Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
முந்தைய வாரத்தில் இண்டெக்ஸ்கள் புதிய ஏற்ற இறக்கங்களுடன் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் அனைவரும் பயந்துபோனார்கள். இதனால் சந்தையை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சினார்கள்
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அதிர்ஷ்டவசமாக மோசமான செயல்பாடுகள் அனைத்தும் திங்கள்கிழமையோடு முடிவுக்கு வந்தன. அதன் பிறகு வந்த வர்த்தக வாரத்தை, தன்னை மீட்டெடுத்துக் கட்டியமைப்பதற்காகச் சந்தை பயன்படுத்திக்கொண்டது. வார முடிவில், நிஃப்டி 1500 புள்ளிகள் முன்னேறியிருப்பதைப் பார்க்கும்போது, ஒப்பீட்டளவில் இறக்கத்திலிருந்து தன்னை நல்லபடியாகச் சந்தை விடுவித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

buy and sell
buy and sell

பேங்க் நிஃப்டி, நிஃப்டியின் போக்கில் போக முடியாமல் தொடர்ந்து சற்று மந்தமாகச் செயல்பட்டது. வாரக் கடைசியில் மட்டுமே ஏற்றத்தின் போக்கில் இருந்தது. ஒருவேளை, வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட ஆர்.பி.ஐ-யின் வட்டி விகிதக் குறைப்பு செய்தி முன்கூட்டியே கசிந்திருக்குமோ என்னவோ... எது எப்படியிருந்தாலும், அந்த இண்டெக்ஸ், பிப்ரவரி 6-ம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக, வாரத்தின் மூன்றாவது நாளில் ஏற்றத்தைக் காட்டியது. அதுவே அதன் நீண்ட நகர்வில் சிறிய ஆறுதலாக இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையிலிருந்து சந்தை எங்கு செல்லும் என்பதே தற்போதைய கேள்வி. துரதிர்ஷ்டவசமாக, தொடர்ச்சியாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் வரும் நாள்களில் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. சில நிபுணர்கள் கூறுவதுபோல், இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் மிக முக்கியமான கட்டத்தில் நுழைவதாகத் தெரிகிறது. எனவே, மோசமான செய்திகள் வரக்கூடும் என ஒவ்வொருவரும் எச்சரிக்கையுணர்வுடன் இதை கவனிக்கிறார்கள்.

பங்குகள்
பங்குகள்

ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான உதவித் திட்டங்கள், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு போன்றவற்றைப்போல, காளையின் போக்கைத் தட்டியெழுப்ப மேலும் பல அறிவிப்புகள் வர வேண்டும். இவையனைத்துமே உதவக்கூடும் என்றாலும், விலைகளில் சீரான ஏற்றம் காணப்பட்டால்தான் பயம் விலகும்.

`தேவைக்கு மேல் கூடுதலாக நிதி வைத்திருப்பவர்கள் சந்தையில் சிறிது முதலீடு செய்யலாம்’ என்று கடந்த வாரம் சொன்னோம். அப்படிச் செய்திருந்தால் சிறிது லாபத்தை அவர்கள் ஈட்டியிருக்க முடியும்.

வர்த்தகர்களைப் பொறுத்தவரை, சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் தொடர்வதால் இது வாய்ப்பாகவும் அதேவேளையில் அச்சுறுத்தலாகவும் உள்ளது.

ஏற்ற இறக்கமான போக்கைக் கையாளத் தெரிந்தவர்கள் மட்டும் வர்த்தகத்தில் ஈடுபடலாம். மற்றவர்கள் இதை வேடிக்கை பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.டி.சி
ஐ.டி.சி

ஐ.டி.சி (ITC)

தற்போதைய விலை: ரூ.163.20

வாங்கலாம்.

இந்த நிறுவனத்தின் அடிப்படை வலுவாக இருக்கும்போதும், இதன் பங்கின் விலை ஏன் இறங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தற்போதைய நிலையில், நீண்டகால முதலீட்டுக்கு இந்தப் பங்கின் விலை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

இந்தப் பங்கின் விலை, ஏற்கெனவே 2008-ம் ஆண்டின் இறக்க விலையிலிருந்து மீண்டு 62% அதிகரித்துவந்திருக்கிறது. தற்போதைய நிலையில் மேலே ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். 12 மாத இலக்கு விலை 225 ரூபாய்.

எலன்டாஸ்
எலன்டாஸ்

எலன்டாஸ் (ELANTAS)

தற்போதைய விலை: ரூ.2,167.90

வாங்கலாம்.

இந்தப் பங்கு, கடந்த ஒரு மாத காலமாக இறக்கத்தைச் சந்தித்துவந்திருக்கிறது. 2013-ம் ஆண்டின் விலையிலிருந்து மீண்டு 50% ஏற்றம் பெற்றிருக்கிறது. தற்போதைய நிலையில் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஸ்டாப்லாஸ் ரூ.2,000 வைத்துக்கொள்ளவும். ஆறு மாத இலக்கு விலை 2,500 ரூபாய்.

ஜூபிலியன்ட் ஃபுட்
ஜூபிலியன்ட் ஃபுட்

ஜூபிலியன்ட் ஃபுட் (JUBLFOOD)

தற்போதைய விலை: ரூ.1414.15

வாங்கலாம்.

பீட்சா உணவு, அனைவருக்கும் பிடித்த உணவு. அதனால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இறக்கச் சந்தையில், பங்கின் விலை இறங்கியிருக்கிறது. மொமென்டம் இண்டிகேட்டர் இந்தப் பங்கின் விலை பெரிய பாதிப்பில் இல்லை என்பதைக் குறிக்கிறது. கூடிய விரைவில் பங்கின் விலை இறக்கம் நின்று, மேலே ஏற ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.1,400 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.1,650.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism