கடந்த வாரத்தில் நாம் குறிப்பிட்டிருந்த இந்தியப் பங்குச் சந்தைக் கொண்டாட்டங்கள் முன்கூட்டியே வந்துவிட்டன. அனைத்து இண்டெக்ஸ்களும் வரலாற்று உச்சங்களைத் தொட்டுவிட்டதால், சந்தை அதற்குமேல் நகர முடியாமல் ஸ்தம்பித்தது.

கடந்த வாரத்தில் சந்தை தொடங்கியபோது, நம்பிக்கை அதிகமிருந்தது. ஆனால், சந்தையின் உச்சத்தில் நீண்டகால முதலீட்டுக்குப் பங்குகளை வாங்கப் பலரும் விரும்பவில்லை. எனவே, ஒரு மோசமான வாரத்தைக் கடக்க வேண்டியதாயிற்று. குறிப்பாக, இண்டெக்ஸில் மாற்றம் ஏதுமில்லை. பெரிய இறக்கம் அல்லது பெரிய விற்பனை நடந்ததாகத் தெரியவில்லை.

இனிவரும் நாள்களில் பங்குகளின் விலை தொடர்ந்து ஏற வேண்டுமென்றால், பங்குகளை வாங்குவது தொடர வேண்டும். ஆனால், அது நடக்காததால் பங்குகளின் விலையில் சிறிய இறக்கம் ஏற்பட்டிருக்கிறது.

கரடியின் போக்குக்குச் சந்தை மாறியிருப்பதால், கருமேகம் சூழ்ந்தது போன்ற வாராந்தர கேண்டில் பேட்டர்ன் உருவாகி உள்ளது. கடந்த வாரத்தின் நிஃப்டி ஆப்ஷன்ஸ் வர்த்தகம் 11900 புள்ளி வரம்பை நல்லதொரு ஆதரவு மண்டலமாக உருவாக்கி அங்கேயே நிலைத்திருக்கிறது. இது மேலும் இறங்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி.

வாராந்தரக் கணக்கில் சந்தையின் போக்கைப் பார்க்கும்போது, குறுகியகால வர்த்தகத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒருவேளை பங்குகள் இறக்கத்திலிருந்து மீளுமானால், வரும் வாரத்தில் கரடியின் போக்கைத் தொடர்ந்து காண முடியாது. அதுவரை வேறெந்த மோசமான செய்தியும் வராமலலிருக்க வேண்டும்.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலை சற்றுக் கூடுதலாக இறக்கம் கண்டிருப்பதால், கடந்த வார இறுதியில் அவற்றின் இண்டெக்ஸில் கரடியின் பேட்டர்ன் தெரிகிறது. இதன் காரணமாக சிறு முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் ஆர்வத்துடன் ஈடுபடக்கூடும். மிட்கேப் பங்குகளின் மீதான மதிப்பு ஒருமித்து இருப்பதால், சில துணிச்சலான முதலீடுகள் வார இறுதியில் இல்லாமல் போகக்கூடும். இதன் காரணமாக சந்தை, எந்தப் பக்கமும் நகர்வதற்கான வாய்ப்பு வரும் வாரத்தில் உள்ளது.

சந்தையின் போக்கை மாற்றும் எந்தத் திட்டமிட்ட செய்திகளும் இல்லை. எனவே, தனிப்பட்ட பங்குகள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். வரும் வாரத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீஸ் (LTTS)

தற்போதைய விலை: ரூ.1,510.60.

வாங்கலாம்.

ஒட்டுமொத்தச் சந்தை இறக்கத்தில் இருக்கும்போது, பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஐ.டி பங்குகளில் முதலீடு செய்வார்கள். இந்த நிறுவனத்தின் பங்கு சிறந்த பங்காகச் செயல்பட்டு வந்தாலும், கடந்த ஒரு வருடமாக அதிக ஏற்ற இறக்கம் இல்லாமலிருந்தது.

தற்போது அந்த நிலை மாறி இப்போது இந்தப் பங்கின் விலை நல்ல ஏற்ற டிரெண்டில் இருக்கிறது. இந்தப் பங்குக்கு ரூ.1,450 என்ற விலையில் நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது.

தற்போதைய விலையில் வாங்கலாம். பங்கின் விலை குறுகியகாலத்தில் 1,700 ரூபாய் வரை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் 1,470 ரூபாய் வைத்துக்கொள்ளவும்.

இ.ஆர்.ஐ.எஸ் லைஃப் சயின்சஸ் (ERISLIFE)

தற்போதைய விலை: ரூ.476.35.

வாங்கலாம்.

பார்மா துறையைச் சேர்ந்த பங்கு இது. நீண்டகாலமாக இறக்கத்திலேயே இருந்தது. தற்போதைய நிலையில் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

அண்மையில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இந்த நிறுவனப் பங்குகளை மொத்தமாக வாங்கியிருக்கின்றன. இதனால் பங்கின் இறக்கப்போக்கு மாறி, ஏற்றத்தில் இருக்கிறது. இன்னும் பங்கின் விலை மேலே ஏறும் என்பதற்கான அறிகுறி காணப்படுகிறது.

பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்தால், குறுகியகாலத்தில் 530 ரூபாய்க்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் 460 ரூபாய் வைத்துக்கொள்ளவும்.

ஜி.ஆர்.எஸ்.இ (GRSE)

தற்போதைய விலை: ரூ.209.45.

வாங்கலாம்.

இந்தப் பகுதியில் இதற்கு முன்னர் இந்தப் பங்கைப் பரிந்துரை செய்திருக்கிறோம்.

ஒரு மாதத்துக்கு முன்னர் 250 ரூபாய் வரை விலை போனது. மீண்டும் அந்த விலையிலிருந்து இறங்கி, மேலே ஏற ஆரம்பித்திருக்கிறது.

நிறைய முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இறங்கியதிலிருந்து 23.6% மேலே ஏறியிருக்கிறது. தொடர்ந்து மேலே ஏறும் சூழ்நிலை இருக்கிறது.

ஸ்டாப்லாஸ் 195 ரூபாய் வைத்துக் கொள்ளவும். குறுகியகாலத்தில் 250 ரூபாய்க்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.