Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ந்தை நன்றாகச் செயல்படும் என முந்தைய வாரத்தில் கூறியிருந்ததற்கு மாறாக நடந்திருக்கிறது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு முக்கிய இண்டெக்ஸ்களிலும் காளையின் போக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கடந்த வாரத்தில் கூறியிருந்தோம். ஆனால், உலக அரசியல் திடீரெனத் தலைதூக்கியதால், சந்தைகளில் பங்கு விற்பனை அதிகமாக இருந்தது. ஈரானில் ஏற்பட்ட சம்பவத்தால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு, பங்குச் சந்தையையும் பாதித்தது. அந்தச் சம்பவம் ஒரு போராக உருவெடுக்கும் என்ற பயம் (`மூன்றாம் உலகப்போர் மூளப்போகிறது’ என்றெல்லாம் சிலர் பேசி பயத்தை மேலும் அதிகமாக்கினார்கள்) எழுந்து, சந்தையின் சென்டிமென்டை பாதித்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது மேலும் பயத்தை அதிகரிப்பதாக இருந்தது. ஆனால், ஆச்சர்யமூட்டும்விதமாக அடுத்த நாளே சந்தை, தன்னைத் தானே சரிசெய்துகொண்டது. வாரத்தின் நடுவே மீண்டும் ஒரு முறை இறங்கியது. அறிவுபூர்வமானச் சிந்தனை மேலோங்கியதால், ஓர் இடைவெளிக்குப் பிறகு விலை மீண்டும் ஏறத் தொடங்கியது. இறுதியாக, கீழ்மட்ட நிழல் கேண்டில் வடிவமைப்புடன் வாரம் சிறப்பாக நிறைவடைந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இவை அனைத்தும் சேர்ந்து மிகப்பெரிய ஏற்ற இறக்கத்தை உருவாக்கின. அவை, நீண்டகால மற்றும் குறுகியகால முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரின் நிலையையும் பாதித்தன. சந்தை எதை நோக்கிச் செல்கிறது என்பதை கணிக்க முடியாததால், முதலீடுகளிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

தற்போது நான்காவது வாரமாக 12360 என்ற புள்ளிகளுக்கு அருகிலேயே சந்தை நிலைகொண்டு இருக்கிறது!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், ஓப்பன் இன்ட்ரஸ்ட் 12000 புட் ஆப்ஷனில் அதிகமாக இருந்தது இந்த ஏற்ற இறக்கப் போக்கால் சிதறடிக்கப்படவில்லை. அதில் பெரும்பாலும் குறுகியகால முதலீடு எனக்கொண்டால், காளையின் போக்கிலும், ஏற்ற இறக்கமான போக்கிலும் இது குறிப்பிடத்தக்க மன உறுதி. இத்தகைய மன உறுதிக்கு, வலுவான ஏற்றப் போக்கைச் சந்தை பரிசாக அளித்தது. தற்போது நான்காவது வாரமாக 12360 என்ற புள்ளிகளுக்கு அருகிலேயே சந்தை நிலைகொண்டிருக்கிறது. எனினும், வரக்கூடிய வாரத்தில் பிரேக்அவுட் ஆவதற்கு முக்கியமான வரம்பாக இது இருக்கிறது. 12200 என்ற புள்ளிகளிலிருந்து இப்போது வரை நன்கு பாதுகாக்கப்பட்டிருப்பதால், அடுத்த வாரத்திலும் இப்படியே தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Buy and sell
Buy and sell

தேஜாஸ் நெட்வொர்க் (TEJAS NET)

தற்போதைய விலை: ரூ.92.80.

வாங்கலாம்.

தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகவும் முக்கியமான நிறுவனம் இது. தற்போதைய நிலையில், இந்த நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் இந்தப் பங்கின் விலை குறைந்து காணப்பட்டது, அந்த நிலை மாறி இப்போது ஏற்றத்துக்குத் திரும்பியிருக்கிறது. பங்கின் விலை 75-80 ரூபாயில் இருக்கும்போது, பல்வேறு விலை பேட்டர்ன்களைக் காட்டியது, இது, ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் மீண்டும் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இப்போது பங்கின் விலை இறக்கத்திலிருந்து ஏறி, ஹையர் பாட்டம் உருவாகியிருக்கிறது. அதனால் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை ஆர்வமாக வாங்கிவருகிறார்கள். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 87 ரூபாய் வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் 120 ரூபாய் வரை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எலன்டாஸ் பெக் இந்தியா (ELANTAS)

தற்போதைய விலை: ரூ.2,470.

வாங்கலாம்.

கடந்த காலத்தில் புளூசிப் நிறுவனமாக இருந்த இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்குப் பிடித்தமான பங்காக மாறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், இந்தப் பங்கின் ஏற்றப்போக்கு பழைய உச்சத்தை அடைவதற்கு மீண்டும் முயற்சியெடுத்து வருகிறது. இதன் தினசரி மற்றும் வார விலை வரைபடங்களும் இதையே காட்டுகின்றன. இந்தப் பங்கு தற்போதைய விலையை உடைத்துக்கொண்டு மேலே ஏறினால், பங்கின் விலை தொடர்ந்து ஏறலாம். ஸ்டாப்லாஸ் 2,400 ரூபாய் வைத்துக்கொள்ளவும். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். இலக்கு விலை ரூ.2,600.

ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (AUBANK)

தற்போதைய விலை: ரூ.824.65.

வாங்கலாம்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் முதல் வங்கி இது. தற்போதைய நிலையில், சந்தையில் இந்தப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த வங்கிப் பங்குக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பிறகு இதன் பங்கு விலை நிலையாக அதிகரித்துவந்தது. ரூ.730 வரை ஏற்றம் அடைந்துவிட்டு, குறுகியகாலம் மந்தநிலையில் வர்த்தகமானது. அண்மையில் அந்த மந்தநிலை உடைக்கப்பட்டு, ஏற்றநிலைக்கு வந்திருக்கிறது. விலை இன்னும் ஏறலாம். ஸ்டாப்லாஸ் ரூ.810. தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகியகாலத்தில் ரூ.980 வரை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.