Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

வாராந்தர சார்ட்டுகளில் கேண்டில் பேட்டர்ன்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் தற்போது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

வாராந்தர சார்ட்டுகளில் கேண்டில் பேட்டர்ன்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் தற்போது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்தியப் பங்குச் சந்தையின் வர்த்தகம் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சற்று மோசமாக ஆரம்பித்தாலும், விரைவாக அதிலிருந்து மீண்டு, காளையின் போக்கு வந்து சேர்ந்தது. அந்த மாற்றம் சந்தையை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

இந்த ஏற்றத்துக்குப் பல காரணிகள் தினசரி சுழற்சி அடிப்படையில் உதவியிருக்கின்றன. வங்கித்துறையின் செயல்பாடு பெரிய அளவில் இல்லை என்றாலும், மெட்டல், பார்மா மற்றும் ஆட்டோ பங்குகளைவிட நன்றாகச் செயல்பட்டு, சந்தையை ஏற்றத்தின் போக்கில் நிலைநிறுத்தியிருக்கிறது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களும் கடந்த வாரத்தில் அதிக அளவில் பங்குகளை வாங்குபவர்களாக இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து சந்தையில் பாசிட்டிவான சென்டிமென்ட்டை ஏற்படுத்தியிருக்கின்றன.

இன்று, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. எனவே, பெரிய அளவில் இது பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, இது குறித்து முன்பே பெரிய எதிர்பார்ப்பு இல்லாததும் ஒரு காரணம். மேலும், வங்கி மற்றும் நிதித்துறை இன்னும் கடுமையான சூழலை எதிர்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது, தற்போதைய சந்தைச் சூழல் குறித்து நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது.

பங்குகள்
பங்குகள்

நிஃப்டியில் தற்போது ஏற்பட்டுள்ள ஏற்றம், அதை 78.6 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. இது ரீட்ரேஸ்மென்ட் நகர்வில் குறிப்பிடத்தக்க மற்றும் அதிகபட்ச நகர்வு. இதைத் தாண்டி இந்த நகர்வு தொடர்ந்தால், `கரெக்‌டிவ் புல்பேக்’ என்று குறிப்பிடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். எனவே, வாராந்தர சார்ட்டுகளில் கேண்டில் பேட்டர்ன்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும், தற்போது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் 60 என்ற நிலையை எட்டியிருப்பதும் எச்சரிக்கைக்கான அறிகுறி. ஏனெனில், இது கரெக்டிவ் நகர்வுக்கான உச்சநிலையாகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பங்குகள்
பங்குகள்

மேலும், ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளைப் பொறுத்தவரை, தற்போது பணம் பார்ப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்கலாம். வரும் சில நாள்கள் இந்தப் பங்குகளில் ஏற்றமானது லாபத்தைத் தருவதாக இருக்கலாம். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதையெல்லாம் தாண்டி உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சில குறிப்பிட்ட பங்குகளில் லாங் பொசிஷன்களைத் தொடர்ந்து வைத்திருக்க விரும்பினால் வைத்திருக்கலாம். ஆனால், அவற்றைப் பாதுகாப்புடன் மேற்கொள்வது நல்லது.

எஸ்.ஹெச்.கெல்கர் கம்பெனி (SHK)

தற்போதைய விலை ரூ.81.85.

வாங்கலாம்.

இந்த நிறுவனம், துறையின் முன்னணி நிறுவனமாக இருந்ததால் பட்டியலாகும்போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பங்கின் விலை பல ஆண்டுகள் இறக்கத்திலேயே இருந்து பெருத்த ஏமாற்றம் அளித்தது. தற்போது பிரச்னைகள் முடிவுக்கு வந்து, பங்கின் விலை ஏற்றத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. பங்கு விலை ரூ.100 வரை உயரலாம். ரூ.72 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பாலாஜி டெலிஃபிலிம்ஸ் (BALAJITELE)

தற்போதைய விலை ரூ.92.55.

வாங்கலாம்.

இந்தப் பங்கின் விலை பல மாதங்களாகவே இறக்கத்தைச் சந்தித்துவந்தது. விலை அதன் உச்ச விலை ரூ.190-லிருந்து ரூ.30 என்ற நிலைக்கு இறங்கியது. தற்போது இந்தப் பங்கின் நகர்வு இறக்கத்திலிருந்து மீண்டு ரூ.90 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. மேலும், தொடர்ந்து ஏற்றம் அடைவதற்கான சாத்தியங்களுடன் இதன் அடுத்த உடனடி ரீட்ரேஸ்மென்ட் ரெசிஸ்டன்ஸ் ரூ.110 என்ற நிலையில் உள்ளது. குறுகியகால முதலீட்டுக்கு ஏற்ற பங்காக உள்ளது. ரூ.80 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் (SWSOLAR)

தற்போதைய விலை ரூ.238.25.

வாங்கலாம்.

தற்போதைய உச்ச நிலையில் இந்தப் பங்கில் ஒரு கன்சாலிடேஷன் உண்டாகியிருக்கிறது. இந்த கன்சாலிடேஷனிலிருந்து எழுந்து ஏற்றம் அடையவும் தயாராக இருக்கிறது. இந்தப் பங்கு அடுத்தடுத்த ஏற்றங்களை அடையலாம் என்பதால், லாங் பொசிஷன்கள் எடுக்கலாம். பங்கின் விலை ரூ.285 வரை உயர சாத்தியம் உள்ளது. ரூ.212 ஸ்டாப்லாஸுடன் லாங் பொசிஷன்களை எடுக்கலாம். ஏற்கெனவே வைத்திருப்பவர்களும் ஸ்டாப்லாஸ் நிலையை மாற்றிக்கொண்டு புதிய இலக்கை எதிர்பார்க்கலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

எஃப் & ஓ
எஃப் & ஓ

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/3idt03J