Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

டந்த வாரம், இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாட்டில் கவலைக்குரிய விஷயமாக நாம் சொன்னவற்றையும் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைச் சந்தை எட்டியுள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சென்செக்ஸ், நிஃப்டி, பேங்க் நிஃப்டி மூன்று இண்டெக்ஸ்களுமே புதிய வரலாற்று உச்சத்தை எட்டின. மேலும், வாரம் முழுவதும் அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டன. எனினும், சிறு முதலீட்டாளர்களின் சந்தேக மனநிலை தொடர்கிற காரணத்தால், ஏற்கெனவே சொன்ன ‘கவலையெனும் சுவரின் மேல் ஏறியிருக்கிறது பங்குச் சந்தை’ என்பதை நினைவுபடுத்துகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனப் பங்குகள் நல்ல முறையில் வருமானம் கொடுத்துவருவதாகப் பல பெரு முதலீட்டாளர்கள் தொடர்ந்து கூறுவதை யாரும் கேட்பதாக இல்லை. சிறு முதலீட்டாளர்கள் இன்னமும் சந்தேகத்துடனேயே இருப்பதால், அவர்கள் தங்களின் பங்கு முதலீட்டுக் கலவையை (போர்ட்ஃபோலியோ) மேம்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்தவில்லை.

பங்குகள்
பங்குகள்

தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) நிறுவனப் பங்குகள் கடந்த வாரத்தில் நன்கு செயல்பட்டன. இவை நிஃப்டியில் பெரும்பங்கு வகிப்பதால், இந்த ஏற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் மெட்டல்ஸ் நிறுவனப் பங்குகள் விலை நல்ல ஏற்றத்தில் இருந்தது. இதில் முதலீடு செய்திருந்த வர்த்தகர்களின் மனநிலை மகிழ்ச்சிகரமாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரும் வாரத்திலும் சில சாதகமான செயல்பாட்டை இந்தியப் பங்குச் சந்தையில் எதிர்பார்க்கலாம்.
பங்குகள்
பங்குகள்

வங்கித்துறைப் பங்குகளும் மந்தநிலையிலிருந்து விடுபட்டு, ஓரளவு நல்ல செயல்பாட்டைக் காட்டியதால், நிஃப்டி அதிகபட்ச உயரத்தை எட்டியிருக்கிறது. கடந்த வாரத்தில் எல்லாமே நல்லவிதமாக நடந்துள்ளதால், வரும் வாரத்திலும் சில சாதகமான செயல்பாட்டை இந்தியப் பங்குச் சந்தையில் எதிர்பார்க்கலாம்.

பாரம்பர்யமாக நடப்பதுபோல் டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களது பங்களிப்பைக் குறைத்துக் கொள்வார்கள். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை அனுபவிக்கும் மனநிலை சந்தையில் பரவத் தொடங்கியிருக்கிறது.

பங்குகள்
பங்குகள்

எனவே, தற்போதுள்ள ஏற்றப்போக்கு தொடரும் என்றோ, அப்படியே ஒருங்கிணைப்பாக இதே வரம்பில் நீடிக்குமென்றோ எதிர்பார்க்கலாம்.

வரும் வாரத்தில், இறக்கங்களின்போது நல்ல நிறுவனப் பங்குகளைச் சிறுமுதலீட்டாளர்கள் துணிந்து வாங்கலாம். வர்த்தகச் செயல்பாடு வேகமெடுக்கக்கூடும். மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து போதுமான முதலீட்டை எதிர்பார்க்கலாம். அது சந்தையை ஏற்றத்தின் போக்கில் கொண்டுசெல்ல வாய்ப்பிருக்கிறது என்பது பாசிட்டிவ்வான விஷயம்.

ஃபைன் ஆர்கானிக்ஸ் (FINEORG)

தற்போதைய விலை: ரூ.1,939.10.

வாங்கலாம்.

ஃபைன் ஆர்கானிக்ஸ் நிறுவனப் பங்கின் விலையானது, இறக்கத்திலிருந்து ஏற்றத்துக்கு வந்திருக்கிறது. அந்த வகையில், இதில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணம்.

பங்கின் விலை வரைபடத்தில் ஆர்.எஸ்.ஐ குறியீடு, பங்கின் விலை ஏறும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். புதிய இலக்கு விலை ரூ.2,100. ஸ்டாப்லாஸ் ரூ.1,875 வைத்துக்கொள்ளவும்.

வருண் பெவரேஜஸ் (VBL)

தற்போதைய விலை: ரூ.700.25.

வாங்கலாம்.

மேலே சொல்லப்பட்டிருக்கும் ஃபைன் ஆர்கானிக் பங்கின் விலை பேட்டர்னைப் போலத்தான் இந்தப் பங்கின் விலை பேட்டர்னும் இருக்கிறது. நீண்ட நாள்களாகப் பங்கின் விலையானது இறக்கத்திலேயே இருந்துவந்தது. தற்போது இறக்கம் தடுக்கப் பட்டிருக்கிறது.

இதன் மூவிங் ஆவரேஜும், மொமென்டம் சிக்னலும் பங்கின் விலை மேலே ஏறும் என்பதைக் குறிப்பிடுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலை ரூ.845. ஸ்டாப்லாஸ் 685 என வைத்துக்கொள்ளவும்.

டிரென்ட் (TRENT)

தற்போதைய விலை: ரூ.527.15.

வாங்கலாம்.

இதற்கு முன்பாக, இதே பகுதியில் இந்தப் பங்கைச் சில முறை பரிந்துரை செய்திருக்கிறோம்.

தற்போதைய நிலையில், இந்தப் பங்கின் விலை நல்ல ஆதரவு நிலையில் இருக்கிறது. விலை வரைபடத்தில் இறக்கத்திலிருந்து ஏற்றத்துக்கான வாய்ப்பை ஆர்.எஸ்.ஐ குறியீடு சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். 625 ரூபாய் வரை போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஸ்டாப்லாஸ் 500 ரூபாய் வைத்துக்கொள்ளவும். நடுத்தரகால முதலீட்டாளர்கள் மட்டும் இந்தப் பங்கை வாங்கவும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism