பொருளாதார ஆய்வுக் குறிப்புகளைப் பார்த்தபோது, மத்திய பட்ஜெட்டில் பாசிட்டிவ் அம்சங்கள் அதிகமாக இருக்கும்; அதனால், இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது.

நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்காதது, டிவிடெண்ட் விநியோக வரியை முதலீட்டாளர்கள் செலுத்தும்படி மாற்றியமைத்தது போன்ற காரணங்களால் பங்குச் சந்தை பட்ஜெட்டுக்கு எதிராகச் செயல்பட்டு, விலை இறங்க ஆரம்பித்தது.

சந்தையின் அடுத்த ஏற்றம் என்பது செய்தித் தூண்டுதல்களின் பின்னால் இருக்கிறது. இந்த மாதம் நாம் எதிர்பார்க்கும் மற்றொரு விஷயம், பிப்ரவரி 6-ம் தேதி நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம். இதன் முடிவுகள், சந்தையின் நெகட்டிவ் சென்டிமென்ட்டை மாற்றக்கூடும். சார்ட்டுகளைப் பார்க்கும்போது பங்கு விற்பனை தொடர்ந்து நிலைத்திருப்பதாகவும், கடந்த சில நாள்களாகக் காணப்பட்ட சரிவு பாதுகாப்பற்றதாகவும் இருப்பதைக் காண முடிகிறது.

சந்தையின் போக்கு கரடுமுரடாக நீடிக்கக்கூடும். என்றாலும், நிஃப்டி உடனடி ஆதரவு 11540-ல் உள்ளது. இது சந்தை மீண்டுவர வழிவகுக்கும். இந்தியப் பங்குச் சந்தைகள் மீண்டும் குழப்பமடைந்துள்ளன.

ஆனால், இந்தச் சூழ்நிலையில் நிஃப்டி 11540 என்ற அளவுக்குக் கீழே இறங்கினால் மட்டுமே மேற்கொண்டு இறங்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த வாரம் தனிப்பட்ட பங்குகளின் செயல்பாட்டைப் பொறுத்து சந்தையின் நகர்வு இருக்கும்.

சந்தையின் போக்கு கரடுமுரடாக நீடிக்கக்கூடும். என்றாலும், நிஃப்டி உடனடி ஆதரவு 11540-ல் உள்ளது.

கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் (KNRCON)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.290.40

இந்தப் பங்கு சில நாள்களுக்கு முன்னர் ஒரு நல்ல ஏற்றம் கண்டது. இதனால் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தவர்களில் பலர் பிராஃபிட் புக் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

சனிக்கிழமை அன்று அதிகம் பேர் விற்க ஆரம்பித்ததால், பங்கின் விலை இறக்கம் காணத் தொடங்கியது. அதாவது, ஆதரவு நிலையான ரூ. 280-275-க்கு இறங்கியது. மேலும், வால்யூம் அதிகரித்திருப்பதால், இந்த நிலையில் புதியவர்கள் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள் எனத் தெரியவருகிறது. தற்போதைய இறக்க நிலை இந்தப் பங்கை வாங்குவதற்கான சரியான சந்தர்ப்பமாக இருக்கிறது.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.280-க்குக்கீழே வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை ரூ.335-க்கு உயரக்கூடும்.

டி.சி.ஐ எக்ஸ்பிரஸ் (TCIEXP)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.873.30

அண்மைக் காலத்தில் தேர்தெடுக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. அவற்றில் அதிகமாக ஏற்றம் கண்டது இந்தப் பங்குதான். பங்கின் விலைப்போக்கு ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.825 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.965.

ராலிஸ் இந்தியா (RALLIS)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ. 233.10

ரசாயனத்துறையை சேர்ந்த நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இந்த நிறுவனப் பங்கும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது. பங்கின் விலை சில நிலையான உயர்வைக் கண்டுவருவதால், மேலும் விலை அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.

பங்கின் விலை சார்ட்டில் அருமையான ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருப்பதைக் காண முடிகிறது. இது, பங்கின் விலையில் ஒரு மொமென்டத்தை ஏற்படுத்த உதவக்கூடும். ரெசிஸ்டென்ட்ஸ் நிலையை பிரேக்அவுட் செய்திருக்கிறது. இதனால் பங்கின் விலை வரும் நாள்களில் மேலும் ஏறக்கூடும்.

தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.217 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.285.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.