பிரீமியம் ஸ்டோரி

டந்த இதழில், ‘வரும் வாரத்தில் நிஃப்டி 11300 மற்றும் பேங்க் நிஃப்டி 28500 நிலைகளில் நல்லதொரு உந்துதல் உருவாகி, சந்தை மேலெழக்கூடும்’ என்று குறிப்பிட்டிருந்தோம். தாழ்நிலையில் 10800-10900 வரம்புக்கு அருகே இண்டெக்ஸ் இதற்குமேலும் சரிவதிலிருந்து தடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

டாக்டர் சி.கே.நாராயண் 
நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES

எதிர்பார்த்ததுபோலவே, வாரத்தொடக்கத்தில் இண்டெக்ஸ் அந்தத் தடைநிலையிலிருந்து சரிவைச் சந்தித்து, குறிப்பிட்டிருந்த ஆதரவு மண்டலத்துக்குள் வந்தது. வார இறுதிவரை அப்படியே இருந்துவிடாமல் சில நகர்வுகள் இருந்தது. இதனால் பங்குச் சந்தையின் சென்டிமென்ட்டுகள் பாதிப்புக்குள்ளாகி, பங்கு விலைகள் மேலும் குறைந்தன. ஆர்.பி.ஐ, ரெப்போ விகிதத்தை 0.35% குறைத்த பின்னும்கூட சந்தையானது சரிவிலிருந்து மீளவில்லை. மத்திய அரசாங்கம், நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்க உள்ளதாகத் தகவல் பரவியதன் காரணமாக வார இறுதியில் நிஃப்டி இண்டெக்ஸ் 11000 புள்ளிக்குமேல் உயர்ந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போது சந்தையில் நம்பிக்கையான உணர்வைத் தூண்டுவதற்கு மத்திய அரசுக்கும் முக்கியப் பங்குள்ளது. பட்டியலிடப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயில் முன்னேற்றமில்லை (சொல்லப்போனால், இந்தக் காலாண்டில் மேலும் சரிவைச் சந்தித்துள்ளது); வட்டி விகிதக் குறைப்பு உதவவில்லை (எனினும் அது தேவையானது); கச்சா எண்ணெய் விலைக் குறைப்பும் உதவவில்லை (எனினும் அதுவும் தேவையானது). ஏற்கெனவே திட்டமிட்டபடி, இந்த வார இறுதியில் சில செய்திகள் வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம்.

வரும் வாரத்தில் இரண்டு விடுமுறை நாள்கள் வருகின்றன. எனவே, சந்தையின் செயல்பாடு சற்று நிதானமாகவே இருக்கும். எனினும், மத்திய அரசின் தரப்பிலிருந்து நல்ல அறிவிப்பு வராதவரை சந்தையின் மேல்நோக்கிய நகர்வு கடினமாகவே இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மாதாந்தர ஆதரவு ட்ரெண்ட் லைனால் உருவாகியுள்ள ஆதரவு நிலையைவிட இறக்கத்தில் இண்டெக்ஸ் உள்ளது. மேலும், 100 வார சராசரி நிலையைவிடக் கீழே உள்ளது. தினசரி சார்ட்டில் டைவர்ஜன்ஸ் பேட்டர்ன் உருவாகியுள்ளது. சந்தையின் நகர்வில் சிறிய அளவிலான மேம்பாடு தெரிகிறது. இதனால் பொதுத்துறை வங்கிகள், உலோகங்கள் தவிர்த்த பெரும்பாலான துறை சார்ந்த இண்டெக்ஸ்களிலும் நல்ல பேட்டர்ன் காணப்பட்டது. எனவே, சந்தை மேலும் சரிவதை விட தற்போதுள்ள நிலையிலிருந்து மேல்நோக்கி நகர்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அயான் எக்ஸ்சேஞ்ச் (IONEXCHANG)

தற்போதய விலை: ரூ.644.55

வாங்கலாம்.

பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தாலும், வாங்கக்கூடிய சில நல்ல பங்குகளும் இருக்கின்றன. அதில் தண்ணீர் சுத்திகரிப்புத் தொழிலில் இருக்கும் இந்த நிறுவனத்தின் பங்கும் ஒன்றாகும். இந்தப் பங்கின் விலையானது ரூ.780 என்கிற அதிகபட்ச விலையிலிருந்து தற்போதைய விலைக்கு இறங்கியிருக்கிறது. இருப்பினும் இறக்கம் தடுக்கப்பட்டு மேலே ஏற ஆரம்பித்திருக் கிறது. பங்கு விலை வரைபடத்தில் ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. அதேபோல, வார வரைபடத்தில் லோயர் கேண்டில் உருவாகி யிருக்கிறது. பங்குகளின் வால்யூம் அதிகரித்துக் காணப்படுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.625. இலக்கு விலை ரூ.750.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரபிந்தோ பார்மா (AUROPHARMA)

தற்போதைய விலை: ரூ.598.40

வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எதிர்பார்ப்புகளைத் தாண்டி நல்ல காலாண்டு நிதிநிலை முடிவுகள் வந்திருப்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை அதிகமாக வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். பல வாரமாக இந்தப் பங்கு விலை இறக்கத்தில் இருந்தது. காலாண்டு முடிவுக்குப்பிறகு முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்கின் மீது ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால் இந்தப் பங்கின் விலை மீண்டும் உச்சத்துக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக, பார்மா துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் இருந்தன. தற்போது பெரும்பாலான பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன. தற்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலை ரூ.730. ஸ்டாப்லாஸ் ரூ.590.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சீமென்ஸ் (SIEMENS)

தற்போதைய விலை: ரூ.1,166.70

வாங்கலாம்.

இந்தப் பங்கின் வார விலை வரைபடம் அருமையான நிலையில் இருக்கிறது. அதில் ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. கடந்த சில வாரங் களாக சந்தை இறக்கத்தில் இருப்பதால், இந்த பங்கின் விலையும் இறக்கத்தில் இருக்கிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தப் பங்கிற்குப் புதிய தேவைப்பாடு உருவாகியிருக்கிறது. இதனுடைய வால்யூம் அதிகமாக இருப்பது, இந்தப் பங்குகளை அதிக அளவில் முதலீட்டாளர்கள் வாங்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் பங்கின் விலை ஏற்றத்தைத்தான் காட்டுகிறது. தற்போதைய விலையில் அல்லது விலை இறக்கத்திலும் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.1,125-க்குக்கீழே வைத்துக் கொள்ளவும். பங்கின் விலை ரூ.1,250-ஐ தாண்டக்கூடும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு