிருப்பது தெரிகிறது. வங்கியும் அதன் எதிர்கால வளர்ச்சி குறித்து தீவிரமாகத் திட்டமிடத் தொடங்கியிருப்பது பாசிட்டிவ்வான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.65. குறுகியகால இலக்கு விலை ரூ.80-85.

வோல்டாஸ் ( VOLTAS)

தற்போதைய விலை ரூ.693.65

வாங்கலாம்.

வோல்டாஸ் நிறுவனப் பங்கின் வார விலை சார்ட்டில் லாங்க் டேர்ம் பிரேக்அவுட் சிக்னல்களைக் காண முடிகிறது. அந்த சார்ட்டில் காணப்படும் சுத்தியல் பேட்டர்ன் பங்கின் விலை தொடர்ந்து ஏறும் என்பதைக் குறிக்கிறது.

தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.684. வரும் வாரங்களில் பங்கின் விலை ரூ.750-ஐ தாண்டலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.