Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்த வாரம், இந்தியப் பங்குச் சந்தைக்கு நல்லபடியாக அமைந்துள்ளது.

சந்தை நகர்வில் வர்த்தகத் தொடக்கத்தில் ஏற்பட்ட மாறுதல் தொடர்ந்தபடி இருந்ததால், ஏற்ற இறக்கச் சூழலும் தொடர்ந்தது. இதனால் நிச்சயமற்ற தன்மையுடனேயே வர்த்தகம் நடைபெற்றது. விடுமுறையுடன்கூடிய வர்த்தக வாரம், இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. இன்னும் சிறிது காலத்துக்கு முழுமையான வர்த்தக வாரமே வரக்கூடும் என்பதால், வர்த்தகத்திலும் ஒரு ஒழுங்கைக் காணலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வெள்ளி அன்று வர்த்தகத் தொடக்கத்தில் சிறிதளவு விற்பனையுடன் பெரிய இடைவெளி வரவேற்றது. ஆனால், அது வெகுநேரம் நீடிக்கவில்லை. சந்தை மீண்டும் ஏற்றப்போக்குக்கு மாறியது. அந்த நாளின் இறுதியில் வலுவோடு சந்தை நிறைவுற்றதால், இந்த வாரத்தின் கேண்டில் உறுதியுடன் இருக்கிறது. இனி வரும் வாரத்தில் மேலும் சில நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

மோசமான செய்திகள் அடிக்கடி வருவதால், சந்தை இன்னும் ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கிறது.

இது முதலீட்டாளரைக் குழப்பமடையச் செய்யக்கூடும். இது ஒரு புதிர் போன்றிருந்தாலும், எது சரி என்பது சந்தைக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அதன் ஞானத்தால் பல தனிப்பட்ட பங்குகளைப்போலவே சந்தையும் உயர்ந்திருந்தால், நிச்சயமாக வேறு சில பரிசீலனைகள் நடந்துகொண்டிருப்பதாகக் கருதலாம். இந்தத் தருணத்தில் பொறுமையாக இருப்பதே சிறந்தது.

பங்குகள்
பங்குகள்

தற்போது நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியாகும் சீஸன் தொடங்கியிருக்கிறது. அது வரத் தொடங்கிவிட்டால் அதுவே சந்தையில் முக்கியத்துவம் பெறும். எனவே, கொரோனா குறித்த செய்தி கொஞ்சம் பின்வாங்கக்கூடும்.

தற்போது சந்தையின் மனநிலையை ஆக்கிரமிக்க வேறு எதுவும் இல்லை. இன்றைய சூழலில், வைரஸின் மோசமான விளைவுகளைச் சமாளிக்கக்கூடிய பங்குகள் பெரிய அளவில் வெகுமதி பெற வாய்ப்பிருக்கிறது. எனவே, அத்தகைய பங்குகளை பலரும் ஆர்வத்துடன் வாங்கக்கூடும். இன்னொருபுறம், நான்காம் காலாண்டில் சரியாகச் செயல்படாத நிறுவனங்களின் பங்குகள் விலை இறங்கக்கூடும். எனவே, காலாண்டு நிதிநிலை முடிவுகளை கவனத்துடன் பார்க்க வேண்டும். வர்த்தகத்தில் நுழைவதற்கு முன்னர் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிஃப்டியின் வார சார்ட்டில், நீண்ட கேண்டிலின் நடுப்பகுதிக்குக் கீழே நீண்ட இடைவெளியைக் காணலாம். பொதுவாக இத்தகைய இடைவெளி, மேல்நோக்கிச் செல்வதற்கு நல்லதொரு நிலையாகச் செயல்படும். தற்போது நாம் அத்தகைய நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த ஏற்றத்தால் நிஃப்டி 9500 புள்ளிகள் வரை தொடரக்கூடும். வாரத்தில் இடைப்பட்ட இறக்கங்களில், குறுகியகால இலக்குடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கக்கூடும். அதுவும் சில குறிப்பிட்ட பங்குகளில் மட்டுமே.

தேஜாஸ் நெட்வொர்க் (TEJASNET)

தற்போதைய விலை: ரூ.42.50

வாங்கலாம்.

தொழில்நுட்பத்துறையில், புதிய தலைமுறை நிறுவனம் இது. ஆனாலும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாகக் குறைந்து 31 ரூபாய் வரை இறக்கத்தைச் சந்தித்து, மீண்டும் மேலே ஏற ஆரம்பித்திருக்கிறது. பங்கின் விலை வரைபடத்தில் ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது. இது முதலீட்டாளர்கள் புதிதாக பங்குகள் வாங்க ஆரம்பித்திருப்பதைக் குறிக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இதனுடைய மொமென்டம் அதிகரித்திருக்கும் அதே நேரத்தில், வால்யூமும் அதிகரித்திருக்கிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 32 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் பங்கின் விலை 65 ரூபாய் வரை போகலாம்.

குஜராத் அல்கலி (GUJRAT ALKALI)

தற்போதைய விலை: ரூ.327.00

வாங்கலாம்.

பங்குச் சந்தை ஏற்றத்துடன், கூடவே ஏறிய பங்குகளில் இதுவும் ஒன்று. பங்கின் விலை வரைபடத்தில் கொடி வடிவத்தில் ஒரு பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இது பங்கின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதை உணர்த்துகிறது.

பங்குகள்
பங்குகள்

இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பிரேக்அவுட்-ஆகி இறக்கத்திலிருந்து ஏற்றத்துக்கு வந்திருக்கிறது. ஏற்றம் தொடர்ந்து அதிகரித்தால், பங்கின் விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் 315 ரூபாய். இலக்கு விலை 375 ரூபாய் வைத்துக்கொள்ளவும்.

ஈக்விட்டாஸ் ஹோல்டிங்ஸ் (EQUITAS)

தற்போதைய விலை: ரூ.50.95

வாங்கலாம்.

நிதிச் சேவை நிறுவனங்களின் பங்குகளுக்கு கடந்த வாரத்தில் நல்ல ஆதரவுநிலை இருந்தது. இந்த வாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரத்தில் பிரேக்-அவுட் ஆகியிருக்கிறது. பங்கின் விலையானது 125 ரூபாய் வரை சென்று, அதன் பிறகு மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. நீண்ட நாள்களாக, இறக்க நிலையிலேயே வர்த்தகமாகி, தற்போது ஏற்றத்தின் போக்குக்கு திரும்பியிருக்கிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 45 ரூபாய். இலக்கு விலை 75 ரூபாய்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.