பிரீமியம் ஸ்டோரி

ந்தியப் பங்குச் சந்தையில், கடந்த வாரத்தில் நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி குறியீடுகள் இரண்டுமே தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாள்களில் இறக்கத்தைச் சந்தித்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த சில வாரங்களாக நல்ல ஏற்றப் போக்கிலிருந்த ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் இண்டெக்ஸ்களும்கூட சற்று இறங்கியிருப்பது பீதியை ஏற்படுத்துகிறது. இதில் கவலைப்படக்கூடிய இன்னொரு விஷயம், முன்னணி நிறுவனப் பங்குகளும் இறக்கத்தைச் சந்தித்திருக்கின்றன என்பதுதான். கடந்த காலங்களில், இந்தப் பங்குகளில் சிறிய அளவிலான லாபம் மட்டுமே கிடைத்ததால், இந்த இறக்கம் அப்போதே தொடங்கியதாகத்தான் இருக்க வேண்டும். கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மூன்று வர்த்தக நாள்களின் இறக்கத்தால், இண்டெக்ஸ் கீழிறங்கி மெயின் ட்ரெண்ட் லைனின் ஆதரவு வரம்பில் அல்லது சராசரி வரம்பில் நகர்கிறது. அங்கே அதிக அளவிலான விற்பனை நடைபெற்றதை மொமென்டம் இண்டிகேட்டர் காட்டுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பெரிய வங்கிகளின் காலாண்டு முடிவுகள் சந்தையை ஊக்கப்படுத்துவதாக இல்லாததால், சந்தையில் ஏற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது. அடுத்துவரும் நாள்களில் சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நல்லபடியாக வந்தால், சந்தை சற்று மேம்படக்கூடும். அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துவருவதால், முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தால், சில ஏமாற்றங்களும் வரலாம். எனவே, பட்ஜெட் வெளியாகும்வரை சந்தையில் இத்தகைய போக்கு தொடரும். சில நிறுவனப் பங்குகளை காலாண்டு முடிவுகள் நல்ல நிலையில் வைத்திருக்கும். அதேவேளையில் சரியான நிதிநிலை முடிவுகளை வெளிப்படுத்தாத பங்குகளைத் தண்டிக்கவும் சந்தை தயாராகவே இருக்கும். எனவே தற்போது மொமென்டம் பங்குகளில் முதலீடு செய்வதும், விரைவாக வர்த்தகத்தை மேற்கொள்வதும் நல்லது.

தற்போது மொமென்டம் பங்குகளில் முதலீடு செய்வதும், விரைவாக வர்த்தகத்தை மேற்கொள்வதும் நல்லது.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை

ஹைடெல்பெர்க் சிமென்ட் (HEIDELBERG)

தற்போதைய விலை: ரூ.202.30

வாங்கலாம்.

கடந்த வாரத்தில் சிமென்ட் நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. அவற்றில் இந்த நிறுவனப் பங்கும் ஒன்று. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை பேட்டர்ன் பிரேக் அவுட் ஆகியிருக்கிறது. பங்கின் விலையில் புதிய மொமென்டம் காணப்படுகிறது. ஆர்.எஸ்.ஐ வரைபடமும் இதையே குறிக்கிறது. விலை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கின் விலை குறுகிய காலத்தில் 230 ரூபாயை நோக்கிப் போகும். தற்போதைய நிலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.190 என வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ரெய்ன் இண்டஸ்ட்ரீஸ் (RAIN)

தற்போதைய விலை: ரூ.122.50

வாங்கலாம்.

கடந்த 2017-ம் ஆண்டில் வேகமாக விலை ஏறிய பங்குகளில் ஒன்றாக இது இருந்தது. அதன்பிறகு இந்தப் பங்கின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்தது. தற்போது விலை ஏற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது பங்கின் விலை வரைபடத்திலும் தெரிகிறது. இந்தப் பங்கில் முதலீடு செய்திருப்பவர்கள் நீண்ட கால நோக்கில் செய்திருக்கிறார்கள். இந்தப் பங்கின் விலை குறுகிய காலத்திலும் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.145-150 வரை ஏறும் என எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.110.

வெஸ்ட்லைஃப் டெவலப்மென்ட் (WESTLIFE)

தற்போதைய விலை: ரூ.441.10

வாங்கலாம்.

மெக்டொனால்டு நிறுவனத்தின் ஃப்ரான்சைஸி நிறுவனமாக இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்துவருகிறது. கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை கவர்ச்சிகரமாக உள்ளது. இதனால் இந்த பங்கில் முதலீடு செய்ய புதிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கூடவே பங்கின் வால்யூமும் அதிகரித்திருக்கிறது. பர்கர் கிங் ஐ.பி.ஓ வெளிவருவது இந்த நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு ஆதரவாக இருக்கிறது. தொடர்ந்து விலை ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் 500 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.395.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு