Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

டந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் சற்று தணிந்திருக்கிறது. சந்தையின் சரிவு கொஞ்சம் குறைந்ததுடன், ஒருநாள் விட்டு ஒருநாள் ஓரளவு ஏற்றமும் கண்டது.

சந்தையின் எந்தவொரு நிலையும் இப்படித் தடாலடியாகச் சரியும்போது அதிலிருந்து மீள்வது கடினம் என்பதால், வர்த்தகர்களுக்குப் பெருத்த சிரமங்களை உருவாக்கியது. இதன் காரணமாக, ஓப்பன் இன்டரெஸ்ட் படிப்படியாகக் குறைந்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிஃப்டியிலும், பேங்க் நிஃப்டியிலும் ஓப்பன் இன்டரெஸ்ட், முந்தைய பல மாதங்களைவிடக் குறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த வால்யூமும்கூட கணிசமாகக் குறைந்திருக்கிறது. குறைந்த வால்யூம் வர்த்தகம் காரணமாக, வர்த்தக நாளின் இடையே ஏற்ற இறக்கங்கள் கணிசமாக உருவாகி, சிறிய அளவில் கிடைத்த வாய்ப்பில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. எனவே, வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மட்டுமே சந்தையில் இருந்தனர். ஆப்ஷன்ஸ் மார்க்கெட்டில் இருந்த வர்த்தகர்களும்கூட சந்தையிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

இந்த வார முடிவில் நிஃப்டியும், பேங்க் நிஃப்டியும் வித்தியாசமாக இருந்தன. நிஃப்டி வாரம் முழுவதும் சிறிய வரம்புகளுடன் செயல்பட, பேங்க் நிஃப்டியோ பலவீனமாகச் செயல்பட்டது. கொரோனா வைரஸின் தீவிரத் தாக்குதல் மற்றும் நீண்ட ஊரடங்கு உத்தரவு போன்றவற்றால் வங்கிகளும், நிதிச் சேவை நிறுவனங்களும் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டிருப்பதால், இத்தகைய நிலை வந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலைமை சீராக, குறைந்தது இரண்டு காலாண்டுகள் ஆகக்கூடும். அதனால் நீண்டகால முதலீட்டாளர்கள் வெளியேற வாய்ப்பிருக்கிறது. கூடுதலாக, பெரிய தனியார் வங்கிகளின் அக்கவுன்ட்டுகளில் பெரும்பங்கு வகிக்கும் சாவரின் ஃபண்ட் விற்பனை தொடர்ந்து நடைபெறும். எனவே, சந்தையில் அழுத்தம் இருக்கிறது. இதே நிலை அடுத்த சில வாரங்களுக்குத் தொடரும். வங்கித்துறைப் பங்குகளின் ஏற்றம், சிறிது காலத்துக்கு விற்பனைக்கான வாய்ப்பைக் கொடுக்கும்.

பங்குகள்
பங்குகள்

பகடைக்காயை உருட்டுவதுபோல் எதுவும் நடக்கலாம் என்ற சூழலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனவே, விவேகத்துடன் நீண்டகால இலக்குகளுடன் மட்டும் முதலீடு செய்ய வேண்டும். அத்துடன் அங்கிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொடர்பான செய்திகளாலோ, வேறு செய்திகளாலோ சந்தை திடீரெனச் சரிவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

எனவே, கவனத்துடன் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நாட்கோ பார்மா (NATCOPHARM)

தற்போதைய விலை ரூ.516.50

வாங்கலாம்.

சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பார்மா நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. அதில் ஒரு பங்குதான் நாட்கோ பார்மா. இது கொரோனா வைரஸ் சிகிச்சையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதனால், முதலீட்டாளர்களை இந்தப் பங்கை வாங்க வைத்திருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக இந்தப் பங்குக்கு ஓரளவு தேவை ஏற்பட்டிருக்கிறது. பங்கின் வாரந்தர விலை சார்ட்டில் ‘குறைந்த நிழல் மெழுகுவத்திகள்’ (Lower Shadow Candles) உருவாகியிருக்கின்றன. விரைவில் விலை ஏற்றப் போக்கு உருவாகும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.490 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.600.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அப்போலோ ஹாஸ்பிட்டல் என்டர்பிரைசஸ் (APOLLOHOSP)

தற்போதைய விலை ரூ.1,189.55

வாங்கலாம்.

இறக்கத்திலிருந்து ஏற்றத்துக்குத் திரும்பிய பங்குகளில் ஒன்று அப்போலோ ஹாஸ்பிட்டல் என்டர்பிரைசஸ். இந்தப் பங்கு அதன் 2018-ம் ஆண்டின் இறக்கத்திலிருந்து 78.6% ஏற்றம் கண்டிருக்கிறது. 2008 அல்லது 2013-ம் ஆண்டுகளில் இறக்கத்திலிருந்து ஏற்றம்கண்ட பல பெரிய நிறுவனப் பங்குகள் உள்ளன. ஒப்பீட்டளவில் குறைந்த சரிவு கண்டு, அதே நேரத்தில் வேகமாக ஏற்றம் காணும் பங்காக இது இருக்கிறது. இதன் கடந்தவார வர்த்தக பேட்டர்ன், வாங்குபவர்கள் திரும்ப வந்திருப்பதைக் குறிக்கிறது. இந்தப் பங்கைத் தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,150. குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.1,300-க்கு உயரக்கூடும்.

பங்குகள்
பங்குகள்

ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் (SWSOLAR)

தற்போதைய விலை ரூ.84

வாங்கலாம்.

பங்குச் சந்தையில் ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்திலிருந்து பட்டியலிடப்பட்ட ஒரே பங்கு இது. இது மிகப்பெரிய வெற்றி பெற்றதைக் கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டனர். ரூ.800-க்கு அருகில் பட்டியலிட்டது. அதிலிருந்து ரூ.75-க்கு இறக்கம்கண்டது. தற்போது வீழ்ச்சியிலிருந்து ஏற்றம்காண ஆரம்பித்திருக்கிறது. கடன்கள் அனைத்தையும் அடைக்க நிதி திரட்டப்போவதாக இந்த நிறுவனம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து இந்த நிறுவனப் பங்குகளில் மீண்டும் முதலீடு அதிகரித்துள்ளது.தற்போதைய விலையில் மற்றும் இறக்கத்தில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.70. குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.120-க்கு அதிகரிக்கக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.