Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு கடந்த வாரத்தில் ஒரு வரம்புக்குள் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தோம். அதாவது, `நிஃப்டி குறியீட்டின் ஏற்ற இறக்கம், 11600 மற்றும் 12000-க்கு இடையே இருக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி, நிஃப்டி இதற்குள் தொடர்ந்து பயணம் செய்தது. சந்தை சிறிது ஏற்றம் காண்பதும், பிறகு இறங்குவதுமாக கடந்த வாரத்தில் காணப்பட்டது. செய்திகள் சந்தையின் ஏற்றம் மற்றும் இறக்கத்தை நிர்ணயித்தன.

டாக்டர் சி.கே.நாராயண் 
நிர்வாக இயக்குநர், Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

நிஃப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மேலும், இவற்றின் இ.பி.எஸ் மதிப்பிடப் பட்டதைவிடக் குறைவாக இருந்தது. இதற்கு பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் அதிக நிகர இழப்பும் ஒரு காரணம். அதே நேரத்தில், அனலிஸ்ட்கள் தொடர்ந்து நிஃப்டி-யின் இ.பி.எஸ் மதிப்பீட்டைக் குறைத்துவருவதால், நிஃப்டியால் 12000 புள்ளிகளுக்கு மேல் தொடர முடிந்திருக்கிறது.

வங்கிப் பங்குகள் கடந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தனியார் துறை வங்கிப் பங்குகள் விலை நன்கு அதிகரித்திருக்கின்றன. இதனால் பேங்க் நிஃப்டி 31000 புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது. எஸ்ஸார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எஸ்.பி.ஐ பங்கின் விலையை அதிகரித்ததால், பேங்க் நிஃப்டி மேலும் உயர்ந்தது. நிஃப்டியிலும் வங்கிப் பங்குகள் இடம்பெற்றிருப்பதால், நிஃப்டியும் தொடர்ந்து உயர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Buy and sell
Buy and sell

புள்ளிகள் மற்றும் விலைகள் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் கணக்கிடப் பயன்படுத்தும் மதர் கேண்டில் நிலைக்கு உயர்ந்தன. இதன்படி தற்போது ஆதரவுநிலை சுமார் 11600-ஆக உள்ளது. இதிலிருந்து மேலே செல்லக் கூடும். பங்குச் சந்தையில் ஒட்டுமொத்த சென்டிமென்ட் பாசிட்டிவ்-ஆக உள்ளது. அந்த வகையில், சந்தையின் இறக்கத்தை வாங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம், தற்போதைய காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகும் காலத்தில் பல நல்ல நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு ஏற்றவையாக உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு முதலீடு மற்றும் வர்த்தகம் செய்தால் லாபம் ஈட்ட முடியும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பேங்க் நிஃப்டி சார்ட்டில் அருமையான பிரேக்அவுட் காணப்படுகிறது. மேலும், லாபம் ஈட்டுவதற்கான பாதையும் தெளிவாகத் தெரிகிறது. வரும் வாரத்தில் பேங்க் நிஃப்டியில் வர்த்தகம் செய்யலாம். இதனுடன் நிஃப்டியும் சேர்ந்து கொண்டால், சந்தை காளையின் பிடிக்குள் வரும் என எதிர்பார்க்கலாம். இனி இந்த வாரத்தில் வாங்க வாய்ப்புள்ள பங்குகளைப் பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பங்குச் சந்தை
பங்குச் சந்தை

கிரெடிட் அக்சஸ் கிராமீன் (CREDITACC)

தற்போதை விலை ரூ.773.15

வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இதற்கு முன்னர் இந்த நிறுவனப் பங்கு இருமுறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. சிறிது காலம் பங்கின் விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரே நிலையில் காணப்பட்டது. தற்போதைய நிலையில் தொடர்ந்து பங்கின் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பங்கின் அனைத்து விலை இறக்கங்களும் காலத்துடன் தொடர்புடையவை என்றாலும், பங்கின் விலை பெரிதாக இறங்கவில்லை. இதிலிருந்து இந்தப் பங்கிலிருந்து பல முதலீட்டாளர்கள் வெளியேற விரும்பவில்லை என்பதும், கடந்த வாரத்தில் பலரும் புதிதாக இந்தப் பங்குகளை வாங்கத் தொடங்கி இருப்பதும் தெரிகிறது. வார சார்ட்டில் ‘அப்பர் பாலிங்கர் பாண்ட்’ உருவாகியிருப்பது, பங்கின் விலை இன்னும் ஏறும் என்பதைக் குறிக்கிறது. மொமென்டமும் வலிமையாகக் காணப்படுகிறது. இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.725. இலக்கு விலை ரூ.900.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBIN)

தற்போதை விலை ரூ. 321.90

வாங்கலாம்.

எஸ்ஸார் நிறுவன வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எஸ்.பி.ஐ-க்குச் சாதகமாக அமைந்ததால், வெள்ளிக்கிழமை அதன் பங்கின் விலை 5 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்தது. ரூ.320-க்கு அருகில் அருமையான பிரேக்அவுட் பாயின்ட் உருவாகியிருக்கிறது. இது வரும் வாரத்தில் பங்கின் விலை இன்னும் உயரும் என்பதைக் குறிக்கிறது. பங்கின் விலை மீண்டும் ரூ.350-360-க்கு உயரும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.310.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ரைட்ஸ் (RITES)

தற்போதை விலை ரூ. 295.20

வாங்கலாம்.

விலை சார்ட்டில் சப்போர்ட் டிரெண்ட் லைன்கள் வலிமையாக உருவாகியிருக்கிறது. இது இந்தப் பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் காணக்கூடும் என்பதைக் குறிப்பதாக உள்ளது. ஆரம்ப ஏற்றத்துக்குப் பிறகு சிறிது காலம் ஏற்ற இறக்கம் இல்லாமல் மந்தநிலையில் இருந்தது. தற்போது பங்கின் விலை ஏற்றம்காண ஆரம்பித்திருக்கிறது. மொமென்டமும் வலிமையாகக் காணப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.285. இலக்கு விலை ரூ.330.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.